தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
முருக பெருமானின் படைத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி இனம், கொடிக்கால் பிள்ளைமார்,கொடிக்கால் மூப்பனார் இனம்,சேனை பெரு வணிகம் செய்த சேனையங்காடிகள் இனம்,சோழர், பாண்டியர்களால் இலைவாணிய வரி விலக்கு கொடுக்கப்பட்ட சேனை குடி இனம் ,சோழர்களின் போர் குடியாம் “மூன்று கைமா சேனையார்” இனம் .சோழர்கள் காலத்தில் சேனை பெரு வணிகம் செய்ததால் சேனை கொண்ட செட்டியார்,சேனை செட்டியார் என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட தமிழ் மூத்த குடி மக்கள்,தொழில் முறையில் சேனை முதலியார் என்று அழைக்கப்பட்ட என் குல சேனை முதலி மக்கள்.
Saturday, 11 April 2020
தில்லையில் தேரோட்டிய இலைவாணியன்
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
Tuesday, 7 April 2020
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் - சேனைத்தலைவர் வம்சம் .
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் - சேனைத்தலைவர் வம்சம் .
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் மற்றும் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோருக்கு குருவாக இருந்து தமிழுக்கு தொண்டாற்றிய எங்கள் சேனைத்தலைவர் குல செம்மல் ஐயா காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் அவர்களுக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சார்பாக பாதம் தொட்டு அவரின் தமிழ் சேவைகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
அவரின் வரலாறை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம் , அவரை பற்றி தெரிந்து கொண்டு நம் சேனைத்தலைவர் குல பெருமையை தெரிந்து கொள்ளுங்கள்
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் (1791-1871) என்பவர் 18 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை , திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார், அஷ்டாவதனம் சபாபதி முதலியார் ஆகியோரின் ஆசிரியர் ஆவார்.
மகாவித்துவான் சபாபதி முதலியார் சேனைத்தலைவர் குலத்தில் 1791 இல் காஞ்சிபுரத்தில் பிறந்தார்.இவர் மகாவித்துவான் என்று அழைக்கப்பட்டவர். காஞ்சி பச்சையப்பன் பள்ளியில் சில காலம் தமிழாசிரியராக இருந்தவர். இவர் உரையாசிரியர் எனவும் சிறப்பிக்கப்பட்டவர்.
இவரிடம் பயின்ற மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை , வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார், அஷ்டாவதனம் சபாபதி முதலியார் ,சிதம்பரம் சபாபதி பிள்ளை (இராமலிங்க சுவாமிகளின் அண்ணன்) ஆகியோர் ஆவர்[2].இவரிடம் பயின்ற சிதம்பரம் சபாபதி பிள்ளை(இராமலிங்க சுவாமிகளின் அண்ணன்), குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்து, புராண விரிவுரையாளரானார். சிதம்பரம் சபாபதி பிள்ளை இன் குடும்பம் வறுமையில் இருந்து சற்று மீண்டது.சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் விரும்பினார். ஆனால், இராமலிங்க சுவாமிகள் அவர்களுக்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சிதம்பரம் சபாபதி பிள்ளை.
இராமலிங்க சுவாமிகள் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் இராமலிங்க சுவாமிகளை கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்க சுவாமிகள்,
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”
என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க சுவாமிகள் பாடுவதைக் கண்ட காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.
இராமலிங்க சுவாமிகள் அவரின் அண்ணன் சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார் .
முதன்முதலில் சைவத் திருமுறைகளை அச்சிற் பதித்தவர் இவர் தான் .இவரது தேவாரப் பதிகங்கள் திருஞான சம்பந்த சுவாமிகள் திருமுறை 1864 இல் சென்னை கலாநிதி அச்சுக்கூடத்தில் அச்சிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
இயற்றிய நூல்கள்
--------------------------
திருஞானசம்பந்த சுவாமிகள் தாலாட்டு
திருக்குழந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ்
அருணாசல சதகம்
நீதிநெறி விளக்கவுரை
திருக்கழுக்குன்றச் சிலேடை
பிரமோத்தரக் காண்டப் பொழிப்புரை
சைவ சமய விளக்க வினாவிடை
பதிப்பித்த நூல்கள்
----------------------------
இவரது சைவ சமய விளக்க வினாவிடையையும் ரெவ்.டி.ஃபவுல்க்ஸ் (T.Foulkes) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். “The work Contains a useful Compendium of Saivism என்று ஜான் மர்டாக் தமது நூலில் கூறியுள்ளார்.திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதியை 1837 இல் திருவேங்கடாசல முதலியாரது சரஸ்வதி அச்சுக்கூடத்தில் பரிசோதித்து அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். பல நூல்கள் இவரது மேற்பார்வையில் அச்சிட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.
திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி (1837),
பரமராசிய மாலை (1836),
திருஞானசம்பந்த சுவாமிகள் திருமுறை (1864),
தேவாரத் திருப்பதிகத் திருமுறை (1866),
சுந்தரமூர்த்தி பதிகம்,
திருநாவுக்கரசர் பதிகம் (1867),
பெரியபுராணம் (1870)
ஆகிய பதிப்புகளை இவர் வழங்கியுள்ளார். ஆறுமுக நாவலர் 1884 இல் பதிப்பித்த பெரியபுராணப் பதிப்பில் 4286 பாடல்களே உள. ஆயின், இதற்கு முன் இவர் பதிப்பித்த (1870) பெரியபுராணத்தில் 4299 பாடல்கள் உள்ளன
இவர் 1871 ஆம் ஆண்டு மறைந்தார்.தமிழக அரசு சென்னை கொண்டித் தோப்பில் உள்ள ஒரு தெருவிற்கு காஞ்சிபுரம் சபாபதி முதலியார் என்று பெயர் அறிவித்து கவுரவ படுத்தி உள்ளது .
குறிப்பு : இவரின் பிறந்த வருடம் 1791 காலங்கள் ஆதலால் இவரின் பிறந்த தேதி கண்டுபிடிக்க இயலவில்லை , இவரின் புகைப்படமும் ,பிறந்த தேதியும் தேடி கொண்டு இருக்கிறோம் . , இவரை பற்றி எவரேனும் தெரிந்து இருந்தால் தகவல் தரவும் .
இவர் எழுதிய "சேனைத்தலைவர் மரபு விளக்கம்" இவர் மறைவுக்கு பிறகு அழிக்கப்பட்டுள்ளது, என்ன காரணம் என்று தெரிய வில்லை .மேலும் இவர் சேனைத்தலைவர் குலத்தை சார்ந்தவர் என்பதை , செங்குந்தர்களை பற்றி ஆராய்ந்து கொண்டு இருக்கும் பொழுது , செங்குந்தர்களை பற்றி சொல்ல கூடிய புத்தகத்தில் , நமது இலைவாணிய வம்சமாகிய சேனைத்தலைவர் குலத்தை சார்ந்த ஐயா காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் அவர்களை பற்றி குறிப்புகள் காஞ்சிபுரம் செங்குந்தர்களை பற்றிய புத்தகத்தில் இலைவாணிகர் என்று குறிப்புக்கள் உள்ளது.
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயின்றவர்கள்
-------------------------------------
1.திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ,
2.வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ,
3.அஷ்டாவதனம் சபாபதி முதலியார் ,
4.சிதம்பரம் சபாபதி பிள்ளை (இராமலிங்க சுவாமிகளின் அண்ணன்)
5.சிதம்பரம் பரசுராம பிள்ளை
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயின்றவர்களை பார்க்கும் பொழுது அக்காலத்தில் நமது சேனைத்தலைவர் குலம் சிறந்து விளங்கி உள்ளது என்பது புலனாகிறது.
<--------><--------><--------><--------><-------->
வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சம்
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
சுந்தர சேனைத்தலைவர்
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர் #காஞ்சிபுரம்
#பிள்ளை #சைவ #சைவம் #கொடிக்கால் #கொடிக்கால்வம்சம் #முதலியார்
#மகாவித்துவான் #சபாபதி #சபாபதிமுதலியார்
senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in
ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்
ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...
-
மதுரை ,தேனி , போடி பகுதிகளில் பிள்ளை என்ற பட்டத்துடன் வாழும் சேனைத்தலைவர் இன மக்களுக்கு அனைத்திந்திய முதலியார் மற்றும் பிள்ளைமார் என்ற அம...
-
சேனைத்தலைவர் Jump to navigation Jump to search சேனைத்தலைவர் வகைப்பாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குல தெய்வம் (ஆண்) முருகன் ...
-
கொடிக்கால் பிள்ளைமார் - சேனைத்தலைவர் - வெற்றிலை வணிகர்கள். ------------------------------------------------------------------------------...
-
பாண்டிய நாட்டில் சேனையார் இன மக்கள் வெற்றிலை கொடிக்கால் பயி ரி டுகின்றனர்.இவர்களின் இன பிரிவுகள் 1 . கொடிக்கால் பிள்ளைமார் 2 . கொடிக்கால...
-
வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அணியும் தாலி முறை - வருடம் 1800 தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் ) - பாகம் 4 —————————————————————— ...
-
ஹொய்சள ஆட்சியாண்டு வீர நரசிம்மன் மன்னவன் காலத்தில் நம் குல சேனைத்தலைவரான மாவீரன் என்பான் திருவண்ணாமலையில் நடந்த போரில் என்பது வயதான ம...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சேனைத்தலைவர் புதுக்கோட்டை சமஸ்தானம் - 1934 வருடம் - பாகம் 1 —————————————————————— சேனைத்தலைவர் சாதி அடிம...
-
#சேனைத்தலைவர் களின் #கொடிக்கால் வேளாண்மை கொடி , குயில் கொடி , அது அக்காலத்தில் கொடிக்கால் வேளாளர்களின் கொடி யாக இருந்து வந்துள்ளது .இதில் ...