Saturday, 18 March 2023

தஞ்சாவூர் மாவட்டம் , பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் - சேனைத்தலைவர் இனத்தின் குல தெய்வம்

 #பட்டுக்கோட்டை #சேனைத்தலைவர் இனத்தின் குல தெய்வம் .

#தஞ்சாவூர் மாவட்டம் , #பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் 

தென் தமிழகத்திற்கு மதுரை மீனாட்சி போல் தஞ்சாவூர் பகுதிக்கு #பட்டுகோட்டை #நாடியம்மன் தேர் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும் .

பல நூறு வருடங்களுக்கு முன்பு இக்கோவிலின் வரலாறு #சேனைத்தலைவர் சமுதாயத்தில் இருந்து தொடங்கி உள்ளது .

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அக்காலத்தில்  பட்டுக்கோட்டையில் சிறந்த பக்திமானாகவும், செல்வந்தராகவும் விளங்கிய சேனைத்தலைவர் சமூகத்தை சார்ந்த #சின்னான் செட்டியாரால் என்பவரிடம் அம்பாளுக்கு கோவில் கட்டும் பொறுப்பை அரசர் ஒப்படைத்தார் மேலும் அக்கோவிலின் நிர்வாகம் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது .

செட்டியார் (சேனைத்தலைவர் ) தெருவில்  அம்மன் தோன்றியதால் 12 நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழாவில் 6 ஆம் நாள் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் நாடியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி #செட்டியார் (சேனைத்தலைவர் ) தெருவில் சேனைத்தலைவர் சமுதாய மடத்தில்  #வரகரிசி மாலை போடும் விழா வெகு  விமரிசையாக நூற்றாண்டுகளை கடந்து  இன்றளவும் கொண்டாடபடுகிறது .

அக்காலத்தில் அன்னை ஸ்ரீ நாடியம்மனுக்கு நித்தியபடி பூசைகளும் ,விழாக்களும் கொண்டாடும் பொறுப்பையும் , ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் #சின்னான்செட்டியார் அவர்களுக்கு மன்னர் ஆணையிட்டுள்ளார் ,  #சின்னான்செட்டியார் அவர்களின் முயற்சியில் நாடியம்மன் ஐம்பொன் சிலையாக வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது .

ஒவ்வொரு ஆண்டு பங்குனி மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அன்று கோட்டை ஸ்ரீ நாடியம்மனின் உற்சவ மூர்த்திக்கு #சின்னான்செட்டியார் வம்சத்தை சார்ந்த வம்சாவளிகளால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும் .மேலும் சுள்ளு செட்டியார் குடும்பத்தினரால் மரிக்கொழுந்து மாலை சாற்றப்படும் .

இந்நிகழ்வுகள் பல நூற்றாண்டுகளாக இக்குடும்பத்தினரால் தொடரப்பட்டு இன்றளவும் தொடர்ந்து கொண்டு உள்ளது .

மேலும் காப்பு கட்டும் நிகழ்வில் அம்மன் , #பூசாரி , #சேனைத்தலைவர் செட்டியார் , #அம்பலகாரர் மற்றும் #அரிஜன சமூகத்தை சார்ந்தவர்களுக்கு காப்பு கட்டப்படும் , அன்னை ஸ்ரீ நாடியம்மன் முன் அனைவரும் சமம் உயர்வு தாழ்வு இல்லை என்கிற சமத்துவ நெறிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது , கோவிலுள்ளேயே காப்பு கட்டப்பட்ட நான்கு சமூகத்தை சேர்ந்தவர்களும் எட்டு நாட்கள் தங்கி விரதம் கொள்ள வேண்டும் .

எட்டாம் நாள் நடு செவ்வாய் திருவிழாவை சேனைத்தலைவர் செட்டியார் பெருமக்கள் மிகவும் விமர்சையாக கொண்டாடுவர் அன்றிரவு சாமி கும்பிடும் பொழுது சுள்ளுகறி , குழம்பு , கொழுக்கட்டைஉடன் கோவிலுக்கு சேனைதலைவர் சமூகத்தை சார்ந்தவர்கள் குடும்பகமாக சென்று படையல் இடுவார்கள் ( சுள்ளு செட்டியார் குடும்பத்தால் படையலுக்கு  தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டதால் சுள்ளுகறி என்றழைக்கப்படுகிறது 

அன்னை ஸ்ரீ நாடியம்மன் அறங்காவலர்களாவும் , குழு தலைவர்களாவும் சேனைத்தலைவர் சமூகத்தை சார்ந்தவர்களே அன்றிலும் இன்றிலும் உள்ளனர் 

2022 வருடம் நடைபெற்ற கும்பாவிஷேகம் அன்று 40 இலட்சம் செலவில் மகா மண்டபம் புதுப்பிக்கப்பட்டு , தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட புதிய கதவுகள் , சுவரின் மேல் சலவை கல் , மகா மண்டபம் மற்றும் தூண்களுக்கு பித்தளை கவசம் பதிக்கப்பட்டு , உள் வேலி அமைக்கப்பட்டு இவை அனைத்தும் சேனைத்தலைவர் சமூகத்தினால் முறையாக அமைக்கட்டுள்ளது .

சோழர்களின் பூர்விக #போர்குடி இனமான சேனைத்தலைவர் இனம் இன்றும் சோழர்களின் பூமியில் பெருவாரியாக வாழ்ந்து கொண்டு உள்ளது .

🔰#வாழ்க சேனைத்தலைவர் குலம்🙏🙏🙏🔰🔰

🔰வளர்க #சேனைத்தலைவர் ஒற்றுமை🔰🔰

🔰🔰#அசுரனை அழித்த வம்சம் சேவல்கொடி காத்த வம்சம் சேனைத்தலைவர் வம்சம் 🔰🔰
















சேனைத்தலைவர் #பிள்ளை

சேனைத்தலைவர் #வேளாளர்

சேனைத் தலைவர் #மூப்பனார்

சேனைத்தலைவர் #இலைவாணியன் 

சேனைத்தலைவர் #முதலியார்

சேனைத்தலைவர் #செட்டியார்

என்றும் சமுதாய பணியில்

சுந்தர சேனைத்தலைவர்  - 9944253204

சேனைத்தலைவர் மீடியா 2.0


Youtube சேனல் : https://www.youtube.com/channel/UCQP1ooovnVO-c7HgX2yW_tw


#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் 

#senaithalaivar #senaiyar




ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...