ஆர்.பி.செட்டி - #சேனைத்தலைவர் வம்சம்
"காந்தி தங்கிய இல்லம் "- பொறையாறு , #நாகப்பட்டினம் மாவட்டம்
ஆங்கிலேயர்களை எதிர்த்து காந்தியடிகள் சத்தியாகிரக போராட்டம் நடத்திய போது , அவருக்கு துணையாக நின்றவர்களில் முக்கியமானவர்கள் , பொறையார் குமரன் கோவில் தெருவை சேர்ந்த பாலகுரு செட்டியாரும்(ஆர்.பி.செட்டி) , தில்லையாடி வள்ளியம்மை யும் தான்.
கோபால கிருஷ்ண கோகலே , காந்தியடிகள் போன்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர் ஆர்.பி.செட்டி.
காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த பொழுது அவருக்கு நெருக்கமாக இருந்த நண்பர் டர்பன் ஆர்.பி.செட்டி இவரின் முழு பெயர் ஆர் .பாலகுரு செட்டியார் .இவர் தென் ஆப்பிரிக்காவில் பெரும் வணிகம் செய்து கொண்டு இருந்தார் . கோபால கிருஷ்ண கோகலே , காந்தியடிகள் போன்றவர்கள் இவரை பாசமாக ஆர்.பி .செட்டி என்றே அழைப்பர்.
இவரை பற்றின தகவல்களை தமிழக அரசு பாதுகாத்து வரும் தரங்கம்பாடி ஓலை ஆவணங்களில் பின் வருமாறு உள்ளது .
"தென் ஆப்பிரிக்காவில் 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் மகாத்மா காந்தியடிகள் அவர்களுக்கு தமிழ் கற்பித்த தில்லையாடி கண்ணியப்ப செட்டியார் என்பவரும் பொறையாறு பாலகுரு செட்டியார் என்பவரும் தரங்கம்பாடியை ஒட்டியுள்ள ஊர்களை சேர்ந்த இலைவாணியர் என்கிற சேனைக்குடையார் இனத்தவராவார் . மேலும் ஒப்பந்த கூலியாக தென் ஆப்பிரிக்கா சென்ற தில்லையாடி வள்ளியம்மை "
ஒப்பந்த கூலிகளை பராமரித்து பண்ணையம் செய்த நிலச்சுவான்தார்கள் செட்டியார் என்ற சாதி பட்டம் புனையும் இலைவாணியர் (சேனைகுடையார் )இனத்தவராவார் .வெற்றிலை கொடிக்கால் பயிர் இடுவோராக அறியப்படும் இவ்வினத்தவர்கள் ,சேனையங்காடியார் என்றும்
சேனைக்குடியுடையார் அல்லது சேனைத்தலைவர் ,
சேனைக்குடையார் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றனர்.
என்று தமிழக தொல்லியல் துறை ஆவண படுத்தி உள்ளது .
தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் ,
தமிழக தொல்லியல் துறை
இதில் சேனைத்தலைவர் குல செம்மல் பெரும் வணிகர் ஆர்.பாலகுரு செட்டியார் அவர்கள் தென் ஆஃப்ரிக்காவில் இருக்கும் பொழுது காந்தியடிகளை தனது இல்லத்திற்கு வரும் படி கேட்டு கொண்டுள்ளார் .கண்ணியப்ப செட்டியார் ,பாலகுரு செட்டியார் , தில்லையாடி வள்ளியம்மை இவர்கள் அனைவரும் தரங்கம்பாடி யை சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்தவர்கள் ஆதலால்
காந்தியடிகள் 1915 மே 1-ஆம் தேதி தமிழகம் வருகை தந்தபோது, மாயவரம், தில்லையாடி, தரங்கம்பாடி, ராமாபுரம், பொறையாறு ஆகிய இடங்களுக்குச் சென்றார். பொறையாறில், தென் ஆப்பிரிக்காவில் அவர் அறிந்திருந்த வர்த்தக நண்பரான பாலகுரு செட்டியாரின் வீட்டுக்குச் சென்று தங்கிச் சென்றுள்ளார். பொறையாரில் சன்னிதி தெருவிலிருக்கும் கதவு எண் 17-இல் வீட்டின் முற்றத்தில், இது காந்தியடிகள் தங்கிய இடம் என்ற ஒரு கருங்கல் பதிக்கப்பட்டு இன்றும் இந்த இடம் போற்றப்பட்டு வருகிறது.
