Saturday, 3 April 2021

141 கிராம #சேனைத்தலைவர் சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட ஆழ்வார்குறிச்சி சக்ரவர்த்தி ஸ்ரீ சுடலை மாடசுவாமி - தல வரலாறு

 141 கிராம #சேனைத்தலைவர் சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ காக்கும் பெருமாள் சாஸ்தா

சக்ரவர்த்தி ஸ்ரீ சுடலை மாடசுவாமி - தல வரலாறு 



அம்பாசமுத்திரம் அருகே உள்ளது ஆழ்வார்குறிச்சி இராமநதி ஆற்றங்கரையோரம் கோவில் கொண்டுயிருக்கிறார் _ஸ்ரீ சக்ரவர்த்தி மாயாண்டி..._

நமது தெய்வம் வீச்சரூவா ஏந்திய வலது கரத்துடனும் முருக்கிய மீசை முகத்துடனும் அருளாட்ச்சி புரிந்து வருகிறார்...!

ஸ்ரீ சுடலை மாடசுவாமியை அந்த சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் பல(பெயர்களில்) திருநாமங்களில் அழைப்பது உண்டு ஆழ்வார்குறிச்சி ஊரிலே உக்கிர கண்ட மயானம் என்று சொல்லப்படும் ஈசான மூலையில் நமது ஐயா மாயாண்டி குடிகொண்டுள்ளதாலே *ஈசான மூர்த்தி* என்றும்

முன்பெறும் காலத்தில் கோவிலின் தென் புறத்தில் அந்த பகுதி முழுவதும் கருவேல மரங்கள் சூழ்ந்துருந்ததால் ஐயா மாயாண்டியை *கருமருதான்* ( _கருமருது_ ) என்றும்

கோவிலின் வாசலில் முன்புள்ள மருதமரமானது ஆண்டுகள் பல கண்டு செழிப்பாக வளர்ந்து இருந்ததினால்  ஐயா மாயாண்டியை *செம்மருதான்*( _செம்மருது_ ) என்றும் அழைப்பார்கள்...

கோவிலின் அருகே ஓடும் இராமநதியை வீரநதி என்றும் வறட்டை நதி என்றும் அந்த பகுதியில் உள்ள சுற்று வட்டார மக்களால் அழைக்கப்படுகிறது. கட்டங்கருகசம் என்று சொல்லப்படும் கட்டையான அளவிலே கஜம் என்றால் ஆழம் குறுகிய அளவுடைய ஆழமான இராமநதி கரையோரத்தில் அமைந்திருக்கும் நமது குலதெய்வம் அதனாலேயே ஐயா மாயாண்டியை *ராமநதி வீரன்* என்றும் அழைக்கபடுகிறார்...

அதை போல மலையாள தேசத்தில் சக்ரவர்த்தி எனும் மன்னன் தம்மை நாடி வரும் மக்களுக்கு இல்லை என்று கூறாமல் வாரி வழங்கும் வள்ளலாக பெயர் எடுத்தவர்

நம் ஐயா மாயாண்டியும் அதே போல தன்னை நாடி வரும் மக்களுக்கு இல்லை என்று கூறாமல் வரங்களை வாரி கொடுக்கும் வள்ளலாக திகழ்வதாலே நம் ஐயாவை *சக்ரவர்த்தி மாயாண்டி* என்றும் அனைவராலும் அழைக்கபடுகிறார்...

அதே போல் நமது ஆலயத்தில் இன்னும் பல தெய்வங்கள் நிலையம் கொண்டுள்ளன ஸ்ரீ காக்கும் பெருமாள் சாஸ்தா, ஸ்ரீ காக்கும் வினாயகர், ஸ்ரீ சண்முக சுந்தர விநாயகர், ஸ்ரீ சிவணைந்த பெருமாள், ஸ்ரீ தபசு தம்பிரான், ஸ்ரீ பிரம்மராட்சதை அம்பிகை, ஸ்ரீ வீரபத்ரகாளியம்மன், ஸ்ரீ மாடத்தி அம்மன், ஸ்ரீ சப்த கன்னிமார்கள், ஸ்ரீ ஒளிமுத்து, ஸ்ரீ சின்ன நம்பி, ஸ்ரீ பட்டாணி சாய்வு. ஆகிய பரிவார தெய்வங்களை நிலையம் கொண்டுள்ளனர் நமது சேனையர் குல முன்னோர்கள்...

