Wednesday, 11 December 2019

மங்கள்யான் கதாநாயகன் - திரு.அருணன் சுப்பையா சேனைத்தலைவர்.

சேனைத்தலைவர் என்பதில் பெருமை கொள்வோம்

மங்கள்யான் கதாநாயகன் - திரு.அருணன் சுப்பையா சேனைத்தலைவர்.

மங்கள்யான் - திட்ட இயக்குனர்

ஒன்பதாம் வகுப்பு பாடபுத்தகத்தில் நம் சேனைத்தலைவர் சமுதாயத்தை சேர்ந்த விண்வெளி ஆராட்சியாளர்.

திரு.அருணன் சுப்பையா அவர்களை பற்றி

செவ்வாய்க் கிரகத்தை ஆராய, விண்ணில் ஏவப்பட்டுள்ள "மங்கள்யான்' செயற்கைகோள் பணியின், திட்ட இயக்குநராக நெல்லையை சேர்ந்த விஞ்ஞானி சுப்பையா அருணன் பணியாற்றியுள்ளது, சேனைத்தலைவர் மக்களுக்கு பெருமையாக உள்ளது.

"மங்கள்யான்' செயற்கைகோள் தயாரிப்பில், முக்கிய பங்காற்றியவர் சுப்பையா அருணன்,55. இவர், நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பையா மூப்பனார் , ஏர்வாடி, வள்ளியூர், கூடங்குளம் பள்ளிகளில் தலைமையாசிரியராக பணியாற்றியுள்ளார். இவரது தாயார் மாணிக்கம் அம்மாள்.அருணன், திருக்குறுங்குடி பள்ளியிலும், பாளையங்கோட்டை சேவியர் பள்ளியில் பயின்றுள்ளார். பின்னர், கோவை கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1984 ல் திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியை துவக்கினார். தற்போது, பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் பணிபுரிகிறார்.

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இன் குறிக்கோள் நமது இனத்தின் ஒவ்வொருத்தரையும் ஐயா போல் கல்வியில் சிறந்து விளங்கவும் , நாட்டுக்காகவும் தம் இனத்துக்காகவும் தம் கடமையை செய்தவற்கு அவர்களை ஊக்கப்படுத்தி சென்று கொண்டிருக்கிறது .பல இன்னல்களை கடந்து வீரபாகு சேனைத்தலைவர் ஆசியுடன் நினைத்ததை நோக்கி சென்று கொண்டிருக்கோம் .

இன்னும் ஐந்து வருடங்களில் 5 IAS / IPS சேனைத்தலைவர் இன மக்களை ஐ, வீரபாகு பேரவை மூலம் உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் உழைத்து கொண்டிருக்கிறோம் .அதை நோக்கி நம் பேரவை பயணித்து கொண்டிருக்கிறது .இடைப்பட்ட காலங்களில் சேனைத்தலைவர் வரலாறுகளை தேடும் பணிகளும் தொடரும்

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம் .
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு.