"காந்தி தங்கிய இல்லம்" என்ற கல்வெட்டை நிறுவியவர் அப்பொழுதைய தமிழக முதல்வர் திரு . கருணாநிதி ஆவார்.
மகாத்மா காந்தியடிகள் பொறையாறு பகுதியில் நமது சேனைத்தலைவர் குல செம்மல் வீட்டில் தங்கி இருந்ததன் விளைவாக சோனியாகாந்தி அவர்கள் நமது முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் சிலையை இங்கு திறந்து உள்ளார் .
மேலும் ராஜிவ் காந்தி அறக்கட்டளை மூலமாக இந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஆர்.பாலகுரு செட்டியாரின் பேரன் திரு ரத்தினவேல் செட்டியார் அவர்களிடம் சென்று கேட்ட பொழுது இல்லை இந்த வீடு வரலாற்று சிறப்பு மிக்க இடம் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடம் மேலும் இதில் காந்தியடிகள் தங்கி இருந்த வீடு இதை நங்கள் எவருக்கும் விக்க முடியாது என்று பதில் உரைத்துள்ளனர். இந்த நிகழ்வு நடந்து 30 வருடம் இருக்கும் அப்பொழுது அவர்கள் தருவதாக சொன்ன பணம் 50 இலட்சம் , இதில் இருந்து சேனைத்தலைவர் இனத்தின் பணத்திற்கு மயங்காத குணம் தெள்ள தெளிவாக நமது சேனைத்தலைவர் குல செம்மல் ஆர்.பாலகுரு செட்டி வம்ச மக்களிடம் இருந்து தெள்ள தெளிவாக தெரிகிறது .இன்றும் இந்த இடம் காந்தியடிகளின் நினைவு இடமாக ஐயா ஆர்.பாலகுரு செட்டியார் அவர்களின் கொள்ளுப்பேரன் திரு . பாலசுப்பிரமணிய செட்டியார் அவர்களலால் பாதுகாக்கப்பட்டு வருகிறது , 100 வருடங்களுக்கு மேலாக காந்தியடிகளின் நினைவுகளை தாங்கி கொண்டு நமது #சேனைத்தலைவர் பெருமக்கள் வாழ்ந்த வீடு இன்றும் , என்றும் நமது இனத்தின் பெருமையை பறை சாற்றி கொண்டு இருக்கும் .
ஐயா திரு .ஆர்.பாலகுரு செட்டியார் அவர்களின்
மகன் பெயர் திரு.ராமசாமி செட்டியார்
பேரன் பெயர் திரு.இரத்தினவேல் செட்டியார்
கொள்ளு பேரன் பெயர் திரு . பாலசுப்பிரமணிய செட்டியார் இவருக்கும் ஒரு மகள் இருக்கின்றார்கள்
ஐந்து தலைமுறையாக ஒரே வீட்டில் , காந்தியடிகள் தங்கி இருந்த வீட்டில வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் பெருமை மிக்க சேனைத்தலைவர் வம்சத்தின் சேனைக்குடி .
சேனைக்குடைய #செட்டியார் வகையறா வை சேர்ந்த சேனைத்தலைவர் குலத்தின் , இலைவாணிய வம்சத்தின் வணிக செம்மல் , இந்திய நாட்டின் தந்தை காந்தியடிகளின் நெருங்கிய நண்பர் ஆர். பாலகுரு செட்டியார் அவர்களை தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை வணங்குகிறது .
