Friday, 17 January 2020

இலை வாணியன் (கொடிக்கால் வேளாளன்)

இலை வாணிய சாதி - சேனைத்தலைவர் இனமே
சேனைத்தலைவர் எனபதே நமக்கு பெருமை நமது இனம் என்றும் சேனைத்தலைவர் என்ற தனி பெரும் இனம்,இக்காலத்திலும் எக்காலத்திலும் நாம் சேனைத்தலைவர் மட்டுமே
இலை வாணியன் (கொடிக்கால் வேளாளன்).
----------------------------------------
பட்டம் - மூப்பன், பிள்ளை.
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
எழுதிய தமிழர் வரலாறு புத்தகத்தில் தமிழ் குடிகள் தோன்றிய வரலாறு உள்ளது , இதில் நம் இலைவாணிய சாதியை தவறாக கொடிக்கால் வேளாளன் என்று பதிவு செய்துள்ளனர் , ஆதி காலத்தில் நம் சேனைக்குடையார் என்ற சேனைத்தலைவர் இனமாகிய இலைவாணிய சாதி வேளாளர் வகுப்பில் இருந்துள்ளதாக அக்காலத்தில் எழுதப்பட்ட "சாதி நூல்" என்ற நூலில் அப்படி குறிப்பிடப்பட்டுள்ளது ,
ஆனால் இன்று வரை எக்காலத்திலும் நம் இனம் வேளாளர் என்று எங்கும் சொல்லி கொண்டதில்லை மற்றவர்கள் சொல்லிக்கொண்டாலும் நம்மை மற்ற குடிகள் இலைவாணியர் அல்லது சேனையார் என்றே பொதுவாக அழைத்திருக்கின்றனர் , கொடிக்கால் பிள்ளைமார் என்பது நம் இனத்திற்கு உள்ள பெயர் ஆதி காலத்தில் இருந்து இதை இந்திய தொல்லியல் துறை பதிவு செய்துள்ளனர் கல்வெட்டுகளில் கிடைத்த தகவலின் படி .
மேலும் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அணைத்து நூல்களும் நாட்டுடமை ஆக்கப்பட்டு உள்ளது , அணைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு நடத்தும் தமிழ் இணையதள கல்வி வலைத்தளத்தில் உள்ளது .
அவரின் தமிழர் வரலாறு என்ற நூலில் உள்ள இலைவாணிய சாதி பற்றி உள்ள தகவல்கள் .
வாணிகன்-வாணியன்.
வாணிகன்
---------------
வகை - அறுவை வாணிகன் (சவளிக்கடைகாரன்), கூல வாணிகன் (தவசக் கடைகாரன்), பொன்வாணிகன் (காசுக் கடைகாரன்), ஊன்வாணிகன்(இறைச்சிக் கடைகாரன்).
வாணியன்
---------------
இலை வாணியன் (கொடிக்கால் வேளாளன்).
பட்டம் - மூப்பன், பிள்ளை.
மறைந்த குலங்கள்
-----------------------------
இறங்குசாத்து (செட்டிகளுள் ஒரு சாரார்),எயினர் (பாலை வாணர்), கணவாளன், நாட்டார்(தென்னார்க்காடு உழவர் வகுப்பார்), மழவர்(மழநாட்டுப் போர்மறவர்), மறமாணிக்கர்(மறக்குடியினர்) முதலியன. இறவுளன், கடம்பன்,களப்பாளன், காடவன், காடுவெட்டி முதலியனவும்மறைந்த குலங்களே.
மொழிமாற்றத்தால் தோன்றியகுலங்கள்
----------------------------------------------
ஆங்கிலம்-சட்டைக்காரர்.
திரவிடம்-
(1)சேரநாட்டுத் தமிழக் குலங்கள்.
(2)கருநட குடக துளுநாட்டுத் தமிழக் குலங்கள்.
(3)வடுக (தெலுங்க) நாட்டுத் தமிழக் குலங்கள்.
(4)நீலமலைத் தமிழக் குலங்கள்.
சங்க கால தமிழ் தொழிற்குலங்கள்( தொழில்களின் படி உருவான சாதிகள் )