இங்கு மூலவர் மாயாண்டி என்றாலும் பூஜையின் போது முதல் பூஜை ஸ்ரீ காக்கும் வினாயகர் ஸ்ரீ காக்கும் பெருமாள் சாஸ்தா ஸ்ரீ சண்முக சுந்தர விநாயகர் மற்றும் இரு பெரும் முனிவர்களான ஸ்ரீ சிவணைந்த பெருமாள் ஸ்ரீ தபசு தம்பிரானுக்கும் தான் இவ்வாலயத்தில் முதல் பூஜை நடைபெறுகிறது...

நமது ஆலயத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் சபரிமலையில் வாவருக்கு இடம் கொடுத்த ஐயப்பனை போல பட்டாணியார் என்பவருக்கும் இவ்வாலயத்தில் இடம் கொடுத்துள்ளார் நம் ஐயா மாயாண்டி சுடலை...

கோவில் வளாகத்தில் உள்ள பட்டாணியருக்கான பட்டாணி பாறையில் கொடை விழாவின் போது ரொட்டி பேரீச்சம்பழம் வாழைப்பழங்கள் செண்ட் முதலான பல பொருட்கள் கொண்டு படையல் வைத்து பூஜைகள் செய்யப்படுகிறது...

இங்கு சேவல் பழியும் கொடுத்து வாழை பழங்கள் எறியும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது...

இங்கு கோவில் கொடையின் போது மதிய நேர வேலையில் கோவில் வளாகத்தில் மக்கள் கூட்டம் அலை கடல் போல் காட்சியளிக்கும்...!

அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமமான சுந்தரபாண்டியபுரம் இங்கு விவசாய மக்கள் மிகுதியாக வாழும் இந்த பகுதியில் கந்த புராணத்தில் முருக பெருமான் படைத்தளபதிகளில் ஒருவரான வீரத்தளபதி #வீரபாகுசேனைத்தலைவர் வம்சா வழியாக கூறப்படும் சமுதாயத்தினர் அந்த சுற்று வட்டார பகுதிகளில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர்...

இந்த சமுதாயத்திற்கு பாத்தியபட்ட சுவாமி கோவில் கொடை விழாவிற்காக தீரத்த நீர் காரையார் ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவிலில் இருந்து எடுத்து வருவது வழக்கம் அதன் படி சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள சுவாமி கோவிலுக்கு கொடை விழா நடத்த நாள் குறித்து கால் நாட்டப்பட்டது கொடை விழாவின் பொருட்டாக சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் பொருட்டாக தீர்த்தம் எடுத்து வர எட்டு நாள் விரதம் மேற்கொண்டு திருக்கோவில் (சாமி ஆடுபவர்கள்) கோமரத்தாடியும், நிர்வாகிகளும் புறப்பட்டனர் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு நடைபயணமாக சென்றனர்....

அங்கு அருளாட்சி புரியும் ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோவிலில் சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜை நடத்தி அங்கு உள்ள பல தெய்வங்களான ஸ்ரீ மகாலிங்கம், ஸ்ரீ பேச்சியம்மாள் ஸ்ரீ பிரம்மராட்சதை அம்பிகை, ஸ்ரீ சுடலை மாடசுவாமி ,ஸ்ரீ சங்கிலி பூதத்தார். ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன பின்னர் அங்கு ஓடும் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி தீர்த்தம் எடுத்தனர் தீர்த்த குடத்தை ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் சன்னதி முன்பு வைத்து கோவில் கோமரத்தாடியின் தலையில் தீர்த்த குடத்தை தூங்கி வைத்தனர்...

அடுத்து தலையில் வைக்கப்பட்ட தீர்த்தகுடத்துடன் கோவில் கோமரத்தாடியும் நிர்வாகிகளும் அதன் உடன் வந்தவர்களும் சுந்தரபாண்டியபுரத்தை நோக்கி மீண்டும் நடைபயணம் மேற்கொண்டனர்...

தீர்த்தத்துடன் நடைபயணமாக வரும் வழியில் பொட்டல்புதூர் அருகே ஆழ்வார்குறிச்சி _வீரநதி_ என்று சொல்லப்படும் _இராமநதி_ ஆற்றங்கரையோரம் வரும் போது கால் வலித்தது பசி வயிற்றைக் கிள்ளியது அதனால் அவர்கள் அங்குள்ள ஆற்றங்கரையோரம் இருக்கும் கருவேலன் மரம் வேப்பமரம் ஆலமரம் அரசமரம் மருதமரம் எனும் மரங்கள் வரிசையாக நிர்ப்பதை பார்த்து அந்த காற்றோட்டமான சூழலில் அந்த மரத்தின் நிழலில் மதியம் ஒரு 3.00 மணி வேலையில் அங்கிருந்த கோவில் கோமரத்தாடிகள் மற்றும் அங்கிருந்த அனைவரும் உடல் சோர்ந்து போனார்கள் அதனால் கோவில் கோமரத்தாடிக்கு அங்குள்ள மரசோலையில் ஓய்வு எடுக்க தூண்டியது அவர் சொல்ல அங்குள்ள அனைவரும் சரி என்று சொல்லி ஓய்வு எடுக்க முடிவு செய்தனர்...