திருவண்ணாமலை பரணி தீபம் கட்டளை - சேனைத்தலைவர் வம்சத்தின் உரிமை

ஹொய்சள ஆட்சியாண்டு வீர நரசிம்மன் மன்னவன் காலத்தில் நம் குல சேனைத்தலைவரான மாவீரன் என்பான் திருவண்ணாமலையில் நடந்த போரில் என்பது வயதான மன்னரை காப்பதற்காக போராடி வீரமரணம் எய்தினான் .ஒரு லட்சம் காலாட்படையும் , ஐநூறு யானைப்படையும் எதிர்த்து நின்ற போர்க்களத்தில் என்பது வயதான வீர நரசிம்ம மன்னரை கொல்ல பல சூழ்ச்சிகள் நிகழ்ந்தன . வீர நரசிம்மரின் படை வீரர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர்.இராஜபக்தியின் சிகரமாக போராடி , வீர மரணம் எய்திய நம் குல மாவீரன் என்பவருக்கு நன்றி செலுத்துவதற்காக இரண்டாம் வீர நரசிம்மன் என்ற போசள மன்னர் பிற்காலத்தில் விஜயநகரம் மன்னன் மான்யமும் திருக்கோவில்களில் பரணி தீபம் ஏற்றும் உரிமையை சிறப்பாக நடத்தி வரும்படி அளிக்கப்பட்டது . இம்மாவீரன் நிகழ்ச்சி ஹொய்சள மன்னர் வீர நரசிம்மனுக்கும் . மாலிக்காபூருக்கும் நடந்தது என திருவண்ணாமலை திருமட அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளது .மாலிக்கபூர் ஆண்டு கி.பி .1297 இப்பட்டயம் தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் உள்ளது . பரணி தீபம் கட்டளை என்ற பெயரில் கடந்த 700 வருடங்களாக திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றும் உரிமையை சேனைத்தலைவர் இனம் ஏற்று நடத்தி கொண்டு வருகிறது . இணைத்துள்ள படம் 09-12-2019 அன்று பரணி தீபம் கட்டளை இன் படி பரணி தீபம் ஏற்ற சென்ற சேனைத்தலைவர்கள் பரணி தீப கட்டளை என்பது கைலாய வாகன திருவிழாவும் , கார்த்திகை தீபத்தன்று அதிகாலை நான்கு மணிக்கு அபிஷேக ஆராதனைகள் முடித்து பஞ்ச மூர்த்திகளுக்கு காட்டப்படும் அகன்ற அகண்டத்தில் எரியும் பரணி தீபம் ஆகும் , பரணி தீபம் மலை மேல் ஏற்றப்படும் மகா தீபத்துக்கு முன்னோடி . மேல் செங்கம், மேல் பள்ளிப்பட்டு, மணலூர்பேட்டை, சித்தபட்டினம், திருவண்ணாமலை, பேராம்பட்டு, கரியமங்கலம் ஆகிய ஏழு ஊர்களை சேர்ந்த நம் சேனைத்தலைவர் சமுதாய பெருமக்கள் ஆண்டு தோறும் பரணி தீப கட்டளை வரிசை கைங்கர்யத்தை செய்து வருகிறார்கள். உற்சவம் நடைபெறும் பத்து நாட்களும் பல ஊர்களில் இருந்து வரும் நம் சமுதாய பெருமக்கள் திருவூடல் வீதியில் உள்ள சத்திரத்தில் தங்கவும், உணவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. வரும் சமுதாய பெருமக்கள் தாங்கள் அளிக்கும் பொருளுதவி ஏற்றுக்கொள்ளப் படுகிறது. தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம் . சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு.



Saturday, 7 December 2019

கல்வெட்டுகளில் சேனைத்தலைவர்

சங்க காலங்களில் இருந்து நாயக்கர் காலம் வரை சேனைத்தலைவர் பல்வேறு கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர்.அவைகள் 
மூன்று கைமா சேனை யார்
சேனையார்
சேனைக்கடையார்
சேனைக்குடையார்
சேனையங்காடிகள்
சேனை கொண்ட செட்டியார்
சேனை வாணிகன்
இலைவாணிய பாட்டம்
( இலைவாணிய பாட்டம் - வெற்றிலை வேளாண்மை செய்த சேனையார் அல்லது சேனையங்காடிகள் என்ற இன மக்களுக்கு மட்டும் சோழர் ,பாண்டிய காலங்களில் உள்ள வரியின் பெயர் )
சேனைத்தலைவர் ஆதி காலத்தில் இருந்து வாழ்ந்த தமிழ் மற குடி , வணிக குடி , வேளாண்மை குடியாகும்.

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம் .
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு.
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை




Tuesday, 26 November 2019

சேனைத்தலைவர் - Wikipedia

சேனைத்தலைவர்

Jump to navigationJump to search
சேனைத்தலைவர்
வகைப்பாடுபிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
குல தெய்வம் (ஆண்)முருகன்
மதங்கள்இந்து
மொழிகள்தமிழ்
பரவலாக வாழும் மாநிலங்கள்தமிழகம்,புதுச்சேரி மற்றும் கேரளா
தொடர்புடைய குழுக்கள்வெள்ளாளர்
Notes
குல தொழில் : கொடிக்கால் வெற்றிலை சாகுபடி மற்றும் வணிகம்
சேனைத்தலைவர் (Senaithalaivar
(சேனைக்குடையார்,சேனையார் ,சேனைமுதலியார்,சேனைக்குடியர்,கொடிக்கால் பிள்ளைமார் மற்றும் இலைவாணியர் என்றும் அழைக்கப்படுகின்றனர்)[1] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் மத்திய மற்றும் தென் தமிழகத்தில் அதிகளவில் வசிக்கின்றனர்.இவர்கள் சேனையார் என்ற அடைமொழியுடன் குறிக்கப்பட்டாலும் சில பகுதிகளில் வாழ்ந்த இச்சமூக மக்கள் முதலியார்செட்டியார்மூப்பனார்,கொடிக்கால் பிள்ளைமார்,கொடிக்கால் மூப்பனார் மற்றும் பிள்ளை என்று வேறுபட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்டனர்.[2] இவர்கள் தற்போது திருநெல்வேலி ,தூத்துக்குடி ,தென்மலை, இராமநாதபுரம் ,மதுரை ,தேனி,விருதுநகர் , சேலம் , காஞ்சிபுரம் , வேலூர் , ஆரணி,தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ,சேலம் ,நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை,கும்பகோணம், போன்ற பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் . வட தமிழகத்தில் திருவண்ணாமலை (மேல்பள்ளிப்பட்டு), தருமபுரி (கடத்தூர்) ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக உள்ளனர்.மதுரை , தேனி , போடிநாயக்கனுர்,ராமநாதபுரம்  பகுதிகளில் இவர்களை கொடிக்கால் பிள்ளைமார் என்றும் ,தர்மபுரி , புதுக்கோட்டை  மற்றும்  பாண்டிச்சேரி பகுதிகளில் செட்டியார் என்றும்.திருநெல்வேலி ,கன்னியாகுமரி பகுதிகளில் கொடிக்கால் மூப்பனார் என்றும் அழைக்கப்படுகின்றனர் .[3] [4]

பொருளடக்கம்

தோற்றம்[மூலத்தைத் தொகு]

சேனைத்தலைவர் தங்களை அறுபடை கடவுள் முருகனின் படை தலைவனான வீரபாகு வின் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றனர் . சேனைக்கு வீரபாகு தலைமை தாங்கி நடத்தியதால் சேனைத்தலைவர் என்ற பட்டத்தையும், பரிசு பொருளாக வேலில் இருந்து கிள்ளிக் கொடுத்த இலைக் கொடியையும் பெற்றனர் .இதுவே சேனையார் இனத்தவர்களால் பயிரடப்பட்டு வந்த வெற்றிலையாகும்.[5]

வரலாறு[மூலத்தைத் தொகு]

