Wednesday, 5 February 2020

S. G. தேவநாதன் செட்டியார்

புகைப்படத்தில் நாம் காண்பது கடலூர் மாவட்டம், பண்ணுருட்டி நகரைசேர்ந்த நம் சேனைத்தலைவர் சமூக வழிகாட்டியமான திரு. S. G. தேவநாதன் செட்டியார் ஆவார்.
பண்ணுருட்டியின் பெருமைமிக்க பாக்கு வணிக நிறுவனத்தில் சாதாரண குமாஸ்தாவாக சேர்ந்து, தனது உழைப்பினால் அந்நிறுவனத்தின் சரிபாதி பங்குதாரராக உயர்ந்தவர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக தேச பணியாற்றியவர்.
மஹாத்மா காந்திஜியின் திட்டங்களான அரிஜன ஆலய பிரவேசம், அந்நிய துணி பகிஷ்காரம் ஆகியவைகளை பண்ணுருட்டியில் முன் நின்று நடத்தியவர்.
அவரால் கதராடை அணியத்தொடங்கிய எனது தந்தையாரும், அவருக்குப்பின் நானும் இன்று வரை கதராடை அணிபவர்கள்.
பண்ணுருட்டி பஞ்சாயத்து போர்டு உறுப்பினராக நீண்ட நாட்களும், அதன் ப்ரெசிடெண்ட் ஆக பத்தாண்டுகளும் பணியாற்றி தூய்மையான நிர்வாகத்தினை தந்தவர்.
நம் சேனைத்தலைவர் சமுதாய குடும்பத்தினர் சிலரால் நிர்மாணம் செய்யப்பட்டு, அக்குடும்பத்தினரில் ஒருவரால் பரம்பரை தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்டு இன்றும் சிறந்து விளங்கும், காந்தி ரோடு, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்திற்கு ஏற்பட்ட வீண் வழக்கை தன் சொந்த பொருட்செலவில் தீர்த்துவைத்து ஆலயம் நமதாக உதவியவர்.
அவருடைய மகள் வழிப் பேரன் தம்பி A.C.R.சந்தானம் தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்க மாநில பொதுக் குழு உறுப்பினராக நம் சமுதாய பணியில் இருக்கிறார்.
மஹாத்மா காந்திஜி அவர்களின் புனித அஸ்தி பண்ணுருட்டி வந்த போது,பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நாலு ரோடு பகுதியில் அன்றைய நகர காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடத்தை, பஞ்சாயத்து போர்டுக்கு தானமாக பெற்று காந்தி பூங்கா அமைத்து, அதில் ஐம்பொன்னால் ஆன காந்தி சிலை அமைய பாடுபட்டவர்.

அவர் வணிக நிறுவனம் செயல்பட்ட செட்டித்தெரு ' B ' பிளாக் S. G தேவநாதன் தெரு என்று அவர் பெயரில் இன்றும் உள்ளது
படத்தில் காண்கிற சிலை அதுதான்.

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம் .
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு.
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்





ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...