Sunday, 29 November 2020

#சேனைத்தலைவர் களின் #கொடிக்கால் வேளாண்மை கொடி

 #சேனைத்தலைவர் களின் #கொடிக்கால் வேளாண்மை கொடி , குயில் கொடி , அது அக்காலத்தில் கொடிக்கால் வேளாளர்களின் கொடி யாக இருந்து வந்துள்ளது .இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் நம் இனம் மட்டுமே கொடிக்கால் க்கு என்று பாத்தியப்பட்ட ஒரே இனம் என்று .

#வலங்கை சாதியான #இலைவாணியர் குக்கூ கொடி பயன்படுத்தி உள்ளனர் என்று பின்வரும் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது .
"On the Original Inhabitants of Bharatavarsa or India"
குக்கூ கொடி என்பது சோழர் காலத்தில் வேளாளர்கள் பயன்படுத்தியுள்ள மேழிக்கொடி , சிங்க கொடி , குயில் கொடி களில் ஒன்றாகும் .
#இலைகூலம் - வெற்றிலை பயிரிட ,
#இலைவாணியம் - வெற்றிலை விற்க இவை இரண்டும் சேனைத்தலைவர் இனத்திற்கு விதிக்கப்பட்ட வரிகள் சோழர் பாண்டிய காலத்தில்.
கொடிக்கால் பிள்ளை என்று சொல்லி சொல்லி தன் தனி பெரும் அடையாளமாக கொண்ட #இலைவாணியன் ,#கொடிக்கால் வேளாளர், #சேனைத்தலைவர் ,#சேனைக்குடையார் என்ற பெயரை இழந்து கொண்டு வருகிறது .
எம் கொடிக்கால் இனமே , கொடிக்கால் வேளாண்மை செய்த ஒரே இனம் ,போடிநாயக்கனூரில் மட்டும் 6000 தலைக்கட்டுகள் மேல் கொண்டுள்ள சேனைத்தலைவர் இனம் தேனி மாவட்டத்தில் தனி பெரும் இனமாக இன்றும் உள்ளது ஆனால் கொடிக்கால் பிள்ளைமார் பட்டத்தில் இன்றும் உள்ளது , வெற்றிலை விவசாய கூட்டுறவு வங்கி 1990 களில் ஆரம்பித்த ஒரே இனம் சேனைத்தலைவர் இனம் தான் , இன்றும் வெற்றிலை விவசாயிகளுக்காக இன்றும் செயல்பட்டு கொண்டு உள்ளது .
பிள்ளைமார் என்ற பட்டத்தை நீ சொல்வதால் உன் அடையாளம் மறைக்கப்படுகிறது .சேனைத்தலைவர் என்று சொல் போடிநாயக்கனூர் இல் மட்டும் 6000 தலைக்கட்டுகள் கொண்டுள்ள எம் பெருமைமிகு இனமே நீ எப்பொழுது உன் அடையாளத்தை மீட்க போகிறாய் .
சேனைத்தலைவர் இனமே உன்னை வைத்து அரசியல் செய்து கொண்டு உள்ள அமைப்புகள் மற்றும் கட்சிகள் பல உள்ளன .அவை அனைத்தும் கொடிக்கால் பிள்ளைமார் என்று மட்டும் சொல்லி உன் இனமான சேனைத்தலைவர் இனத்தை விட்டு விட்டனர் ஏனோ .
இன்றும் துணை முதலமைச்சர் ஓ .பி .எஸ் அவர்கள் தேனி மாவட்டத்தில் ஜெயிப்பதற்கு உறவுதுணையாக இருக்கும் ஒரே இனம் சேனைத்தலைவர் இனம் மட்டுமே .வேறு இனம் கிடையாது புரிந்து கொள் பட்டத்தை விடு , பிள்ளைமார் அமைப்புகளை விடு #சேனைத்தலைவர் என்று உன் இனத்தை கொண்டு வா அது தான் நீ .
துணை முதலமைச்சர் ஓ .பி .எஸ் எப்பொழுது வந்து ஓட்டு கேட்டாலும் அவர் வருவது சேனைத்தலைவர் திருமண மண்டபமே , கடைசியாக நடந்த சந்திப்பில் அவர் சொன்னது வ.உ.சி ஐயா அவர்களுக்கு வெண்கல சிலை வைப்பதாக சொன்னார் , அரசியல் செய்பவர்களுக்கு நன்றாக தெரியும் இவர்கள் #சேனைத்தலைவர் பிள்ளை என்று , வ.உ.சி ஐயா அவர்கள் #சைவபிள்ளை என்று ஆனாலும் கொடிக்கால் பிள்ளை என்று நீங்கள் சொல்லி கொண்டுள்ளதால் இன்று வரை அரசியலிலும் நமக்கான சலுகை எதுவும் இல்லமால் பிள்ளைமார் என்று சொல்லி ஒதுக்கி விடுகின்றனர் .
கடந்த வருடத்தில் புயலால் ஏற்பட்ட வெற்றிலை விவசாய நஷ்ட்டத்திற்கு இது வரை சலுகை கிடைக்க வில்லை ஆனால் நீங்கள் பயன்படுத்திய பட்டத்தை வைத்து அனைவரும் தன்னை முன்னிலை படுத்தி உள்ளனரே தவிர கொடிக்கால் இனத்திற்கு எதுவும் இல்லை , இது வரை கொடிக்கால் வெற்றிலை கென்று எந்த ஒரு சலுகையும் இல்லை , சன்மானமும் இல்லை .
கடைசி வரை இந்த குல தொழில் அழிவது மட்டும் உண்மை , நீங்கள் பட்டத்தை விட்டு என்று இனமாக சேனைத்தலைவர் இனமாக வரும் பொழுது கண்டிப்பாக நமக்கான அனைத்தும் கிடைக்கும் .
சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் தேனி மாவட்டத்தில் அதிக பெரும்பான்மையாக பல தலைமுறையாக உள்ள ஒரே இனம் சேனைத்தலைவர் இனம் மட்டுமே .
உன் அடையாளமே கொடிக்கால் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் தான் அதை மறந்து விடாதே .
பெருமை மிகு #சோழ மண்டல சதகத்தில் #குடையார் குலம் என்று சொல்ல படுகிற சேனைத்தலைவர் இனமே பெருமை கொள் .
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைகூலம் #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
 






 

No comments:

Post a Comment

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...