சேனைத்தலைவர் ஆதி காலத்தில் இருந்து வாழ்ந்த தமிழ் மற குடி , வணிக குடி , வேளாண்மை குடியாகும்.சேனைத்தலைவர் படைத்தலைவர்களாவும், நிலச்சுவான்தார்களாகவும் ,பண்ணையார்களாகவும்,கொடிக்கால்  வெற்றிலை வேளாண்மை செய்த இனமாகவும் , வெற்றிலை வணிகர்களாகவும் இருந்துள்ளனர் . இவர்களின் குல தொழில் கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை மற்றும் வெற்றிலை வணிகம் செய்வதாகவும் இருந்தது .சோழர் காலத்தில் பெரும் வணிகர்களாகவும் ,நானாதேசிகர் வணிக குழுவில் ஒரு குழுவாகவும் இருந்துள்ளனர் . 2 ஆம் நூற்றாண்டில் அஞ்சான் புகலிடத்தின் பாதுகாவலர்களாக இருந்துள்ளனர்(துளு நாட்டு கல்வெட்டு).பாண்டியர் காலத்தில் இவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது .
வெற்றிலை கொடிக்கால் பயிரிடுவது என்பது சிரமமான வேலையாகும் .இதை கவனமாகவும் , நுட்பமாகவும் செய்ய வல்லவர்கள் தமிழ்நாட்டு இவர்கள் ஒருவரே .வெற்றிலை பயிருடுவதியே பரம்பரை பரம்பரையாக செய்து வந்த இனத்தார் இன்னும் தமிழ்நாட்டில் இன்றளவும் தமிழ்நாட்டில் அத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .மதுரை மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொடிக்கால் பிள்ளைமார் என்று அழைக்க பட்டு வருகின்றனர் .திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொடிக்கால் மூப்பனார் என்று அழைக்க பட்டு வருகின்றனர் .
சேனைத்தலைவர் வணிகர்கள் அக்காலத்தில் செட்டியார் என்றே அழைக்கப்பட்டனர். தரங்கம்பாடி ஓலை ஆவணங்களில் இருந்து ஒப்பந்த கூலிகளை பராமரித்து பண்ணையம் செய்த நிலச்சுவான்தார்கள் செட்டியார் என்ற சாதி பட்டம் புனையும் இலைவாணியர் ( சேனைக்குடையார் )இனத்தவராவார் .வெற்றிலை கொடிக்கால் பயிர் இடுவோராக அறியப்படும் இவ்வினத்தவர்கள் , சேனையங்காடியார் என்றும் சேனைக் குடியுடையார் அல்லது சேனைக் குடையார் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றனர்.[6]
இவர்கள் தமிழகத்தின் பூர்வ குடிகளில் ஒரு குடியாக இன்று வரை உள்ளனர் .
சேனைக்கடையார் ,
சேனையார்,
சேனைக்குடையார்,
இலைவாணியர் ,
சேனைத்தலைவர் ,
சேனை கொண்ட செட்டியார் ,
சேனை அங்காடிகள், [7]
கோயில் அங்காடிகள்,
சேனை வாணிகன் ,[8]
சேனைக் குடியன் (வெற்றிலைக் கொடிக்கால் வைத்து வெற்றிலை வணிகம் செய்பவர்கள்)[9],
சங்க காலங்களில் இருந்து இவ்வினத்தின் பெயர்கள் "சேனை" என்ற அடைமொழியுடன் அவர்கள் அக்காலங்களில் செய்யும் தொழிலுக்கு ஏற்ப சேனைக்கடையார்,சேனையார்,சேனை வாணிகன்,சேனைக் குடியன்,சேனை கொண்ட செட்டியார்,சேனை அங்காடிகள்,கோயில் அங்காடிகள்,சேனைக்குடையார்,இலைவாணியர்,சேனைத்தலைவர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளனர் .
படைத்தலைவர்களாகவும்,வணிகர்களின் பாதுகாவலர்களாகவும் ,கோயில்களின் பாதுகாவலர்களாகவும் , அஞ்சான் புகலிடத்தின் பாதுகாவலர்களாகவும் ,சேனை வீரர்களாகவும் ,வணிகர்களாகவும் ,கொடிக்கால் சாகுபடி செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளதால் "சேனை" என்ற அடைமொழியை சங்க காலத்தில் இருந்து தங்கள் இனத்தின் அடையாளமாக சேர்த்து கொண்டு , வீரமிக்க மற குழுவாக "சேனை" என்ற அடைமொழியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.[10] [11]

இலைவாணியர்[மூலத்தைத் தொகு]

இலைவாணிய பாட்டம் இது சோழர்களால் கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை செய்வதற்கும் மற்றும் கொடிக்கால் வெற்றிலை வணிகம் செய்வதற்கும் கொண்டு வரப்பட்ட வரியாகும்.இவ்வரி சேனைத்தலைவர் இனத்திற்கு மட்டுமே சோழர் காலங்களிலும் , அதற்க்கு பின் பாண்டிய ,நாயக்கர் காலங்களிலும் இருந்துள்ளது .இதனால் இவர்கள் இலைவாணியர் என்று இன்றும் வரையும்  அழைக்கப்படுகின்றனர் .[12]

பட்டங்கள்[மூலத்தைத் தொகு]