கடலூர் மாவட்டம், பண்ணுருட்டி நகரைசேர்ந்த நம் சேனைத்தலைவர் சமூக வழிகாட்டியமான திரு. S. G. தேவநாதன் செட்டியார் ஐம்பொன்னால் ஆன காந்தி சிலை அமைத்துள்ளார் , அவற்றினை
பற்றினை தகவல்களுக்கு
https://senaithalaivarhistory.blogspot.com/2020/02/s-g.html
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை.
இந்த தகவல் அனைத்தையும் ஒவ்வொருவராக விசாரித்து கிடைக்க துணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் . முக்கியமாக #திருவண்ணாமலை கணபதி ஐயா , நாகப்பட்டினம் சேனைத்தலைவர் மகாஜன சங்க தலைவர் #பொறையாறு சண்முகம் ஐயா ,மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் , மேலும் அன்போடு பேசிய ஆர்.பி. செட்டியார் அவர்களின் கொள்ளுப்பேரன் திரு.பாலசுப்பிரமணிய செட்டியார் அவர்களுக்கும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .
சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு கொஞ்சம் நஞ்சம் இல்லை ,
தெரிந்து கொள் உன் இனத்தின் வரலாற்று பெருமக்களை , வாழ்ந்த சரித்திரங்கள் அருட்பெருஞ்சொதி #வள்ளலார் அவர்களின் ஆசிரியர் நம் இலைவாணிய இனமே அவரின் சீடர் இலைவாணிய இனமே
இலைவாணிய வம்சத்தில் சேனைத்தலைவர் குலத்தில் பிறந்த நமது ஐயா காஞ்சிபுரம் மகாவித்துவான் #சபாபதி முதலியார் 18 ஆம் நூற்றாண்டு புலவர் பெருமகன் அவர்கள், இராமலிங்க அடிகளார் என்கிற வள்ளலார் அவர்களின் ஆசிரியர் ஆவார், மேலும் திரிசிரபுரம் மகாவித்வான் #மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் ஆசிரியரும் ஆவார் .
#காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் பயின்ற மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை , இராமலிங்க சுவாமிகள் , அஷ்டாவதனம் சபாபதி முதலியார், சிதம்பரம் சபாபதி பிள்ளை (இராமலிங்க சுவாமிகளின் அண்ணன்) ஆகியோர்கள் ஆவர்.
19 நூற்றாண்டு புலவர் பெருமகன் தி. க. சுப்பராய செட்டியார் அவர்கள் நமது சேனைத்தலைவர் குலத்தில் பிறந்த தமிழ் புலவர் ஆவார் .இவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் முதன்மை மாணாக்கர் ஆவார் .
காவிரி நடுவர் மன்றம் அமைத்திட முதன் முதலாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த தோழர் காத்தமுத்து ஐயா பிறந்த குலம் சேனைத்தலைவர் குலம் ,இவர் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் (நாகப்பட்டினம் தொகுதி 1967-72)
முன்னாள் முதலைமைச்சர் கர்ம வீரர் காமராஜ் அவர்களின் நெருங்கிய நண்பர் திருமுடி ந. சேதுராம செட்டியார் ஐயா பிறந்த குலம் சேனைத்தலைவர் குலம் .இவர் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் (புதுச்சேரி தொகுதி 1962-67 )
இன்னும் பல உள்ளன , வரலாறு தெரிந்து கொள்ள வேண்டுமா , இனத்திற்க்காக போராட வேண்டுமா , சேனைத்தலைவர் இனம் மட்டுமே உயிர் மூச்சு என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை.
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையில் உறுப்பினர் ஆக :
https://docs.google.com/…/1FAIpQLSeeDz3bYJAXhWoFOq…/viewform
சுந்தர சேனைத்தலைவர்
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் வேளாண்மை இனமாகிய இலைவாணிய வரி விதிக்கப்பட்ட சோழர்களின் போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#காந்தியடிகள் #காந்தி
senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in
No comments:
Post a Comment