ஹொய்சள ஆட்சியாண்டு வீர நரசிம்மன் மன்னவன் காலத்தில் நம் குல சேனைத்தலைவரான மாவீரன் என்பான் திருவண்ணாமலையில் நடந்த போரில் என்பது வயதான மன்னரை காப்பதற்காக போராடி வீரமரணம் எய்தினான் .ஒரு லட்சம் காலாட்படையும் , ஐநூறு யானைப்படையும் எதிர்த்து நின்ற போர்க்களத்தில் என்பது வயதான வீர நரசிம்ம மன்னரை கொல்ல பல சூழ்ச்சிகள்
நிகழ்ந்தன . வீர நரசிம்மரின் படை வீரர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர்.இராஜபக்தியின் சிகரமாக போராடி , வீர மரணம் எய்திய நம் குல மாவீரன் என்பவருக்கு நன்றி செலுத்துவதற்காக இரண்டாம் வீர நரசிம்மன் என்ற போசள மன்னர் பிற்காலத்தில் விஜயநகரம் மன்னன் மான்யமும் திருக்கோவில்களில் பரணி தீபம் ஏற்றும் உரிமையை சிறப்பாக
நடத்தி வரும்படி அளிக்கப்பட்டது .
இம்மாவீரன் நிகழ்ச்சி ஹொய்சள மன்னர் வீர நரசிம்மனுக்கும் . மாலிக்காபூருக்கும் நடந்தது என திருவண்ணாமலை திருமட அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளது .மாலிக்கபூர் ஆண்டு கி.பி .1297
இப்பட்டயம் தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் உள்ளது .
பரணி தீபம் கட்டளை என்ற பெயரில் கடந்த 700 வருடங்களாக
திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றும் உரிமையை சேனைத்தலைவர் இனம் ஏற்று நடத்தி கொண்டு வருகிறது .
இணைத்துள்ள படம் 09-12-2019 அன்று பரணி தீபம் கட்டளை இன் படி பரணி தீபம் ஏற்ற சென்ற சேனைத்தலைவர்கள்
பரணி தீப கட்டளை என்பது கைலாய வாகன திருவிழாவும் , கார்த்திகை தீபத்தன்று அதிகாலை நான்கு மணிக்கு அபிஷேக ஆராதனைகள் முடித்து பஞ்ச மூர்த்திகளுக்கு காட்டப்படும் அகன்ற அகண்டத்தில் எரியும் பரணி தீபம் ஆகும் , பரணி தீபம் மலை மேல் ஏற்றப்படும் மகா தீபத்துக்கு முன்னோடி .
மேல் செங்கம், மேல் பள்ளிப்பட்டு, மணலூர்பேட்டை, சித்தபட்டினம், திருவண்ணாமலை, பேராம்பட்டு, கரியமங்கலம் ஆகிய ஏழு ஊர்களை சேர்ந்த நம் சேனைத்தலைவர் சமுதாய பெருமக்கள் ஆண்டு தோறும் பரணி தீப கட்டளை வரிசை கைங்கர்யத்தை செய்து வருகிறார்கள். உற்சவம் நடைபெறும் பத்து நாட்களும் பல ஊர்களில் இருந்து வரும் நம் சமுதாய பெருமக்கள் திருவூடல் வீதியில் உள்ள சத்திரத்தில் தங்கவும், உணவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
வரும் சமுதாய பெருமக்கள் தாங்கள் அளிக்கும் பொருளுதவி ஏற்றுக்கொள்ளப் படுகிறது.
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம் .
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு.
முருக பெருமானின் படைத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி இனம், கொடிக்கால் பிள்ளைமார்,கொடிக்கால் மூப்பனார் இனம்,சேனை பெரு வணிகம் செய்த சேனையங்காடிகள் இனம்,சோழர், பாண்டியர்களால் இலைவாணிய வரி விலக்கு கொடுக்கப்பட்ட சேனை குடி இனம் ,சோழர்களின் போர் குடியாம் “மூன்று கைமா சேனையார்” இனம் .சோழர்கள் காலத்தில் சேனை பெரு வணிகம் செய்ததால் சேனை கொண்ட செட்டியார்,சேனை செட்டியார் என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட தமிழ் மூத்த குடி மக்கள்,தொழில் முறையில் சேனை முதலியார் என்று அழைக்கப்பட்ட என் குல சேனை முதலி மக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்
ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...