சேனைத்தலைவர் இன பட்டங்கள்
  1. மூப்பனார்
  2. பிள்ளை
  3. முதலியார்
  4. செட்டியார்
  5. கொடிக்கால் பிள்ளைமார்
  6. கொடிக்கால் மூப்பனார்
  7. இலைவாணியர்

அருட்கவி அழகு முத்துப் புலவர்[மூலத்தைத் தொகு]

நாகை நீலா வடக்கு வீதியில் சேனைக்குடையார் மரபினை சேர்ந்த அம்பலவாணச் செட்டியாரும் அவர்தம் மனைவி சிவகாமசுந்தரி அம்மையாரும் செய்த அருந்தவப் பயனாய் புத்திரராகப் பிறந்தவர் அழகுமுத்து புலவர் .இவரை தொழுநோய் வாட்டியதால் உறவினர்களால் கைவிடப்பட்டார் .அழகுமுத்து அவர்கள் நாகைக் குமரன் கோயில் மெய்க்காவலராகத் திருப்பணி ஆற்றியவர்.ஒருநாள் பணியின்போது மயங்கி இருந்தவரை விட்டுவிட்டு கோவில் கதவை சாத்தினர். மயக்கம் தொழிந்து பசியால் வாடிய அழகு முத்து முருகா முருகா என்று அரற்றிக் கொண்டிருந்தவருக்கு முருகன் பரிசாகரன் வேடத்தில் வந்து கோவில் பிரசாதம் அளிக்க அதை உண்டவருக்கு தோழுநோய் தீர முருகன் மயில் மீது காட்சி கொடுத்து அருள். அழகு முத்து, வேலாயுத சதகம், மெய்கண்ட வேலாயுத உலா, காயாரோகணக் குறிஞ்சி போன்ற செய்யுள் தொகுப்பை பாடி ஆனந்தித்தார். அப்போதிருந்து முருகனுக்கு மெய்கண்ட மூர்த்தி எனப்பெயர்.
இவ்வருட் புலவர் தன் வாழ்நாள் இறுதியில் தலயாத்திரை பூண்டு சீர்காழியில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார். ஓர் சித்திரை மாத சதய நாள் அன்று மாலை வேளையில் திடுமென ஆவிநீத்து ஆண்டவன் அடியிணைகளை அடைந்தார். அதே வேளையில் நாகை மெய்கண்ட வேலவர் கோவிலின் உள்ளே அன்பர்கள் எல்லாம் பார்த்திருக்க புலவரவர்கள் பூத உடலோடு கந்தவேள் எழுந்தருளியுள்ள கரு அறையுள் நுழைந்ததாகவும் பின் காணவில்லை என்றும் கூறுவர்.
இயற்றிய நூல்கள் :
"திறப்புகழ்',
'மெய்கண்ட வேலாயுத சதகம்',
'மெய்கண்ட வேலாயுதக் குறவஞ்சி'
தலைசிறந்த சிவன் அடியார்களான அறுபத்த மூன்று நாயன்மார்களைப் போலவே, சேய்த் தொண்டர்கள் என்றழைக்கப்படும் எழுபத்து எட்டு முருக பக்தர்கள் உள்ளனர். அகத்தியர், அவ்வையார், அருணகிரியார் என்று தொடரும் அந்த வரிசையில் உள்ளோருள் ஒருவர்தான். இந்த 'அழகு முத்து நயனார்'
'சுழறும் கடல் நாகை மெய்கண்ட வேலன் கழல் வணங்கி
விழவயர் ஆலய மெய்க்காவல் தொண்டு மிகப் புரிந்த
சூழகன் பெயரால் சதகம் திறப்புகழ் கூறி உய்ந்த
அழகு முத்து என்னும் ஒரு குணக்குன்று என் அகத்துற்றதே'
என்று புலவர் அழகு முத்துவைப் புகழ்கிறது சேய்த் தொண்டர் திருவந்தாதி.[13][14][15]

சேனைத்தலைவர் புத்தகங்கள்[மூலத்தைத் தொகு]