--------------------------------------------------
அகவர் (சூதர்), அங்காடிவணிகர்(நாளங்காடி வணிகர், அல்லங்காடி வணிகர்),அச்சுக்கட்டிகள், அடியோர், அண்டர் (இடையர்),அரசர் (கிழவர், வேளிர், மன்னர், கோக்கள்,வேந்தர்), அளவர், ஆட்டு வாணிகர், ஆயர் (கோவலர்,கோவர்), ஆறலைகள்வர், இராக்கடைப் பெண்டிர்(தெருப் பொதுமகளிர்), இயவர் (இசைக்கருவியாளர்),இலையமுதிடுவார் (இலை வாணியர்), உமணர், உழவர்(கடையர்), உறைகாரர், எயினர், எலிமயிர்நெசவர்,ஓசுநர் (மீகாமர்), ஓவர் (மாகதர்), கடம்பர்,கடிகையர் (நாழிகைக் கணக்கர்), கண்ணுளர்,கண்ணுளாளர் (சித்திரகாரர்), கணிகையர் (நாடகக்கணிகையர், கோவிற் கணிகையர்), கணியர், காலக்கணிதர், கம்மியர் (கம்மாளர்), களமர்(கருங்களமர், வெண்களமர்),
கன்னார் (செப்புக்கன்னார், வெண்கலக் கன்னார்), காழியர் (பிட்டுவாணிகர்), கானவர், கிணைவர் (கிணைப் பொருநர்),கிழியினும் கிடையினும் பல தொழில் செய்வார்,குயிலுவர் (தோலிசைக் கருவிகள் செய்வோர்),குறவர், குன்றவர், குறும்பர், கூத்தர், கூலவாணிகர்,கூவியர் (அப்ப வாணிகர்), கொல்லர், கோடியர்(கழைக்கூத்தர்), சங்கறுப்போர், சாக்கையர்,சாலியர் (நெசவர்), தச்சர், துடியர்,தேர்த்தச்சர், தையற்காரர் (துன்னகாரர்,சிப்பியர்), நுண்வினைக் கம்மியர், நுளையர்,பட்டினவர் (மீன்விலைப் பரதவர்), பட்டுச்சாலியர், படையுள் படுவோன் (சின்னமூதி), பரதர்(செட்டிகள்), பரதவர் (பரவர்), பரத்தையர்(இற்பரத்தையர், சேரிப்பரத்தையர்), பழையர் (கள்விற்கும் வலையர்), பறம்பர் (தோலின் துன்னர்),பறையர் (பறையறைந்து விளம்பரஞ் செய்வோர்),பாசவர் (ஊன் விற்போர்), பாணர் (இசைப்பாணர்,குழற்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப் பாணர்),பார்ப்பார், புலையர், பூ விற்பார், பொருநர்(ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர்),பொன்வாணிகர், மணவர் (வாசவர்), மணிகோப்பார்,மணிநகைத் தட்டார், மரக்கலக் கம்மியர், மழவர்(மழநாட்டு மறவர்), மறவர் (பாலை வாணர்),மாலைக்காரர், வண்ணார், வயிரியர் (ஒருவகைக்கூத்தர்), வலைஞர், வள்ளுவர் (அரசர் விளம்பரப்பறையர்), விலைமகளிர் (சிறுவிலை மகளிர், பெருவிலைமகளிர்),
மேலும் தகவல்களுக்கு :
தமிழ்நாடு அரசு நடத்தும் தமிழ் இணையதள கல்வி வலைத்தளத்தில் இவை அனைத்தும் உள்ளன.
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
நாம் சொல்ல வருவது நாம் என்றும் சேனைத்தலைவர் என்ற தனி பெரும் இனம், நாம் பெருமையாக சொல்வோம் இலைவாணியன் என்று நமக்கான அடையாளமே நம் இனத்தின் அரசு பதிவு செய்துள்ள கொடிக்கால் பிள்ளைமார்,கொடிக்கால் மூப்பனார் என்கிற சேனையார் இனம் . எக்காலத்திலும் எந்த வடிவிலும்புத்தகத்தில் வந்தாலும்,எவர் சொன்னாலும் நெஞ்சை நிமிர்த்து சொல்வோம் குழப்பம் அடைய வேண்டியது இல்லை .

