"#சேனையார் வழி கொடுத்த ஈழக்காசுகள் "
கி .பி . 987 ஆம் வருடம் , தஞ்சை பெரிய கோவில் எழுப்பிய மாமன்னன் இராஜ ராஜ சோழன் ஆட்சியாண்டு .
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமிகள் ஆலயம் , தஞ்சாவூர் மாவட்டம் .
என் அருமை சேனைத்தலைவர் இன மக்களே நம் இன குழுவின் பெயர் என்ன ? 1000 வருடங்களுக்கு முன் நம்மை எப்படி அழைப்பர் இலைவாணிய பாட்டம் , சேனை அங்காடி பச்சை பாட்டம் ,சேனைக்கடை பாட்டம் இவை அனைத்தும் நம் இனம் செய்த தொழில்களுக்கு நம் செலுத்திய வரிகள் ,
அப்பொழுது நம் இனத்தின் பொது பெயர் என்ன ?
நம் பட்டங்கள் - #முதலியார் , #மூப்பனார் , கொடிக்கால் #பிள்ளைமார் , #செட்டியார்
இப்பட்டங்கள் நாம் மன்னராட்சி இருந்த காலத்தில் நாம் செய்த #கொடிக்கால் வேளாண்மை , வணிகம் , படைப்பிரிவு போன்ற தொழில்கள் மூலம் நமக்கு கிடைத்த பட்டங்கள் தான் நாம் தற்பொழுது பயன்படுத்தும் பட்டங்கள் .
ஆனால் நம்முடைய பொது பெயர் என்ன - "சேனையார்" என்பதே ஆரம்ப காலத்தில் இருந்து நாம் தற்பொழுது வரை பயன்படுத்தி வரும் இன குழுவின் பெயராகும்
" சேனையார் , சேனைத்தலைவர் , சேனைக்குடையார் " இமூன்றுமே சேனையார் இன குழுவை குறிக்கும் சொல்லாக கல்வெட்டுகளிலும் , செப்பேடுகளிலும் பார்க்கமுடிகிறது .
கி .பி 9 ஆம் நூற்றாண்டுகளில் கிடைத்த கல்வெட்டுகளில் நமது இன குழுவின் பெயர் "சேனையார்" என்று குறிக்கப்படுகிறது .தற்பொழுது வரை படிக்கப்பெற்ற கல்வெட்டுகளின் படி , இன்னும் வருங்காலங்களில் நம் தேடலை பொறுத்து நம் வரலாறு அதிகமாகலாம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமிகள் ஆலயத்தில் கிடைத்த கல்வெட்டுவை இப்பொழுது பார்ப்போம் .
கல்வெட்டு எண் : தெ. இ. க. தொ. 13 : 7
தஞ்சை பெரிய கோவில் எழுப்பிய மாமன்னன் இராஜ ராஜ சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டில் காவிரி கரையோரம் அமையப்பெற்றுள்ள திரைமூர் நாடு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் வளாகத்தில் இறை விமானத்தின் தெற்க்கே எழுந்தருளியிருந்த கணபதி "புராண கணபதி " என்று அழைக்கப்பட்டார் .
அவருக்கும் காவேரி வடகரை மன்னிநாட்டு பிரம்மதேய (அந்தண ஊர்) கிராமத்தின் நிர்வாகி குராலை துக்கைய கிரமவித்தன் என்பவர் தினமும் பத்து வாழைப்பழம் படையல் அளிக்க விரும்பினார் .
இதற்கான பணம் மற்றும் பொறுப்பு திரைமூர் நாடு திருவிடைமருதூர் இல் வாழ்ந்த சேனையார் இன மக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது .
துக்கையன் வாழைப்பழப் படையலுக்கு எட்டு ஈழக்காசுகளை முதலாகத் தந்து, தம் அறக்கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பினை சேனையார் மறக்குழுவிடம் ஒப்படைத்தார்.
பொறுப்பினை ஏற்ற சேனையார் எட்டு ஈழக்காசு வழங்கிய வட்டியில் (பொலியூட்டு) பிள்ளையாருக்கு நாளும் பத்து வாழைப்பழம் படையலிட உறுதியளித்தனர்.
இந்த தகவல் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது .
இக்கல்வெட்டில் இருந்து நாம் தெரிந்து கொள்வது ,
திருவிடைமருதூர் இல் வாழ்ந்த பல்வேறு சமூகக் குழுக்களுள் சேனையார் குறிப்பிடத்தக்கவர். படைக்கு வீரர்களை வழங்கிய மறக்குழுவாக இவர்களைக் காண்கிறது கல்வெட்டுத் தொகுதி.
கல்வெட்டுகளில் அதிகம் அறியப்படாத சமூகக் குழுவான சேனையார் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமிகள் கோவிலில் அறக்கட்டளைப் பொறுப்பேற்கும் ஆளுமை நிறைந்த குழுவாக வெளிப்படுவது கருதத்தக்கது.
ஈழக்காசு என்று இருப்பதால் இராஜராஜ சோழன் காலத்தில் நடைபெற்ற ஈழப்போரில் சேனையார் இன குழுவிற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று இக்கல்வெட்டு தெளிவுற உணர்த்துகிறது .