  • சேனைத்தலைவர் மரபு விளக்கம் - காஞ்சி சபாபதி
  • வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அலல்து சேனைக்குடையார் பூர்வ சரித்திரம் - கோபால செட்டியார்
  • சேனைத்தலைவர் குல வரலாறு -  தக்ஷிணாமூர்த்தி
  • சேனைத்தலைவர் வாழ்வியல் - விவேகலதா

குறிப்பிடத்தகுந்த சேனைத்தலைவர்கள்[மூலத்தைத் தொகு]

அரசியல்[மூலத்தைத் தொகு]

  • திருமுடி ந.சேதுராம செட்டியார், காங்கிரஸ் எம்.பி (பாண்டிச்சேரி தொகுதி 1962-67)
  • தோழர் காத்தமுத்து, கம்யூனிஸ்ட் எம்.பி (நாகபட்டினம் தொகுதி 1967-72)
  • தில்லை வில்லாளன், (சிதம்பரம்) தி.மு.க. எம்.பி. (1968-74)
  • திரு.எஸ்.பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்) காங்கிரஸ் எம்.பி. (1996-2002)
  • மாண்புமிகு ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், அ.தி.மு.க. அமைச்சர், எம்.எல்.சி., எம்.எல்.ஏ
  • திரு.எஸ்.நாராயணன், (திருநெல்வேலி) அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் தலைவர், தமிழ்நாடு காதி போர்டு.
  • திரு. ஆர்.சுடலைமுத்து (போடி) தி.மு.க எம்.எல்.ஏ.
  • திரு.எஸ்.என். வேணுகோபால் செட்டியார் (சேலம்) காங்கிரஸ் எம்.எல்.சி
  • திரு. ஆ. திராவிடமணி (கடையநல்லூர்) தி.மு.க. எம்.எல்.சி.

அறிவியல்[மூலத்தைத் தொகு]

ஆன்மீகம்[மூலத்தைத் தொகு]

  • அருட்கவி அழகு முத்துப் புலவர் - நாகை .
  • அஷ்டலிங்க பரிபாலன சித்தர் ( அருணாசல மூப்பனார் சுவாமிகள்) - திருவண்ணாமலை[16][17][18]