ஓய்வு எடுத்து முடிந்த பிறகு மாலை ஒரு 5.00 மணி மாலை பொழுது வந்ததும் கோவில் கோமரத்தாடி ஐயா நேரம் நெருங்கிவிட்டது எல்லாரும் கிளம்பும்மாறு கட்டளையிட்டார் அவர் செல்லலாம் கிளப்பும் ஐயா என்று அங்குள்ள அனைவரும் சொல்லி கிளம்ப ஆரம்பித்தனர்...

எல்லாரும் கிளம்புகூடிய அந்த நேரத்தில் தரையில் இருந்த தீர்த்த குடத்தை எடுக்க முற்படும் போது அது வராமல் தரையோடு ஒட்டி கொண்டது எவ்வளவோ பலம் கொண்டு முயற்சி செய்தும் அங்கிருந்த தீர்த்த குடத்தை எடுக்க முடியவில்லை உடனே அங்குள்ள அனைவரும் எவ்வளவோ பலமுறை முயற்ச்சித்து பார்த்தும் யாராலும் தரையில் அமர்ந்து இருக்கும் தீர்த்த குடத்தை எடுக்க முடியவில்லை உடனே அங்குள்ள அனைவரும் திகைத்து போய் நின்றனர் என்னடா இது கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்து விட்டு புறப்படக்கூடிய தயாராகும் நேரம் மாலை பொழுது வந்து மேகம் கருமையாகும் நேரத்தில் இப்படி நம்மள சோதித்து பார்க்குதே என்று அங்கு உள்ளவர்கள் ஆச்சரியப்பட்டு நின்றனர்...

அந்த வேதனையோடு என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு உடன் இருப்பவர்கள் எல்லாரும் கோமரத்தாடியிடம் ஐயா மாயாண்டியை நினைத்து வேண்டிக்கிட்டு தீர்த்த குடத்தை மறுபடியும் எடுக்க சொன்னார்கள் உடனே கோவில் கோமரத்தாடி தீர்த்த குடத்தை எடுக்கும் முன்பு அவர் சாமியை வேண்டிக்கிட்டு ஐயா மாயாண்டி சுடலை இது உனக்கு கொண்டு வந்த தீர்த்தம் இவ்வளவு எங்களை சிரமப்படுத்துறியே இராத்திரி பொழுது எப்படி நாங்க வருவோம் அப்ப தீர்த்த குடத்தை எடுத்து வந்தாதானே நாங்க அங்க வரமுடியும் என்று சொல்லி வேண்டிக்கிட்டு நேரம் மாலை பொழுது முடியும் தருவாய் அந்த கருக்கல் நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் அனைவரும் திகைத்து நின்ற போது ஒரு அசரீரி கேட்டது என்னவென்று கேட்கும் போது நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன் எனக்கு இந்த இடம் பிடித்தமாகிவிட்டது எனக்கு இங்கே ஒரு நிலையம் கொடுத்து வழிப்பட்டு வாருங்கள் சுந்தரபாண்டியபுரத்தில் கோவில் கொடை விழா நடத்தும் பொழுது தீர்த்தம் எடுத்து விட்டு வரும் பொழுது எனக்கும் இங்கே ஒரு பூஜை வைத்து வழிப்பட்டு வாருங்கள் உங்களை மேம்படுத்துவேன் என்று சொல்லி எனக்கு பூஜை வைத்த பின்பு தான் நீங்கள் தீர்த்த குடத்தை எடுக்க வேண்டும் என்று அப்பன் மாயாண்டி சுடலை கூறினார் அந்த உத்தரவிற்க்கு கட்டுப்பட்டு அவர்கள் ஐயா சொன்ன வாக்கிற்கு தகுந்தாற்போல் அவர்கள் மாயாண்டிக்கு அங்கு ஒரு நிலையம் கொடுத்து பூஜைகள் நடத்தப்பட்டு அதற்கு பின்பு தான் அந்த தீர்த்த குடத்தை எடுக்கிறார்கள் தீர்த்த குடம் அப்போது தான் வருகிறது...

