Friday, 19 June 2020

சேனைத்தலைவர் இனத்தின் போர்டு அல்லது பலகை

#சேனைத்தலைவர் இனத்தின் போர்டு அல்லது பலகை



வீரமிக்க இனமாம் , கொடிக்கால் வம்ச இனமாம் , #வெற்றிலை கொடிக்கால் க்கு என்றே 2000 வருடத்திற்கு முன்னே #சங்க காலத்தில் இருந்து வாழக்கூடிய #தமிழ் போர்குடியாம், சோழர்களின் போர்குடி மூன்று கை மகாசேனை வம்சம், 2000 வருடத்திற்கு மேலாக கொடிக்கால் தொழில் செய்வதால் #இலைவாணிய வரி செலுத்திய இலைவாணிய வம்சமாம்,#தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் படைத்தளபதி #வீரத்தளபதி #வீரபாகு சேனைத்தலைவர் வம்சாவழி பெருமக்களாகிய சேனைத்தலைவர் வம்ச மக்கள் அனைவருக்கும் வணக்கங்கள் .

சேனைத்தலைவர் இன மக்கள் கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெருவாரியாக வாழ்கின்றனர் , இதர மாவட்டங்களில் கணிசமான அளவில் வாழ்ந்து கொண்டு உள்ளனர் , ஆனாலும் சேனைத்தலைவர் என்ற இனம் இங்கு உள்ளதா என்ற அளவில் உள்ளது அதற்க்கு இரண்டு காரணம் உள்ளது .

முதல் காரணம் நாம் அனைவரும் பயன்படுத்தும் பட்டங்கள் , #கொடிக்கால்பிள்ளைமார் , #கொடிக்கால்மூப்பனார் , #முதலியார் , #செட்டியார் ,#சேனைகுலம் , #சேனையார் , #சேனைத்தலைவசெட்டியார் , #சேனைக்குடையசெட்டியார் , #சேனைமுதலியார் போன்ற பட்டங்களை பயன்படுத்தி பிரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் , எவர் கேட்டாலும் முதலில் நாம் சொல்வது முதலியார் , கொடிக்கால் பிள்ளைமார் , மூப்பனார் , செட்டியார் என்று ஆனால் #சேனைத்தலைவர் என்று சொல்வதில்லை , என்று நாம் நெஞ்சை நிமிர்த்து நமது இன பெயர் சேனைத்தலைவர் என்று சொல்கிறோமோ அன்றே நமது இனத்திற்கான எழுச்சி ஆரம்பம் .

இரண்டாவது காரணம் நாம் வாழும் ஊர்களில் பெரும்பான்மையாக அதிக தலைக்கட்டுகளில் வாழ்ந்தாலும் சேனைத்தலைவர் இனத்தின் போர்டு அல்லது பலகை நாம் பயன்படுத்துவதில்லை .ஆனால் மற்ற அணைத்து சமுதாயமும் 15 குடும்பம் இருந்தாலும் அவர்களின் சாதி போர்டுகளை வைத்துள்ளனர் .1000 தலைக்கட்டுகளில் நாம் வாழ்ந்தாலும் நாம் வைப்பதில்லை காரணம் பெரியவர்கள் நமக்கெதுக்கு பா மற்ற சாதி மக்கள் தப்பாக நெனைப்பார்கள் அல்லது எவராவது கிழித்து விடுவார்கள் அல்லது பிடிக்காதவன் எவனாவது சாணி அடித்து விடுவான் என்ற பயம் , அவமான பட்டு விடுவோமோ என்ற பயம் .

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை , சேனைத்தலைவர் இளைஞர் அணி ,சேனைத்தலைவர் வீரபாகு இளைஞர் அணி , சேனைத்தலைவர் மகாஜன சங்கம் என்று உங்கள் ஊர் சார்ந்த பெயர்களில் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் படம் போட்டு சேனைத்தலைவர் இன போர்டு வையுங்கள் சேனைத்தலைவர் இன மக்கள் வாழும் பகுதிகளில் நம் இன கொடிகளை பறக்க விடுங்கள் .காலம் மாறி கொண்டு உள்ளது எவரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் ,எவரேனும் சாணி அடித்தல் துடைத்து விடுங்கள் இதனால் அவமானம் ஒன்றும் இல்லை ,எவரேனும் கிழித்தால் புதிதாக ஒரு போர்டு செய்து வைங்கள் இதனால ஒரு அவமானமும் இல்லை , காலம் மாறி கொண்டு உள்ளது அணைத்து சமுதாயமும் அவர் அவர் சாதியை முன்னேற்ற வழிகளை தேடி சென்று கொண்டு உள்ளனர் அதனால் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் நம் இனம் என்று அனைவரும் ஒற்றுமை அடைவார்கள் ,பிரச்சனை இல்லை எனில் நம் இன ஒற்றுமை குறைந்து கொண்டே வரும் , பிரச்சனை வந்தால் தான் அனைவரும் ஓன்று கூடுவர் சந்திப்பர் , இனத்தின் பற்று வெளிப்படும் ,மேலும் நம் இன போர்டு பார்க்கும் பொழுது நமது வம்ச முன்னோடி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் அவரை பார்க்கும் பொழுது நம் இளைஞர்கள் களுக்கு நம் இன புத்துணர்ச்சி கிடைக்கும், என்றும் துவண்டு விட மாட்டார்கள் , நம் இனத்தின் பற்று அதிகரிக்கும் , நம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு நம் இன வரலாறு தெரிந்து கொள்ளும் மற்றும் தேட ஆரம்பிப்பார்கள் .