-
மதுரை ,தேனி , போடி பகுதிகளில் பிள்ளை என்ற பட்டத்துடன் வாழும் சேனைத்தலைவர் இன மக்களுக்கு அனைத்திந்திய முதலியார் மற்றும் பிள்ளைமார் என்ற அம...
-
சேனைத்தலைவர் Jump to navigation Jump to search சேனைத்தலைவர் வகைப்பாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குல தெய்வம் (ஆண்) முருகன் ...
-
கொடிக்கால் பிள்ளைமார் - சேனைத்தலைவர் - வெற்றிலை வணிகர்கள். ------------------------------------------------------------------------------...
-
பாண்டிய நாட்டில் சேனையார் இன மக்கள் வெற்றிலை கொடிக்கால் பயி ரி டுகின்றனர்.இவர்களின் இன பிரிவுகள் 1 . கொடிக்கால் பிள்ளைமார் 2 . கொடிக்கால...
-
வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அணியும் தாலி முறை - வருடம் 1800 தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் ) - பாகம் 4 —————————————————————— ...
-
ஹொய்சள ஆட்சியாண்டு வீர நரசிம்மன் மன்னவன் காலத்தில் நம் குல சேனைத்தலைவரான மாவீரன் என்பான் திருவண்ணாமலையில் நடந்த போரில் என்பது வயதான ம...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சேனைத்தலைவர் புதுக்கோட்டை சமஸ்தானம் - 1934 வருடம் - பாகம் 1 —————————————————————— சேனைத்தலைவர் சாதி அடிம...
-
#சேனைத்தலைவர் களின் #கொடிக்கால் வேளாண்மை கொடி , குயில் கொடி , அது அக்காலத்தில் கொடிக்கால் வேளாளர்களின் கொடி யாக இருந்து வந்துள்ளது .இதில் ...
வணக்கம்
ReplyDeleteநமது திருவண்ணாமலை உள்ள சேனைத்தலைவர் பரணி தீப கட்டளைத்தார் சமூகமும் நெ. 50,51 பெரிய தெரு திருவண்ணாமலை இந்த முகவரி உள்ள மடத்தில் தான் ஆண்டுதோறும் பரணி தீபம் தட்டுவரிசை எடுத்து செல்லப்படுகிறது நீங்கள் குறிப்பிட்டுள்ள முகவரி தவறானது. குறிப்பு :- நீங்கள் போட்டுள்ள புகைப்படத்தில்
ReplyDeleteஎடுத்து செல்லும் முகவரியை அறியாலம்
என் பெயர் சிவ.G. அசோக் நீங்கள் குறிப்பிட்டுள்ள பரணி தீப செய்தியில் ஒரு தவறு உள்ளது பரணி தீப கட்டளை தார் 500 தலை கட்டு சேனைத் தலைவர் மடத்தால் நடத்தப்படு ம்நிகழ்ச்சி ஆனால் திருவண்ணாமலையில் இரண்டு மடங்கள் உள்ளன 1.5 00 தலை கட்டு சேனைத் தலைவர் மடம்
ReplyDelete2 பொது புராதீன சேணைத் தலைவர் மடம்
500 தலை கட்டுமடம்
தர்மபுரி, சேலம் கிருஸ்னகிரி வேலு nர் oற்றும் பிற மாவிட்ட மக்களால் நடத்தப்படுகிறது
பொது புராதி ன மடம்
மேல் செங்கம், Uள்ளிப்பட்டு மனலூர்பேட்டை பேராம்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 7 ஊர் சமுகத்தால் நடத்தப்படுவது
நீங்கள் காட்டி உள்ள படம் 500 தலை கட்டுமடத்தது டையது
அந்த மாவீரன் பெயர் என்ன வென்று தெரிவிக்கவில்லை
ReplyDelete