தற்காலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் , திருவிடைமருதூர் பகுதியில் சேனைத்தலைவர் இன மக்கள்
உள்ளனரனவா என கும்பகோணம் சேனைத்தலைவர் மகாஜன சங்க தலைவர் திரு . வரதராஜ சேனைத்தலைவரிடம் விசாரித்ததில் திருவிடைமருதூர்,மரத்துறை ,பந்த நல்லூர் , மதகு சாலை ,கொண்டா சமுத்திரம் , குலசேகர நல்லூர் ,காமாட்சி புரம் , வேட்ட மங்களம் ,குறிச்சி ,சிதம்பரநாத புரம்,திருப்பனந்தாள் ,காட்டூர் , தாராசிரம் , உப்புளியப்பன் கோவில் , மேல காவிரி , கோட்டையூர் , கீழ பரட்டை , அடிச்சாம்படி போன்ற திருவிடைமருதூர் சுற்றியுள்ள பகுதிகளில் செட்டியார் என்கிற பட்டத்துடன் பல சேனைத்தலைவர் குடும்பங்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு உள்ளனர் என்கிற தகவல்கள் கிடைத்தது .
இன்றும் திருவிடைமருதூர் பகுதியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சேனைத்தலைவர் மக்கள் 1100 வருடத்திற்கு முன் அப்பகுதியில் ஆளுமை செலுத்திய சோழர்களின் போர் குடி ஆகிய சேனையார் குடி வழி வந்த மக்கள் என்று இந்த கல்வெட்டு நமக்கு சொல்கிறது .
சேனைத்தலைவர் உறவுகளே நம் வரலாறு இன்றும் உறங்கி கொண்டு தான் உள்ளது , நாம் தான் அதை தோண்டி எடுக்க வேண்டிய கட்டயாத்தில் உள்ளோம் .
எந்த வரலாறும் மறைக்கப்படவில்லை , நம் அலட்சிய போக்கால் நாமே அதை தொலைத்து விட்டோம் அதற்க்கு சிறந்த உதாரணம் 1800 வருட காலங்களிலே கப்பல் விட்ட கிழார் .தி . சண்முக மூப்பனார் , இவர் காலத்தில் இந்தியாவில் 10 உப்பளங்கள் பேர் சொல்ல மட்டும் இருந்தன அதில் இவர் குலதே முதல் இடத்தில இருந்தது .100 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதரின் தகவல்கள் அனைத்தும் சென்னையில் ஒரு மூலையில் இரும்பு கடையில் கண்டெடுத்ததில் இருந்து தெரியவில்லை நம் அலட்சிய போக்கு .
வரலாறு தெரியாத எந்த ஒரு இனமும் எழுச்சி பெறவில்லை , உன் வரலாறை நீ தான் கண்டெடுக்க வேண்டும் .
தஞ்சாவூர் மாவட்டத்தில் , திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமிகள் கோவிலில் நம் கல்வெட்டு இருக்கும் அதுவும் 1000 வருடங்களுக்கு முன்னாள் உள்ள கல்வெட்டாக இருக்கும் என எவராவது யோசித்துருப்போமா , இதை பற்றி விசாரிக்க திருவிடைமருதூர் பகுதிகளில் விசாரித்த பொழுது அனைவரும் சொன்ன பதில் என் தாத்தா இந்த பகுதி மிராசு தார் என்று .
நீங்கள் அனைவரும் செய்ய வேண்டியது வரலாறு நம்மில் இருந்து தேடுங்கள் , உங்கள் தாலுகாவை எடுத்து கொள்ளுங்கள் , அதில் நம் சேனைத்தலைவர் என்கிற சேனையார் இன மக்கள் எத்தனை குடும்பங்கள் வசிக்கிறது , அவர்கள் பூர்விகம் , அவர்கள் குல தெய்வம் , அவர்களின் வம்ச வழி மற்றும் அவர்களின் சிறந்த குடும்பம் அவர்களின் கதைகள் இதை தெரிந்து கொண்டாலே நம் வரலாறு உங்களுக்கு எளிதில் புரிய ஆரம்பிக்கும் .
நம் வரலாறு நம்மில் மட்டுமே உள்ளது , எத்தனை வீட்டு பரண்களில் நம் பழைய காலத்து செப்பேடுகள் தூங்கி கொண்டு உள்ளனவோ , பழைய ஓலை சுவடிகள் இருக்கின்றனவோ , ஓலை சுவடிகள் , செப்பேடுகள் இவை அனைத்தும் அக்காலத்தில் உள்ள கடன் பத்திரம் ஆகும் , அதில் இருந்து நம் வரலாறு பல தெரிந்து கொள்ளலாம் .
அப்படி இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்
சுந்தர சேனைத்தலைவர் - 9944253204
சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார் வரலாறு மீட்பு குழு
பெருமை மிகு #சோழ மண்டல சதகத்தில் #குடையார் குலம் என்று சொல்ல படுகிற சேனைத்தலைவர் இனமே பெருமை கொள் .
வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே ,
உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
பேரவை : veerabahusenaithalaivar.blogspot.com
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.com
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar