Sunday, 29 November 2020

கொடிக்கால் #சேனைத்தலைவர் குலத்தில் அவதரித்த கிழார்.தி.சண்முக மூப்பனார்


கொடிக்கால் #சேனைத்தலைவர் குலத்தில் அவதரித்த 

கிழார்.தி.சண்முக மூப்பனார் 


இவரின் காலம் 1850 இல் இருந்து 1940 வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது .( முதல் உலக போரில் இவரின் கப்பல் தாக்கப்பட்டதாக தகவல் உள்ளது , 1914 முதல் உலக போர் அதற்க்கு முன் உள்ள வருடங்களை கணித்து இவர் காலம் 1850 இல் இருந்து 1940 வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது )
#சேனை #குல #வேளாளர் மரபில் பரம்பரை செல்வ குடியில் திருநெல்வேலி , பேட்டை மாநகரில் திருவாளர் திரவிய மூப்பனார் அவர்களுக்கும் , திருமதி குப்பம்மாள்
அம்மையாருக்கும் செல்வ செழிப்போடு பிறந்தவர் பெரும் நில கிழார்
தி .சண்முக மூப்பனார் .
வருடம் 1900 முன்பாகவே கப்பல் வாணிகம் செய்த பரம்பரையில் பிறந்த இளவல் .
"தி .ச " என்னும் பெயர் அக்காலத்தில் மிக பிரபலமாக இருந்தது , ஏனெனில் தூத்துக்குடி , நாகப்பட்டினம் , சீர்காழி , சென்னை பட்டினம் , இரங்கோன் , கொல்லம் , கொச்சி , பம்பாய் , கராச்சி , கொழும்பு , பினாங்கு , சிங்கப்பூர் , ஜாவா ஆகிய பல இடங்கள் பல நாடுகளில்
பல கிளைகளை ஸ்தாபித்து தன் S.A.K என்னும் நிறுவனத்தை வெற்றி கரமாக நடத்தி வந்தவர்.
திருச்செந்தூர் முருகன் மேல் தீராத காதலை கொண்டவர் .இவர் குடும்பத்தில் எந்த சுப நிகழ்வுகள் நடந்தாலும் அது திருச்செந்தூர் கோவிலில் வைத்து தான் நடைபெறும் .
1914 முதல் 1918 வரை நடைபெற்ற முதல் உலக போரில் இவரின் கப்பல் தாக்கப்பட்டதாகவும் , மற்றும் இவரின் தொழில் அனைத்தும் நஷடம் அடைந்து விட்டதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்த பொழுது திருச்செந்தூர் முருகன் மேல் வைத்த நம்பிக்கையில் கப்பல் கரை சேர்ந்தது .
இதை கேள்விப்பட்ட கிழார் சண்முக மூப்பனார் பெரும் பொருட் செலவில் , நவரத்தினங்கள் இழைத்த தங்க தட்டு மணி பதக்கத்தை உடனே திருச்செந்தூர் கொண்டு சென்று , சண்முக பெருமானுக்கு அணிவித்து ஆராதனை செய்த பிறகே கப்பலில் இருந்து தன சரக்குகளை இறக்கினார் .
மேலும் திருச்செந்தூர் முருகன் மேல் கொண்ட பக்தியால் சண்முக பெருமானுக்கு தங்க பூணுல் அணிவித்து மகிழ்ந்தார் , இந்த் கால கட்டத்தில் திரு சண்முக மூப்பனார் அவர்களுக்கு 36 வயது .
அக்காலத்தில் இந்தியாவில் உப்பு தொழில் செய்த முதல் பத்து கம்பெனிகளில் இவர் கம்பெனியும் அடக்கம் , தூத்துக்குடி முழுவதும் இவரின் உப்பளங்களே இருந்தன .
பேட்டை சர்க்கரை விநாயகர் தேவஸ்தானம் இவரின் முன்னோர்களால் கட்டப்பட்டதே ஆகும் .
திருச்செந்தூர் கோவிலில் #வீரபாகு #சேனைத்தலைவர் வம்சத்தின் உரிமைகள் .
------------------------------------------------
திருச்செந்தூர் கோவிலில் 1800 கால கட்டத்தில் சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு இவரின் தலைமையில் இருந்த கட்டளைகள்
மூன்றாம் திருநாள் மண்டகப்படியும் ,
ஒன்பதாம் திருநாள் சேர்க்கை அபிஷேகம் கட்டளையும் ,
அர்த்தசாம பால் பாயாசகட்டளையும்
இன்றளவும் இவை நடைபெற்று கொண்டு இருக்கின்றன .
திருச்செந்தூர் சண்முக பெருமான் வீதி உலா வரும் பொழுது இன்றளவும் சேனைத்தலைவர் மண்டபத்தில் இறங்கி ஆராதனை செய்த பிறகே செல்வார் , வேறு எவருக்கும் இல்லாத இந்த பெருமை சேனைத்தலைவர் இனத்திற்கே இன்றளவும் உண்டு .
மேலும் 12 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் குடமுழுக்கு அல்லது கும்பாவிஷேகம் அன்று முதல் அபிஷேகமும் மற்றும் முதல் பட்டும் சாத்துகிற கட்டளை 100 வருடங்களுக்கு முன்னாலும் இன்றும் சேனைத்தலைவர் சமுதாயமே சிறப்பாக செய்து கொண்டு வருகிறது .
ஐயா கிழார் .தி .சண்முக மூப்பனார் காலம் முழுவதும் காலில் செருப்பு அணியாமல் , சாதாரண வேஷ்டி மற்றும் தோளில் சிறு துண்டு என எளிமையான வாழ்க்கை முறை வாழ்ந்து தன்னை திருச்செந்தூர் முருகனிற்கு தன்னை அர்ப்பணித்தவர் .
ஐயா கிழார் .தி .சண்முக மூப்பனார் அவர்களை போற்றி புகழ்வோம்.
இந்த புத்தகம் சுமார் 70 வருடங்களுக்கு முன்னாள் 1949 இல் எழுதப்பட்டுள்ளது . இந்த புத்தகம் கடந்த மாதத்தில் சென்னையில் ஒரு இரும்பு கடையில் கிடைக்க பெற்றுள்ளது .இத்தகவல் கிடைக்க உதவி செய்த தமிழ்நாடு தொல்லியல் கழக நண்பர்களுக்கு எங்கள்
சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார் வரலாறு மீட்பு குழு
நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .
71 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டுள்ள நமது இனத்தின் பெருநிதிக்கிழார் ஐயா தி.சண்முக மூப்பனார் போன்று வாழ்வாங்கு வாழ்ந்த நம் இனத்தின் முன்னோர்கள் எத்தனை பேர் என்று இன்று வரை தெரியவில்லை , தேடுவோம் நம் இனத்தின் வரலாறுகளை , நம் இனத்தின் பெருமைகளை
சேனைத்தலைவர் இனத்தின் முன்னோடிகள் அல்லது செப்பு பட்டயங்கள் அல்லது ஓலை சுவடிகள் அல்லது புத்தகங்கள் அலல்து நம் இனத்தின் பெருமை சாற்றும் எதுவாகினும் உங்கள் வீடுகளில் இருந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள் .
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க

No comments:

Post a Comment

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...