அந்த தீர்த்த குடத்தை எடுத்து கொண்டு ஆழ்வார்குறிச்சியில் இருந்து அதாவது கோவில் இருந்த இடத்தில் இருந்து சுந்தரபாண்டியபுரத்திற்கு நடைபயணமாக மேற்கொண்டனர்...

சுந்தரபாண்டியபுரத்திற்கு தீர்த்த குடத்தை எடுத்து வந்த பிறகு அவர்கள் அனைவரும் வந்த உடன் அதற்கு பிறகு கோவில் கொடை நடத்தப்படுகிறது..

மறு ஆண்டு இங்கேயும் கொடைவிழா நடத்தப்படுகிறது (அதாவது கோவில் நிலையம் கொடுத்த இடத்தில் ஆழ்வார்குறிச்சியில்) அதன் பிறகு அதன் பிறகு மாதந்தோறும் கடைசி செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்கு பூஜைகள் நடத்தப்பட்டன...

அதனை தொடர்ந்து பூஜைகள் நடத்துவது கொஞ்சம் கொஞ்சமாக நாட்கள் குறைந்து கொண்டே போவதால் இங்கு பூஜைகள் நடத்துவது நிறுத்தப்பட்டன  
பூஜைகள் நடத்துவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் அடுத்து வருடத்திற்கு ஒரு முறையும் என பூஜைகள் நடத்தப்பட்டன அதன் பிறகு வருடத்திற்கு ஒரு முறையும் நடந்த பூஜையும் நடத்தப்படாமல் விட்டுவிட்டார்கள் அதன் பிறகு வருடங்களாகியும் பூஜைகளும் நடக்க வில்லை கொடை விழாவும் நடத்தப்பட வில்லை இதனை அப்படியே அந்த கோவிலை நிறுவியவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டார்கள் கோவில் உள்ள இடத்தில் எந்த ஒரு கட்டுபாடும் இல்லாமல் சிலைகள் இல்லாமல் சுவாமிகள் பீடமாக மட்டுமே வைத்தனர் அந்த பீடமாக வைத்த சுவாமியை மட்டுமே வருடத்தில் ஒரு முறை வழிப்பட்டு வந்தார்கள்...

சுவாமி பீடம் வெளியில் இருப்பதால் மழை எதுவும் வந்து நனைந்து மண்ணில் கரைந்து விட கூடாது என்று அந்த கோவிலை நிறுவியவர்கள் சுவாமியின் மேற்பாகத்தில் ஓலைக்கீற்றை வைத்து மறைத்து அடுத்து அதை சுற்றி மேல் மற்றும் கீழ் இரண்டு பக்கமாக ஓலைக்கீற்றை வைத்து சிறிய கோலிலாக கட்டி வருடத்திற்கு ஒரு முறை வழிப்பட்டு வந்தார்கள் சுந்தரபாண்டியபுரத்து அந்த சமுதாய மக்கள் ஓலைக்கீற்றில் அமைக்கப்பட்டுயிருந்த சிறிய கோவிலில் இருந்த சுவாமியை அதாவது ஐயா மாயாண்டியின் சிலையை மட்டும் வைத்து வழிப்பட்டு வந்தார்கள் அந்த சிறிய கோவிலில் ஐயாவின் சிலை முருக்கிய மீசை முகத்துடனும் வீச்சரூவா ஏந்திய கரத்துடனும் நின்ற கோலத்தில் அருளாட்ச்சி செய்கிறார் ஐயா மாயாண்டி சுடலை...

அதன் பிறகு கோவிலை நிறுவியவர்கள் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்ததால் மறுபடியும் பூஜைகள் வழிபாடுகள் நடத்தவில்லை இதனால் சினம் கொண்ட மாயாண்டி சுடலை நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லையே என்று எண்ணி நான் இருப்பதை இங்கு உள்ளவர்கள் அறிய வேண்டும் (அதாவது இந்த பகுதி மக்கள் ஆழ்வார்குறிச்சியில் உள்ள இந்த மக்களுக்கு தெரிய வைக்க வேண்டும்) என எண்ணுகிறார் ஐயா மாயாண்டி...

அதன் பிறகு கோவிலருகே இந்த ஆழ்வார்குறிச்சியில் உள்ள அயன்புரம் என்ற கிராமத்தில் உள்ள தோப்புகளுக்கு சென்று இளநீரை பறித்து நீர் அருந்துவது வாழை தோட்டத்திற்க்கு சென்று வாழைதார்களை பறித்துகொள்வது முதலான செயல்களை செய்தார் அதன் பிறகு தென்னந்தோப்புகளுக்கு சென்று தென்னை மரத்தில் மறுநாள் சென்று பார்த்தால் அந்த இளநீர் குலைகள் கீழே விழுந்து நீரின்றி போய் கிடக்குமாம்...

