நம் சேனைத்தலைவர் சமுதாயத்தை சேர்ந்த திரு அ. திருவேங்கடம் செட்டியார்.
தனக்கிருந்த அச்சகத்தை விட்டு, இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்ற சுதந்திர போராட்ட வீரர்.
சிறை மீண்டபின் அச்சகத்தை நடத்த முடியாத நிலையில் சிரமத்துடன் வாழக்கை நடத்தினார்.
அவருக்கு வழங்கப்பட்ட நிலம் இன்றுகூட சரியான போக்குவரத்து வசதி இல்லாத கிழக்கு மருதூர் கிராமத்தில் கிடைத்தது. அதிலிருந்து நிரந்தர வருவாய் ஏதும் இல்லை.
பல தியாகிகள் தங்களுக்கு பயனுள்ள விளை நிலங்களை பெற்று பயனடைந்தது போல் அவர் கேட்க முயற்சி செய்யவில்லை. அவருடைய இல்லத்தரசி , மாடு வளர்த்து பால் விற்று, வறட்டி தட்டி விற்று, கை முறுக்கு செய்து விற்று குடும்பம் நடைபெற உதவினார். இருந்தும், சிறு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தேசபக்தி பாடல்களை பாடி தெருக்களில் சுற்றி முடியும்போது, தனது கதர் ஜிப்பாவின் ஒரு பக்கம் பையில் பலூன், மற்றொரு பையில் parry mixure மிட்டாய் ஆகியவைகளில் ஒன்றை கொடுத்து அனுப்புவார்.
அந்த பகுதி சிறுவர்களுக்கு அவர் பலூன் சார்.
இவர் மறைந்த போது அவர் மைத்துனர் தான் இறுதி சடங்குக்கான செலவுகளை செய்தார்.
இவரோடு வாழ்ந்து விட்டு இன்றைய அரசியல் வாதிகளை பார்க்கும் போது????????
No comments:
Post a Comment