சேனைத்தலைவர் உட்பிரிவுகள் : முதலியார், செட்டியார், மூப்பனார் மற்றும் பிள்ளை,கொடிக்கால் பிள்ளைமார்,கொடிக்கால் பிள்ளை, கொடிக்கால் மூப்பனார்,சேனை கொண்ட செட்டியார்

நெஞ்சை நிமிர்த்து சொல் நீ சேனைத்தலைவர் இனமான இலைவாணிய சாதி என்று , நீ சங்க காலத்தில் இருந்து 2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பேரும்,புகழும் பெற்ற தமிழ் மூத்த குடி , போர் குடி , வேளாண் குடி , வணிக குடி , இலைவாணிய குடி ஆகிய சேனையார் இனத்தின் ஒரு அடையாளம் என்று மறந்து விடாதே .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம் .
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு.
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்























“வீரப்பெருமாள் செப்பு பட்டயம்” பட்டய வருடம் - கி.பி. 1495

சேனைத்தலைவர் வீரபாகு வம்சத்தினரா ?
எப்பொழுது இருந்து இவர்கள் ஆதாரபூர்வமாக வீரபாகுவை கும்பிடுகிறார்கள் .
சேனைத்தலைவர்கள் போர் வீரர்களா ?
போர் குடியில் பிறந்த இவர்கள் நவகண்டம் குடுத்துள்ளனரா ?
மன்னன் வல்லாளன் க்கு உயிர் பிச்சை அளித்த வம்சத்தினர் ?
புலி கொடி விருது பெற்றவர்களா ?
600 வருடங்களாக சிதம்பரம் தில்லை கோவில் க்கும் , சேனைத்தலைவர் வம்சத்துக்கும்
உள்ள உரிமை , 600 வருடங்களாக தொடரும் பாரம்பரியம் .
தில்லை நடராசர் கோவில் வரை மரண ஊர்வலம் செல்ல உரிமை பெற்ற ஒரே இனம் .
சோழ பேரரசில் போர்களுக்கே என்றே இருந்த இனம் சேனையங்காடிகள்( பெரும்படையார் ,மூன்றுகை மாசேனையார், சேனையார் ), இடைவிடாமல் நடைபெற்ற பல போர்களினால் அழிந்த இனம் .
சேனைக்குடி என்ற இனப்பற்றோடு வாழ்ந்த இனம் , மது மாது எந்த ஒரு போதை
பழக்கங்களுக்கும் ஆளாகாமல் போர் கட்டுக்கோப்போடு வாழ்ந்த , முருகனை குல தெய்வமாக ஏற்று , கௌமாரம் சமயத்தை பின்பற்றி வாழ்ந்த இனம் .
இவை அனைத்தையும் விளக்குகிறது
“வீரப்பெருமாள் செப்பு பட்டயம்” பட்டய வருடம் - கி.பி. 1495

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம் .
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு.
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் 



மானாமதுரை பாளையக்காரர் வீரப்ப செட்டியார்

பழைய கல்வெட்டு ஒன்றில் சேனைத்தலைவர் இனம்
இடம் : செவ்வாய்பேட்டை
“ மீனாட்சி சுந்தரேஸ்வர் சுவாமி சன்னிதானத்தில்
சேனைத்தலைவர் அதீனத்தில் ஆலந்தூர் வேளாளர் வகையில்
சண்முகம்பிள்ளை பெண்சாதி ....”
வருடம் சரியாக தெரியவில்லை , தமிழ் எழுத்துகளை
வைத்து பார்க்கும் பொழுது 1860 முன்னாடி இருக்கலாம் .
இக்கோவில் பெருமை மிகு நமது இனத்தை சேர்ந்த பாளையக்காரர் , மானாமதுரை பாளையக்காரர் வீரப்ப செட்டியார் அவர்களால் கட்டப்பட்டது , அவர்களின் திருஉருவ சிலையும் , அவர் மனைவியின் சிலையும் இன்றும் இக்கோவிலில் உள்ளது .
பாளையம் வருடம் கி.பி 1572 முதல் கி.பி 1595 வரை
சுந்தர சேனைத்தலைவர்
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம் .
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு.
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார்


