வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி வந்த கொடிக்கால் சேனைத்தலைவர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கங்கள் .
இலைவாணியர் என்பது வெற்றிலை பயிரிட்டு அதை சேனைக்குடி பேட்டையில் வெற்றிலை விற்பனை செய்பவர்கள் என்று பொருள் அதை கடந்த 2000 வருடமாக நாம் வெற்றிலைக்கென்றே உள்ள ஒரே இனம் .
இலைவாணியர் என்ற பெயர் நம் இனத்தின் பட்டம் அல்ல , நம் ஒட்டு மொத்த சேனைத்தலைவர் இனத்தின் பொது பெயர் , 2000 வருடத்திற்கு மேலாக பல்லவர் , சோழர் காலத்தில் நாம் வெற்றிலை பயிரிட்டு அதை விற்பனை செய்தததால் நமக்கு கொடுக்கப்பட்ட வரி இலைவாணிய பட்டம் என்று அதன் பெயர் , அவ்வரி செலுத்தி வந்தமையால் அந்த வரியின் பெயராலே நமக்கு இலைவாணியர் என்ற பொது பெயர் நிலைத்து விட்டது அதுவும் 2000 வருடத்திற்கு மேலாக ,
மேலும் இடத்திற்கேற்ப இப்பெயர் மாறுபட்டுக்கொண்டே இருந்தது சில இடங்களில் இலை வேளாளர் , கொடி வேளாளர் , கொடிக்கால் வேளாளர் , கொடி வேளாளர் , இலை முதலி , சேனை குல வேளாளர் போன்று அழைக்கப்பட்டுள்ளனர் , இதை 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பும் உறுதி செய்துள்ளது .
1901 இல் இருந்து நம் இனத்தின் மேல் கொண்ட காழ்புணர்ச்சியில் நம் இனத்தின் மீது தவறான தகவல்களை பரப்பி கொண்டு இருந்தனர் , இன்றும் அதே நிலைமை உள்ளது .
1901 இல் நடந்த சேனைத்தலைவர் இனத்தின் போராட்டத்தில் ஆங்கிலேய நீதி மன்றமும் உறுதி செய்துள்ளது
இவர்கள் வானிய செட்டியார் வேறு இலை வானியர் வேறு என்று , வானியர் செட்டியார் என்பதற்கான பொருள் செக்கில் என்னை அரைத்து அதை பேட்டையில் அவர்களே சென்று விற்பதால் வானியர் என்று அழைக்கப்பட்டனர் அதே போல் கொடிக்கால் வேளாண்மை செய்து அதை பேட்டையில் நாமே விற்பனை செய்ததால் இலைவணிகர் என்று அழைக்கப்பட்டு நமக்கான வரியின் பெயர் இலைவாணிய பாட்டம் என்று உள்ளதால் இலைவாணியர் என்ற பொது பெயர் அவ்வாறே நிலைத்து விட்டது .
தமிழக தொல்லியல் துறையால் ஆராய்ச்சி செய்து வெளி இட்டுள்ள வரலாற்றில் வெற்றிலை என்ற ஆராய்ச்சி புத்தகத்தில் நாட்டுப்புற பாடல்கள் , கல்வெட்டுகள் மூலமாக சங்க காலத்தில் இருந்து வெற்றிலை கடந்து வந்த பாதை பற்றிய அனைத்தும் இந்த புத்தகத்தில் தெளிவாக சொல்ல பட்டுள்ளது .
தமிழக தொல்லியல் துறையால் ஆராய்ச்சி செய்யப்பட்டு வெற்றிலைக்கென்றே உள்ள ஒரே இனம் சேனையார் இனம் மட்டுமே என்று சொல்லி உள்ளனர் ,பாண்டிய நாட்டில் சேனையார் இன மக்கள் வெற்றிலை கொடிக்கால் பயிரிடுகின்றனர் என்று தெளிவாக சொல்லி உள்ளனர் .
துளுவ வேளாளர் , சோழிய வேளாளர் , பாண்டிய வேளாளர் என்று வேறு எந்த சாதியையும் அவர்கள் சொல்ல வே இல்லை .பின் எப்படி அவர்கள் கொடிக்கால் வேளாளர் என்று வருவார்கள் என்று தெரியவில்லை .
இதை ஆராய்ந்து தான் தமிழ் புலவர் பாவாணர் , இலைவானியர்கள் என்பவர்கள் கொடிக்கால் வேளாளர் என்று தெள்ள தெளிவாக சொல்லியும் உள்ளார் .
