Friday, 12 November 2021

சேனைத்தலைவர் செப்பு பட்டயம் - வீரப்பெருமாள் சரித்திரம் ” - கி.பி. 1439

  சேனைத்தலைவர் செப்பு பட்டயம்  - #வீரப்பெருமாள் சரித்திரம் ”  - கி.பி. 1439

#நடுகற்கள் #நவகண்டம் 



தில்லைக் காளியம்மன் கோயிலில்

தேர் ஓடாமல் நின்று விட்டது. பிராமணப் பெண் ஒருத்தியின் உடலில் புகுந்த தில்லைக்காளி, ஆவேசம் வந்து/சாமியாடி தேர் ஓட  உயிர்ப்பலி கேட்கிறாள்.


சிதம்பரம் தில்லை காளியின் #பாதசேகரர் #சேனைக்காவலர் , #வீரபாகுவம்சத்தார்  சேனைத்தலைவர் குலத்தில் 

#பழையதரையன் எனும் #சேனைத்தலைவரின் மகன் #வீரப்பெருமாள் என்பான்,ஓடாத தேரினை ஓட வைக்க தன் உயிர் ஈந்தான்.


இது குறித்த செய்தி அடங்கிய 179 வரிகள் கொண்ட #செப்பேட்டின் காலம் கி.பி.1439 .

அகவற்பா வடிவில் #ஓலைச் சுவடியிலும் எழுதப்பட்டுள்ளது.


இதன் வழி அறியலாகும் செய்திகள்:


🔰தலைப்பலி வீரனுக்கு வழங்கப்படும் சலுகைகள்🔰

*எடைக்கு எடை பொன் (காசுகள்) வழங்கப்படும்

*அவருடைய வேண்டுகோள்கள் நிறைவேற்றப்படும்


🔰தலைப்பலி தருபவனின் பண்பு நலன்கள்🔰

*சாதி மேன்மை உடையவன் (#சேனைத்தலைவர் குலம் - #வீரபாகுவம்சத்தார் )

*வீராதி வீரன்

*உபய குலசுத்தன்

*ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை

*அங்கயீனம் இன்றி இருத்தல்

*திருப்பாலகன்

*கல்வியும் மானமும் உரியவன்


🔰தலைப்பலி வீரனின் வேண்டுகோள்கள்🔰

*பொன்னும் பொருளும் வேண்டா.

*தன் சேனைத்தலைவர் குலத்திற்கு இராஜவீதியில் 70 மனை

*தீமைக்குப் பாவாடை

*பல்லக்கு எரிபாவாடை

*நடை பாவாடை

*தில்லை நாயகி கோயிலில் இருந்து தீர்த்தம், திருமாலை,இடை பரிவட்டம், விபூதி,சந்தனம் ஆகியவற்றை கோயில் பண்டாரங்கள் கொண்டு வரவேண்டும்.

*தன் சாதிக்கென சுடலை(சுடுகாடு)வேண்டும்.

*இக்கோயிலில் தனக்கு ஒரு சிலை வைக்க வேண்டும்.

*எந்த தலத்திலாவது தேர் ஓடாமல் நின்று விட்டால் தன்னை அடியார்கள் நினைத்த உடன் தேர் ஓடி அருள் செய்ய வேண்டும் என தில்லை நாயகியிடம் வரம் வேண்டுதல்.

*தில்லை நாயகி பூசையைச் சிறப்பாக செய்ய வேண்டும்.


🔰தலைப்பலி தரும் முன் வீரன் மேற்கொண்ட சடங்குகள்🔰

*சிவகெங்கையில் ஸ்நானம் செய்தல்

*அநுட்டானம் முடித்தல்

*அம்பலவாண சாமி,சிவகாமி அம்மனை தெரிசனம் செய்தல்

*அன்னதானம், சொர்ண தானம்,வஸ்திர தானம்,பூமி தானம், கன்னிகா தானம் தருதல்


🔰தலைப்பலி தருவதற்கு முன் வீரன் செய்தவை🔰

வீரன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு தேரின் முன் நிறுத்தப்படுகிறான்.அவன் தில்லை நாயகியை வணங்கி வலது கையில் பிடித்திருந்த உடை வாளினால் தன் தலையை அரிந்து காளியின் முன் வைத்தான்.


🔰இதன் பிறகு தேர் ஓடியது.

🔰இச்செப்பேட்டின் வழியாக பண்டாரங்களே தில்லைக் காளிக்குப் பூசையைச்  செய்து வந்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.


கி.பி.1439 வருடத்தில் சேனைத்தலைவர் குலத்திற்கு எழுதப்பட்ட செப்பு பட்டய உரிமை இன்றளவும் இக்கோவிலில் சேனைத்தலைவர் இனத்திற்கு மட்டுமே உள்ளதென்றால் சேனைத்தலைவர்  இனத்தின் பெருமை சொல்லி தெரிய வேண்டியதில்லை .


Reference

---------

நடுகற்கள் - ச.கிருஷ்ணமூர்த்தி 

வீரப்பெருமாள் செப்பு பட்டயம் - தமிழ்நாடு ஆவன காப்பகம் , சென்னை  


#உயிர்க்கொடையாளிகள்

#தலைப்பலி_சிற்பம்

#தில்லைக்காளி_கோயில்


சுந்தர சேனைத்தலைவர் - 9944253204 

சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார்  வரலாறு மீட்பு குழு


🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰


எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று .

பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது .

பட்டங்களை சொல் 


சேனைத்தலைவர் #பிள்ளைமார் 

சேனைத்தலைவர் #மூப்பனார் 

சேனைத்தலைவர் #முதலியார் 

சேனைத்தலைவர் #செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே .


சேனைத்தலைவர் மீடியா 2.0


#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்

#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்

#குடையார் #சேனைக்குடையார்

#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்

#வீரத்தளபதி #படைத்தலைவர்

#பெரும்படையார் #படை

#சேனைபெரும்படையார்படை

#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம் .

No comments:

Post a Comment

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...