மறைமலை அடிகளார்

மறைமலை அடிகளார் 
திராவிட இயக்கம் - புனைவும் உண்மையும் என்னும் நூலில் தெளிவாக சொல்ல பட்டுள்ளது , மறைமலை அடிகள் தந்தை சோழிய வெள்ளாளர் தாய் சேனைத்தலைவர் செட்டியார்
சேனை செட்டியார் எவர் என்று நாகை பகுதிகளில் தெரிந்து கொள்ளுங்கள் இலைவாணியர் என்று எதிலும் வருவதில்லை அது பட்டம் , சேனைகுடையார், சேனையார் அல்லது சேனை கொண்ட செட்டியார் அல்லது சேனை செட்டியார் கள் என்று கொடுக்கப்பட்டுள்ளது . நாகைப்பகுதிகளில் இலைவாணியர் செட்டியார் பெருமக்கள் இருந்தனர் என்பதற்கு தொல்லிய துறை வெளி இட்ட தரங்கபடி ஓலை படித்து கொள்ளவும் .இல்லை நாகை சென்று தெரிந்து கொள்ளவும் .இப்பொழுது சேனை செட்டியார்கள் என்று தான் அழைக்கப்படுகிறார்கள் .
ஆமாம் மறைமலை அடிகளின் தந்தை சோழிய வேளாளர் மற்றும் தாய் சேனைத்தலைவர் செட்டியார் இனம் .
இதை பெருமையாக சொல்வேன் . நீங்கள் ஆயிரம் புரட்டு சொன்னாலும் இதை முதலில் நான் சொல்லிருந்தால் எவரும் ஏற்றுக்க மாட்டார்கள் , கலப்பு என்று அந்த மாபெரும் மகான் இகழப்பட்டிருக்கலாம் , ஆதலால் தான் அவர்கள் மூலம் சொல்ல வைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை .
நீங்கள் ஆயிரம் புரட்டு சொல்லி சேனை கொண்ட செட்டியார் சேனைத்தலைவர் இல்லை என்று சொன்னாலும் அந்த இடங்களில் வாழ்ந்த மக்கள் மற்றும் தொடர்புகள் மூலம் அது உண்மை , மேலும் இலைவாணியர் என்பது வரி விலக்கினால் கிடைத்த பட்டம் அது எங்களுக்கு பெருமையே .
மேலும் நாகையில் அழகு முத்து புலவர் சிலை நிறுவியவர் மறைமலை அடிகள்
அவர் சைவ வேளாளர் இல்லை சோழிய வேளாளர் சைவத்தை பின்பற்றியவர் .
இதை கிடைக்க உதவியா அரச குலத்திற்கு நன்றிகள் .மற்றும் அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி , இப்பொழுது தான் எனக்கு நிம்மதி .
கல்வெட்டுகள் என்பது தொடர்புகள் மூலமே நிரூபிக்கப்படுகின்றன , இவர்கள் இவ்வினத்தை சேர்ந்தவர்கள் என்று தொடர்புகள் மூலம் இவர்கள் இவ்வம்சத்தை சேந்தவர்கள் என்று சொல்ல படுவர் .
சங்க காலங்களில் இருந்து சேனைத்தலைவர் இனம் பல்வேறு கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றுகை மாசேனை யார்
சேனையார்
சேனைக்கடையார்
சேனைக்குடையார்
சேனையங்காடிகள்
சேனை கொண்ட செட்டியார்
சேனை வாணிகன்
இலைவாணிய பாட்டம் (வெற்றிலை வேளாண்மை செய்த சேனையார் அல்லது சேனையங்காடிகள் என்ற இன மக்களுக்கு மட்டும் சோழர் ,பாண்டிய காலங்களில் உள்ள வரியின் பெயர் )
மறைமலை அடிகளின் தந்தை சோழிய வேளாளர் மற்றும் தாய் சேனைத்தலைவர் செட்டியார் ( சேனை கொண்ட செட்டியார்) இனம் இது மறுக்க முடியாத உண்மை .ஆதாரம் அவர்கள் வம்சாவழிகள் கேட்டு தெரிந்து கொள்ளலாம், நாங்கள் தெரிந்து கொண்டோம் .
சுந்தர சேனைத்தலைவர்
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம் .
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு.
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் 

சங்க கால தமிழ் தொழிற்குலங்கள்( தொழில்களின் படி உருவான சாதிகள் )

அகவர் (சூதர்), அங்காடிவணிகர்(நாளங்காடி வணிகர், அல்லங்காடி வணிகர்),அச்சுக்கட்டிகள், அடியோர், அண்டர் (இடையர்),அரசர் (கிழவர், வேளிர், மன்னர், கோக்கள்,வேந்தர்), அளவர், ஆட்டு வாணிகர், ஆயர் (கோவலர்,கோவர்), ஆறலைகள்வர், இராக்கடைப் பெண்டிர்(தெருப் பொதுமகளிர்), இயவர் (இசைக்கருவியாளர்),இலையமுதிடுவார் (இலை வாணியர்), உமணர், உழவர்(கடையர்), உறைகாரர், எயினர், எலிமயிர்நெசவர்,ஓசுநர் (மீகாமர்), ஓவர் (மாகதர்), கடம்பர்,கடிகையர் (நாழிகைக் கணக்கர்), கண்ணுளர்,கண்ணுளாளர் (சித்திரகாரர்), கணிகையர் (நாடகக்கணிகையர், கோவிற் கணிகையர்), கணியர், காலக்கணிதர், கம்மியர் (கம்மாளர்), களமர்(கருங்களமர், வெண்களமர்),
கன்னார் (செப்புக்கன்னார், வெண்கலக் கன்னார்), காழியர் (பிட்டுவாணிகர்), கானவர், கிணைவர் (கிணைப் பொருநர்),கிழியினும் கிடையினும் பல தொழில் செய்வார்,குயிலுவர் (தோலிசைக் கருவிகள் செய்வோர்),குறவர், குன்றவர், குறும்பர், கூத்தர், கூலவாணிகர்,கூவியர் (அப்ப வாணிகர்), கொல்லர், கோடியர்(கழைக்கூத்தர்), சங்கறுப்போர், சாக்கையர்,சாலியர் (நெசவர்), தச்சர், துடியர்,தேர்த்தச்சர், தையற்காரர் (துன்னகாரர்,சிப்பியர்), நுண்வினைக் கம்மியர், நுளையர்,பட்டினவர் (மீன்விலைப் பரதவர்), பட்டுச்சாலியர், படையுள் படுவோன் (சின்னமூதி), பரதர்(செட்டிகள்), பரதவர் (பரவர்), பரத்தையர்(இற்பரத்தையர், சேரிப்பரத்தையர்), பழையர் (கள்விற்கும் வலையர்), பறம்பர் (தோலின் துன்னர்),பறையர் (பறையறைந்து விளம்பரஞ் செய்வோர்),பாசவர் (ஊன் விற்போர்), பாணர் (இசைப்பாணர்,குழற்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப் பாணர்),பார்ப்பார், புலையர், பூ விற்பார், பொருநர்(ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர்),பொன்வாணிகர், மணவர் (வாசவர்), மணிகோப்பார்,மணிநகைத் தட்டார், மரக்கலக் கம்மியர், மழவர்(மழநாட்டு மறவர்), மறவர் (பாலை வாணர்),மாலைக்காரர், வண்ணார், வயிரியர் (ஒருவகைக்கூத்தர்), வலைஞர், வள்ளுவர் (அரசர் விளம்பரப்பறையர்), விலைமகளிர் (சிறுவிலை மகளிர், பெருவிலைமகளிர்)


தமிழர் வரலாறு
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

மேலும் தகவல்களுக்கு :
தமிழ்நாடு அரசு நடத்தும் தமிழ் இணையதள கல்வி வலைத்தளத்தில் இவை அனைத்தும் உள்ளன.




பதினெண்குடிகள் அல்லது வேளாளர் ஏவல் குடிகள்

சேனைத்தலைவர் இனத்தின் முன்னோடி , நமது ஐயன் , நமது முப்பாட்டன் தமிழ் கடவுள் மறைமலை அடிகளார் சொல்லிய
பதினெண்குடின்கள் அல்லது வேளாளர் ஏவல் குடிகள்
கைக்கோளர் , தச்சர் , கொல்லர் , கம்மாளர் , தட்டார் , கன்னார்,செக்கார், மருத்துவர் , குயவர் , வண்ணார், துன்னர் , ஓவியர் ,பாணர் , கூத்தர் , நாவிதர் , சங்கறுப்பார் , பாகர், பறையர்
என்பவர் ஆவர்.
இப்பதினெண் வகுப்பினரும் தத்தம் தொழில்களை செய்து கொண்டு வேளாளர் ஏவல் வழி நின்று , அவருக்கும் அவரது உழவு தொழிலுக்கும் பயன்படுவாராயிருந்து வாழ்ந்து வருதல் .
ஆக தமிழ் நாட்டில் வர்ணா சிராமத்தை தோற்றுவித்து அதை நடைமுறை படுத்தியவர்கள் தமிழர்களான வேளாளர்கள்
என்கிற முடிவுக்கு வருகிறார் மறைமலை அடிகளார் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம் .
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு.
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார்






ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...