Saturday, 23 November 2019

கொடிக்கால் பிள்ளைமார் - சேனையார் வாழ்க்கையும் , மரபும்

பாண்டிய நாட்டில் சேனையார் இன மக்கள் வெற்றிலை கொடிக்கால் பயிரிடுகின்றனர்.இவர்களின் இன பிரிவுகள்
1 . கொடிக்கால் பிள்ளைமார்
2 . கொடிக்கால் முதலியார்
3 . கொடிக்கால் மூப்பனார்
4 . கொடிக்கால் செட்டியார்
என்று அழைக்கப்படுகின்றது .இவ்வினப்பெயர்களுக்கு முன் சேனையார் என்றும் சேர்த்து கொள்கின்றனர் .இவர்களுக்குள் மண உறவும் உண்டு .
வீரபாகு சேனைத்தலைவர்
----------------------------------------------------------
இவர்கள் தங்களை அறுபடை கடவுள் முருகனின் படை தலைவனான வீரபாகு வின் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றனர் . சேனைக்கு வீரபாகு தலைமை தாங்கி நடத்தியதால் சேனையார் என்ற பட்டத்தையும், பரிசு பொருளாக வேலில் இருந்து கிள்ளிக் கொடுத்த இலைக் கொடியையும் பெற்றனர் .இதுவே சேனையார் இனத்தவர்களால் பயிரடப்பட்டு வந்த வெற்றிலையாகும் .
மதுரை மாவட்டத்தில் பொன்மேனி , சோழவந்தான் , சிந்தாமணி , அய்யனார்புரம் , பனையூர் ஆகிய இடங்களிலும் , நெல்லை மாவட்டத்திலும் , ஆத்தூர் , உடன்குடி பகுதிகளிலும் , இராமநாதபுரம் மாவட்டத்திலும் , திருப்பூவனம் ஆகிய இடங்களிலும் இவ்வின மக்கள் வெற்றிலை கொடிக்கால் பயிரிட்டு வந்துள்ளனர் .
வெற்றிலை கொடிக்கால் பயிரிடுவது என்பது சிரமமான வேலையாகும் .இதை கவனமாகவும் , நுட்பமாகவும் செய்ய வல்லவர்கள் தமிழ்நாட்டு கொடிக்கால் பிள்ளைமார்கள் .
வெற்றிலை பயிருடுவதியே பரம்பரை பரம்பரையாக செய்து வந்த இனத்தார் இன்னும் தமிழ்நாட்டில் இன்றளவும் தமிழ்நாட்டில் அத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .
மதுரை மாவட்டத்தில் இன்னும் கொடிக்கால் பிள்ளைமார் என்று அழைக்க பட்டு வருகின்றனர் .
கொடிக்கால் பிள்ளைமார் தவிர கொடிக்கால் மூப்பனார் , இஸ்லாமியரும் கூட வெற்றிலை பயிரிடும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .
இலைவாணியப் பாட்டம்
-----------------------------------------
வெற்றிலைக்கு வரி அக்காலத்தில் வெற்றிலை பயிருடுவதற்கும் விற்பனை செய்வதற்கும் வரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன .
வெற்றிலை பயிருடுவதற்கு விதிக்கப்பட்ட வரி : இலைகூலம்
வெற்றிலை விற்பதற்கு விதிக்கப்பட்ட வரி : இலைவாணியப் பாட்டம்
இலைவாணிகரும் , கைக்கோளரும்
---------------------------------------------------
புதுவை மாநிலம் வில்லியனூர் கல்வெட்டில் பின்வருமாறு உள்ளது
கி.பி 1542 ஆம் ஆண்டு அச்சுத தேவராயர் ஆட்சியில் இலைவாணிகருக்கும் ( வெற்றிலை வணிகர்கள் ) , கைகொளருக்கும் நடந்த விருது பெயர்களுக்கான சண்டை நடைபெற்றது , இதன் காரணமாக கைக்கோளர்கள் வில்லியனூரை விட்டு அகன்றனர் .
கி.பி 16 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றிய உரிமை கிளர்ச்சி பற்றிய சாசனத்தால் அக்காலத்தில் வில்லியனூர் இல் இலைவாணிகர்கள் பெருவாரியாக வாழ்ந்தது புலனாகிறது .
சேனையார் வரிவிலக்கு
--------------------------------------
வெற்றிலைக்கு அக்காலத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது .பாண்டிய நாட்டில் வெற்றிலை பயிரிடும் சேனையார் என்ற பிரிவினர் க்கு இவ் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது .
தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில் வெற்றிலை பயிரிட்டு வருவோர் கொடிக்கால் பிள்ளைமார் , கொடிக்கால் மூப்பனார் முதலியோர் ஆவர்.
இவர்கள் பருவகாலங்களில் கொடிக்காலில் விளையும் வெற்றிலையை கிள்ளி அடுக்காகவும் , கட்டாகவும் விற்று வாழ்கின்றனர் .
இத்தகவல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறையால் வெளியிடப்பட்டுள்ளது .
புத்தக பெயர் : வரலாற்றில் வெற்றிலை
ஆண்டு : 1977
வெளியிட்டவர்கள் : தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறை, தமிழ்நாடு அரசு
குறிப்பு : என்னிடம் வந்து சண்டை போடும் சில
வெள்ளாளர் பெருமக்களுக்கு இது எதுவும் நான் திரிக்கவில்லை , தமிழ்நாடு அரசை சென்று கேளுங்கள் .இப்புத்தகத்தில் சேனையார் என்றே உள்ளது .என்னிடம் சண்டை போட்டு நேரம் வீணாக்க வேண்டாம் , இது வரை நான் குடுத்த தகவல்கள் அனைத்தும் நீங்கள் எடுக்கும் ஆவணங்களில் இருந்து தான் நாங்களும் எடுத்து பகிர்கிறோம் . நாங்கள் சொல்வது பொய் என்றால் நீங்கள் சொல்வதும் பொய்யாகிவிடும் வெள்ளாளர் உறவுகளே .
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம் .
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு.









ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...