இதை போன்று பழுக்கும் நிலையில் இருக்கும் வாழைத்தார்களில் அடுத்த நாள் சென்று பார்த்தால் காம்பு மட்டுமே வாழை மரத்தில் இருக்கும் பழத்தார் இருக்காது இத்தகைய பல செயல்களான சேட்டைகளை செய்து கொண்டே இருத்தார் ஐயா மாயாண்டி சுடலை...

இதனை அறிந்த அங்குள்ள தோட்டக்காரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் நின்று யோசித்து கொண்டு இருந்தனர்...

இப்படி இவ்வளவு செய்தும் யாரும் என்னை கண்டுகொள்ள வில்லையே என்று எண்ணி எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கும் இந்த வேலையில் அந்த பகுதியில் உள்ள அட்டகசம் என்கின்ற இராமநதி அணை கிடங்கு குட்டையில் உள்ள தண்ணீரை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர் இது குட்டையும் இல்லாமல் குளமும் இல்லாமல் ஒரு அணை கிடங்கு அதாவது வறண்ட ஆறு எப்போதும் தண்ணீர் வற்றாமல் அதில் ஓடி கொண்டே இருக்கும்

அங்கு அந்த ஆற்றில் குளிப்பவர்களையும் குளிக்க வருபவர்களையும் சோப்பு போடுபவர்களையும் பின்னால் வந்து யாரோ அடித்து விட்டு போவது போலயும் குளிப்பவர்கள் காலில் வந்து தனது வாலை கொண்டும் செதிலை கொண்டும் அடித்து விட்டு போவது போலயும் செய்திருக்கிறார் ஐயா மாயாண்டி அதனால் அங்கு உள்ளவர்களுக்கு அச்சத்தை ஏற்ப்படுத்தியது...

இதனால் அந்த பகுதி மக்கள் இத்தகைய சேட்டைகள் எல்லாம் செய்வது யாரென்று கண்டறிய வேண்டும் இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு உள்ளவர்கள் அனைவரும் யோசித்து கொண்டிருந்தனர்கள் உடனே இதற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும் என எண்ணினார்கள் உடனே அதன் பின்னர் அந்த சுற்று வட்டாரத்திலே மந்திரம் தந்திரம் தெரிந்த ஒரு மாந்திரீகவாதியை பிடிக்க வேண்டும் என அருகில் உள்ள _பொட்டல்புதூரில்_ பெரும் புகலோடு வசித்து வரும் மாந்திரீகம் தெரிந்த *பட்டாணியார்* என்பவரை வரவழைத்து பார்த்தனர்...

பட்டாணியார் என்பவர் குதிரையில் தான் எப்போதும் வருவார் அவரை நம்பி செல்பவர்களுக்கு அவர் சொல்லுவது நான் தெய்வத்தை விட பலம் வாய்ந்தவன் நான் அதனால் எனக்கு உரிய மரியாதையை நீங்கள் தரவேண்டும் என்றும் அதன் கூறுகிறார் பட்டாணியார்

பின்பு அவரை நேரில் பார்க்க செல்பவர்கள் எல்லாம் வாழைபழம் தேங்காய் கொண்டு தான் அவரை பார்க்க வேண்டுமாம் அந்த அளவுக்கு ஒரு மாந்திரீகம் தெரிந்தவர் மற்றும் பெரிய கம்பீரமான தோற்றமுடையவர் பட்டாணியார்...

இப்பகுதியில் உள்ளவர்கள் பட்டாணி சாய்வை ஒரு சிலர் நேரில் சென்று அழைத்து வந்தனர் உடனே ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஐயா மாயாண்டி கோவிலின் முன்பு குதிரையில் வாளோடு வந்து இறங்கிய பட்டாணியார் அட்டகசம் என்று சொல்லப்படும் இராமநதி ஆற்றின் உள்ள இறங்கி அந்த அணை கிடங்கு குட்டையில் அங்கும் இங்குமாக வாள் கொண்டு வீசுகிறார் இன்னும் அந்த அட்டகசத்தில் மேலும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி நடந்து கொண்டே நகர்ந்து சென்று மேலும் கீழும் அங்கும் இங்குமாக மறுபடியும் வாளை கொண்டு அச்சத்தில் வீசுகிறார் அப்போது அவருக்கும் மீன் செதிலையும் வாளையும் கொண்டு யாரோ தனது கால்களில் அடித்து செல்வது போல் தோன்றியது சினம் கொண்ட பட்டாணியார் மறுபடியும் மாந்திரீகம் சொல்லி வாளை கொண்டு வீசுகிறார்...