மேலும் நமது சேனைத்தலைவர் இனத்தின் கோவில் திருவிழாக்களில் நமது இனத்தின் தெய்வம் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் அவர்களின் படங்களை பெரிய அளவில் வைத்து கொண்டாடுங்கள் .

நமது பைக் மற்றும் கார்களில் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் அவர்களின் படம் இடம்பெறட்டும் .

பல இடங்களில் நமது இனத்தின் போர்டு மற்றும் வீரதளபதி வீரபாகு சேனைத்தலைவர் படம் அவரின் பெயர்களை நீக்கி உள்ளேர்கள் இப்படி இருந்தால் அடுத்த தலைமுறை போர்குணத்தோடு எப்படி வளரும் , எந்த பிரச்சனை என்றாலும் பயந்து ஒடுங்கி போகும் , சிறு பிரச்னை என்றாலும் நம் இனத்தின் மாண்பு தெரியாமல் அடுத்தவர் உதவியை நாடி செல்லும் ,ஒரு இனமே அழிந்து போகும் , ஊர் ஊர்க்கு சங்கம் , மண்டபம் கட்டி வைத்தால் அது வியாபாரம் ஆனால் இனத்தின் பற்று இனத்தின் வரலாறு எப்படி சொல்லி வளர்ப்பது சேனைத்தலைவர் இனத்தின் போர்டு வைத்து பாருங்கள் இனத்தின் ஒற்றுமை புலப்படும் .

சேனைத்தலைவர் இன மக்கள் வாழும் மாவட்டங்கள் , மற்றும் அவர்களின் பட்டங்கள் .
திருநெல்வேலி,
தூத்துக்குடி,
தென்காசி ,
மதுரை,
தேனி,
இராமநாதபுரம்,
விருதுநகர்,
காஞ்சிபுரம்,
வேலூர்,
ஆரணி,
தஞ்சாவூர்,
நாகப்பட்டினம்,
கோயம்புத்தூர்,
திருப்பூர்,
ஈரோடு,
திண்டுக்கல்,
திருவண்ணாமலை,
சென்னை,
விழுப்புரம்,
புதுக்கோட்டை,
கும்பகோணம்,
கிருஷ்ணகிரி,
தருமபுரி,
சேலம் ,
கடலூர்
போன்ற பகுதிகளில் பல பட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மதுரை, தேனி, போடிநாயக்கனூர், இராமநாதபுரம், திருநெல்வேலி பகுதிகளில், இவர்களை கொடிக்கால் #பிள்ளைமார் என்றும்

கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம் , கும்பகோணம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர்,கடலூர் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் #செட்டியார் என்றும்

திருநெல்வேலி, தென்காசி, பாண்டிச்சேரி,விழுப்புரம், ஆரணி, வேலூர் பகுதிகளில் #முதலியார் என்றும்

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி பகுதிகளில் கொடிக்கால் #மூப்பனார் என்றும் பெரு வாரியாக அழைக்கப்படுகின்றனர்

இது வரை எடுத்த #சேனைத்தலைவர் மக்கள் கணக்கெடுப்பு படி 20 இலட்சத்தில் இருந்து 25 இலட்சமாக #தமிழ்நாடு,#கர்நாடகா,#கேரளா ,முழுவதும் வாழ்ந்து கொண்டு உள்ளனர் , மேலும் கர்நாடகா, கேரளா , மஹாராஷ்ட்டிராவிலும் சேனைத்தலைவர்கள் கணிசமான அளவில் வாழ்ந்து கொண்டு உள்ளனர்.

மேலும் பல வெளிநாடுகளில் சேனைத்தலைவர் இன மக்கள் சங்கம் வைத்து வாழ்ந்து கொண்டு உள்ளனர் .

பேசுவோம் நமது வரலாற்றை தெரிந்து கொள்வோம் நமது இனத்தின் பாரம்பரியம் மிகுந்த பெருமைகளை .வெற்றிலை கொடிக்கால் வேளாண்மை செய்த ஒரே இனம் என்ற பெருமை இந்திய தொல்லலியால் துறை சொல்லியுள்ள ஒரே இனம் #சேனைத்தலைவர் இனமே அதனால் தான் அவ்வெற்றி லை கொண்டே நமது இனத்தின் அடையாளம் #இலைவாணியர் என்று பெயராகியது .
நூறு வருடங்களுக்கு முன்பே சாதிக்கென்று #சங்கம் அமைத்து நூற்றாண்டு விழா கொண்டாடிய ஒரே இனம் சேனைத்தலைவர் இனமே ,மேலும் சோழர்கள் காலத்தில் #சேனைபெருங்காணிசங்கம் என்று சங்கம் வைத்த ஒரே இனம் நம் சேனைத்தலைவர் இனமே .

#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா

நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை​, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :

-----> https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )

🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰

2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க

தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in


























































































No comments:

Post a Comment

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...