கொடிக்கால் பிள்ளைமார் என்பவர்கள் சேனையாரே என்று தெளிவாக சொல்லியுள்ளது .
நம் வரலாறை நாம் மீட்டு எடுக்காமல் இருந்த காரணத்தினால் என்று எவர் எவரோ நான் தான் எல்லாம் திரிந்து கொண்டு உள்ளனர்
#சேனைத்தலைவர் களின் #கொடிக்கால் வேளாண்மை கொடி , குயில் கொடி , அது அக்காலத்தில் கொடிக்கால் வேளாளர்களின் கொடி யாக இருந்து வந்துள்ளது .இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் நம் இனம் மட்டுமே கொடிக்கால் க்கு என்று பாத்தியப்பட்ட ஒரே இனம் என்று .
பின்வரும் பதிவு முழு தகவல்களையும் சொல்லும்
https://senaithalaivarhistory.blogspot.com/2020/11/blog-post_29.html
பின் வருபவை அப்புத்தகத்தில் உள்ள தகவல்கள்
சேனையார் வாழ்க்கையும் , மரபும்
பாண்டிய நாட்டில் சேனையார் இன மக்கள் வெற்றிலை கொடிக்கால் பயிரிடுகின்றனர்.இவர்களின் இன பிரிவுகள்
1 . கொடிக்கால் பிள்ளைமார்
2 . கொடிக்கால் முதலியார்
3 . கொடிக்கால் மூப்பனார்
4 . கொடிக்கால் செட்டியார்
என்று அழைக்கப்படுகின்றது .இவ்வினப்பெயர்களுக்கு முன் சேனையார் என்றும் சேர்த்து கொள்கின்றனர் .இவர்களுக்குள் மண உறவும் உண்டு .
இவர்கள் தங்களை அறுபடை கடவுள் முருகனின் படை தலைவனான வீரபாகு வின் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றனர் . சேனைக்கு வீரபாகு தலைமை தாங்கி நடத்தியதால் சேனையார் என்ற பட்டத்தையும், பரிசு பொருளாக வேலில் இருந்து கிள்ளிக் கொடுத்த இலைக் கொடியையும் பெற்றனர் .இதுவே சேனையார் இனத்தவர்களால் பயிரடப்பட்டு வந்த வெற்றிலையாகும் .
மதுரை மாவட்டத்தில் பொன்மேனி , சோழவந்தான் , சிந்தாமணி , அய்யனார்புரம் , பனையூர் ஆகிய இடங்களிலும் , நெல்லை மாவட்டத்திலும் , ஆத்தூர் , உடன்குடி பகுதிகளிலும் , இராமநாதபுரம் மாவட்டத்திலும் , திருப்பூவனம் ஆகிய இடங்களிலும் இவ்வின மக்கள் வெற்றிலை கொடிக்கால் பயிரிட்டு வந்துள்ளனர் .
வெற்றிலை கொடிக்கால் பயிரிடுவது என்பது சிரமமான வேலையாகும் .இதை கவனமாகவும் , நுட்பமாகவும் செய்ய வல்லவர்கள் தமிழ்நாட்டு கொடிக்கால் பிள்ளைமார்கள் .
வெற்றிலை பயிருடுவதியே பரம்பரை பரம்பரையாக செய்து வந்த இனத்தார் இன்னும் தமிழ்நாட்டில் இன்றளவும் தமிழ்நாட்டில் அத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .
மதுரை மாவட்டத்தில் இன்னும் கொடிக்கால் பிள்ளைமார் என்று அழைக்க பட்டு வருகின்றனர் .
கொடிக்கால் பிள்ளைமார் தவிர கொடிக்கால் மூப்பனார் , இஸ்லாமியரும் கூட வெற்றிலை பயிரிடும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .
சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் தேனி மாவட்டத்தில் அதிக பெரும்பான்மையாக பல தலைமுறையாக உள்ள ஒரே இனம் சேனைத்தலைவர் இனம் மட்டுமே .
உன் அடையாளமே கொடிக்கால் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் தான் அதை மறந்து விடாதே .
பெருமை மிகு #சோழ மண்டல சதகத்தில் #குடையார் குலம் என்று சொல்ல படுகிற சேனைத்தலைவர் இனமே பெருமை கொள் .
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைகூலம் #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
சுந்தர சேனைத்தலைவர் - 9944253204
சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார் வரலாறு மீட்பு குழு
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
No comments:
Post a Comment