அப்போது அவரது தோள் பக்கம் ஒருவர் அடித்து விட்டு செல்வது போல் மறுபடியும் தோன்றுகிறது உடனே பட்டாணியார் வலி தாங்க முடியாமல் கரையேறி விடுகிறார் கரைக்கு வந்த பிறகு வாளை வைத்து கொண்டு மந்திரங்கள் பல சொல்லி கொண்டு பார்க்கிறார் ஆனால் பட்டாணி சாய்வுக்கு ஒரு நிழல் மட்டும் தெரிவது போல் தோன்றியது உடனே அவர் அந்த நிழலை தொடர்ந்து சென்ற பட்டாணியார் ஆழ்வார்குறிச்சி ஆற்றங்கரையோரம் ஐயா மாயாண்டி கோவிலில் உள்ளிருக்கும் சுடலை ஐயாவின் சிலை இருக்கும் ஓலைக்கீற்று கொட்டகைக்குள் செல்கிறார் அந்த நிழலை தொடர்ந்து அந்த ஓலைக்கீற்றுக்குள் சென்ற போது அங்கும் அதே போல்  யாரோ அடிப்பது போல் தோன்றியது சினம் கொண்டு நின்ற பட்டாணியாரை மறுபடியும் அதே போல் அடிக்க உடனே வேகமாக திரும்பிய பட்டாணியார் கையில் இருந்த வாள்க்கொண்டு சினம் கொண்டு விசுகிறார் அது ஐயா மாயாண்டி சிலையில் வலது கரத்தில் வெட்டுகிறது வெட்டப்பட்ட சிலையில் இருந்து இரத்தம் வழிந்தோடுகிறது அதை கண்டு அச்சம் கொண்டு பிரம்மித்து நின்றார் பட்டாணியார்

அவர் உடனே தனது சுயநிலைக்கு வரும் பொழுது ஏதோ ஒரு பெரிய சக்தி இங்கு இருக்கின்றது அதனால் அந்த சக்திக்கும் நம் செயலுக்கு ஈடாகாது அகப்படாது என்று புரிந்து கொண்ட பட்டாணியார் உடனே அந்த நேரம் குதிரையில் ஏறி புறப்பட தயாரானார் அதன் பின்பு ஐயா மாயாண்டி அந்த நேரம் ஆதாளி போட்டு கொண்டு சுடலை வெகுண்டுயேழுகிறார் பயந்து போன பட்டாணியார் அவரது குதிரையில் ஏறி வேகமாக புறப்படுகிறார் உடனே ஐயா மாயாண்டி என்னுடன் விளையாட்டு காமித்து விட்டு ஓட பாக்கிறாயா என்று குதிரையின் காலை பிடித்து இழுத்து கீழே விழச்செய்கிறார் உடனே பட்டாணியாரும் கீழே விழுந்தார் கீழே விழுந்த பட்டாணியார் பயந்து போய் நடுங்கி மறுபடியும் ஓட முயற்சி செய்தார் ஆனால் ஐயா மாயாண்டி அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வதம் செய்கிறார் அதன் பின்பு இறக்கும் தருவாயில் பட்டாணியார் ஐயா மாயாண்டி சுடலை என்னை விட்டுவிடு என்று சொல்லி நீ யார் என்று தெரியாமல் உன்னை நான் சீண்டிவிட்டேன் ஆகையால் தன்னை மன்னிக்குமாறும் கெஞ்சுகிறார் ஐயா மாயாண்டியிடம் பட்டாணியார் ஆனால் ஐயா மாயாண்டி சுடலைக்கு சினம் தனியவில்லை பட்டாணியார் மறுபடியும் சுடலை ஐயாவிடம் கெஞ்சுகிறார் தெரிந்தோ தெரியாமலோ உன் இடத்திற்கு வந்து விட்டேன்  என்னை எப்படியும் கொன்று விடுவாய் என்று சொல்லிய பட்டாணியார் நான் இருக்கும் வரையில் என்னை எல்லோரும் சாமியாக கும்பிட்டு மதித்து பெரும் புகழோடு இந்த பொட்டல் மண்ணில் ராஜாவாக வாழ்ந்து வந்தேன் என்றும் தான் தனித்துவம் பெற்று இம்மண்ணில் பெருமையாக வாழ்ந்து விட்டேன் என்று ஐயா மாயாண்டி சுடலையிடம் பட்டாணியார் கூறுகிறார்...


அதன் பின்பு என் மரணத்திற்கு பிறகும் இம்மண்ணில் நான் மாண்டு போனாலும் இம்மக்கள் என்னை எப்போதும் ஆண்டவனாக கருதி தொழுது வணங்க வேண்டும் அவர்களுக்கு நான் அருள் புரியவேண்டும் ஆகவே எனக்கு நான் கேட்கும் இந்த வரமளித்து எனக்கும் இங்கே ஒரு நிலையம் போட்டு தருமாறு ஐயா மாயாண்டியிடம் வேண்டியிருக்கிறார் பட்டாணி சாய்வு

அதனை தொடர்ந்து உனக்கு நடக்கும் பூஜையின் போது அதன் பிறகு எனக்கு பூஜை வைக்குமாறு கேட்டுக்கொண்டார் பட்டாணியார் அதன் பின்பு ஐயாவும் அவர் வேண்டுகோளுக்கு இணங்க நீ விரும்பிய படியே ஆகட்டும் என்று ஐயா மாயாண்டி சுடலையும் அவருக்கு உறுதியளித்தார் அங்கேயே பாறை இருந்தது பட்டாணியாரை அந்த பாறையில் உட்காரவைத்து  அவருக்கு அவர் கேட்டபடியே பூஜையை கொடுத்து வழிவகை செய்தார்...

பின்னர் இந்த நிலையில் மாயாண்டி சுடலையின் சினத்தை தனிப்பதற்கு ஸ்ரீ சிவணைந்த பெருமாள்,
ஸ்ரீ தபசுதம்பிரான் ஆகிய இரு பெரும் முனிவர்கள் மற்றும்
ஸ்ரீ பிரம்மராட்சதை அம்பிகை, ஸ்ரீ வீரபத்ரகாளியம்மன் ஆகிய தெய்வங்கள் உடனிருந்து சுடலை ஐயாவின் சினத்தை தனித்தனர்...

அதன் பிறகு நமது கோவிலுடைய ஐயா மாயாண்டியின் அருமை பெருமைகளை அந்த பகுதியில் உள்ளவர்கள் உணர்ந்து கொண்டு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தார்கள் ஊர் வளம் பெற்றது ஐயா மாயாண்டியை வந்து வழிப்பட்டு வந்தவர்கள் அனைவரும் நலம் பெற்றார்கள் எல்லா செல்வங்களையும் கிடைக்க பெற்றார்கள்...


இதனை அறிந்த நமது கோவிலை நிறுவிய அந்த சமுதாய முன்னோடிகள் மாயாண்டிக்கு பூஜை வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தனர்...

இத்தகைய ஒரு பெரிய மாய சக்தியாக இருந்த நமது ஐயா மாயாண்டிக்கு ஓலைக்கீற்றில் உள்ள கோவிலை எடுத்து புதுப்பித்து ஒரு பெருங்கோவிலாக கட்டி வந்தார்கள் கோவிலை நிறுவிய சமுதாய மக்கள்...

இந்த நிலையில் ஐயா மாயாண்டி சுடலைக்கு கோவிலை கட்டிய சுந்தரபாண்டியபுரத்து அந்த சேனைத்தலைவர் சமுதாய மக்கள் சிலர் ஆழ்வார்குறிச்சியில் குடியேறினர்...

அவர்கள் ஐயா மாயாண்டிக்கு வாராந்திர பூஜை செய்ய முக்கியமான செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பல விதமான பூஜைகளை செய்து வழிப்பட்டு வந்தார்கள்...

இச்சமயத்தில் அதனை தொடர்ந்து வந்தார்கள்.
சேனையர் குல முன்னோடிகள் தங்களுக்கு இஷ்டப்பட்ட குலதெய்வங்களை ஐயா மாயாண்டி சுடலையின் ஆலயத்தில் வைத்து அந்த பரிகார தெய்வங்களுக்கும் நிலையம் கொடுத்து பூஜைகள் செய்து வழிப்பட்டு வந்தார்கள்...

அதனை தொடர்ந்து கோவில் கொடை நடத்த அந்த சமுதாய மக்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து விழா நடத்த முடிவு செய்தனர்கள்...

விழாவின் போது அருள் வந்து ஆடும் கோமரத்தாடி இந்த இடத்தில் பட்டாணியாருக்கும் ஒரு நிலையம் போட்டு கொடுக்குமாறு கூறினார் அதன் பிறகு அந்த சமுதாய முன்னோடிகள் பட்டாணியாருக்கும் ஒரு நிலையம் போட்டு கொடுத்து படையல் வைத்து வழிப்பட்டனர்

விழாவின் போது ஆழ்வார்குறிச்சியில் குடியேறிய அந்த சமுதாய மக்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள சமுதாய மக்களையும் அழைத்து கோவில் திருவிழாவை மிகவும் சிறப்பாக நடத்தி வந்தார்கள்

வேண்டியவர்க்கு வேண்டும் வரம் கொடுப்பதிலும் தன்னை நாடி வரும் மக்களுக்கும் சுகமான சுகவாழ்வும் ஆரோக்கிய வாழ்வும் அளிக்கிறார் ஆழ்வார்குறிச்சி ஆற்றங்கரை
ஸ்ரீ சுடலை மாடசுவாமி...

அதனால் அந்த பகுதி முன்னோடிகள் அவரை பெருமையோடும் பல விதமான(பெயர்களில்) திருநாமங்களில் அழைத்து வணங்கி வந்தனர்கள்...

இதனை தொடர்ந்து எப்போதும் வற்றாத நதியாக ஓடி கொண்டு இருக்கும் அந்த அட்டகசமான வீரநதி வறட்டை நதி என்றும் சொல்லும் _இராமநதி_ ஆற்றங்கரையோரம் அந்த கருவேலங்காட்டுக்குள் மயானம் அருகே ஈசான மூலையில் மருதமரத்தடியில் அந்த _ஸ்ரீ காக்கும் பெருமாள் சாஸ்தாவின்_ வாசலின் எல்லையில் அமைந்து இருக்கும் _பொறிபொருத்த தெய்வமான_ கேட்பவர்களுக்கு கேட்கும் வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக திகழ்வதால் ஐயாவை *ஸ்ரீ சக்ரவர்த்தி மாயாண்டி சுடலை* என்று பெருமையுடன் பெரும் புகழோடும் அந்த பகுதி மக்களால் போற்றப்படுகிறது...

 _கருமருது செம்மருது கட்டங்கரு கசத்தில்_ _வீற்றிருக்கும் ஆழ்வை அரசன்_

அதனை தொடர்ந்து இந்த கோவிலை நிறுவிய அந்த சமுதாய முன்னோடிகள் ஒரு சிலர் பிழைப்பிற்காக வெளியேறி தங்கி வசித்துவந்தார்கள் பின்னர் அதனை தொடர்ந்து சில பேர்களும் அந்த அந்த பக்கத்து மற்றும் தூரத்து ஊர்களில் அவர்களுக்கு தெரிந்த தன் குல தொழில்களையும் பிற மற்ற தொழில்களையும் செய்து வந்தார்கள்.

அதன்படி பிழைப்பிற்காக தொழில் தொடங்கிய ஊர்களிலே அவர்கள் சில பேர் ஆங்காங்கே குடியேறி  வசித்து வந்தார்கள் நமது கோவில் கொடை விழாவின் போது மட்டும் வந்து விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தி வந்தார்கள் கோவில் வரிகாரர்களும் கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கெடுத்தனர் அந்த சமுதாய வாரிசுகளும் மக்களும் தொடர்ந்து அதிகமாகி வந்தனர்கள்...

கோவில் திருவிழாவின் போது அந்தந்த ஊர்களில் உள்ள அந்த சமுதாய வரிதாரர் மற்றும் மக்கள் அனைவரும் கலந்து விழாவினை நடத்தி பெரும் புகழோடு பரப்பி பெருமை சேர்க்கும் வகையில் மிகவும் சிறப்பாக நடத்தி வந்தார்கள்...

நமது ஆலயத்தில் திருவிழா சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறுகிறது ஞாயிறு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்கள் விழா கோலாகலமாக மிகவும் பிரமாண்டமாக நடைபெறுகிறது புதன்கிழமை பகலில் ஸ்ரீ சின்ன நம்பி சுவாமிக்கு சிறப்பு வில்லிசையுடன் பூஜைகள் நடைபெறுவதோடு திருவிழா நிறைவு பெறுகிறது...

எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .
பட்டங்களை சொல்

சேனைத்தலைவர் #பிள்ளைமார்
சேனைத்தலைவர் #மூப்பனார்
சேனைத்தலைவர் #முதலியார்
சேனைத்தலைவர் #செட்டியார் என்று

ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar

வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in

மேலும் உங்கள் ஊர் கோவில் திருவிழா அல்லது வேறு ஏதேனும் சேனைத்தலைவர் சமுதாய நிகழ்ச்சிகள் நடந்தாலும் உங்கள் போட்டோ  அல்லது திருவிழா பேனர் , வீடியோ போன்றவற்றை அனுப்புங்கள் .

சேனைத்தலைவர் மீடியா 2.0
வாட்சப் நம்பர் : 9944253204




ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...