கி .பி . 1055 வருடம் , இரண்டாம் இராஜேந்திர சோழர் ஆட்சியில் சேனையார் அல்லது சேனைத்தலைவர் இன மக்கள் இலைவாணிய பாட்டம் ( வரி ) செலுத்தியதற்கான கல்வெட்டு
கன்னியாகுமரி மாவட்டம் , அகத்தீஸ்வரர் என்ற தாலுகாவில் கன்யாபகவதி என்கிற கோவிலில் இக்கல்வெட்டு உள்ளது .
10 நூற்றாண்டில் ,சுமார் 1000 வருடங்களுக்கு முன்பாக , இரண்டாம் இராஜேந்திர சோழன் ஆட்சியாண்டில் கன்னியா பிடாரியார் கோவில் , இராஜராஜ ஈஸ்வர முடையார் கோவில் , இராஜராஜன் சாலை போன்றவைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேவதான கிராமங்களில் இருந்து வரி வசூலிக்கப்பட்டு அவ்வரியின் மூலம் கோவில்கள் , கல்வி சாலைகள் , மருத்துவ சாலைகள் , போர் சாலைகள் போன்றவை நடத்தப்பட்டு வந்துள்ளன .
அவ்வரிகளில் முக்கியமாக வெற்றிலை பயிர் செய்வதற்கும் , வெற்றிலை விற்பதற்கும் உள்ள இலைவாணிய பாட்டம் ( வரி ) வாங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது .
இதில் இருந்து சேனையார் குடி காலங்காலமாக கன்னியாகுமரியில் பகுதிகளில் வாழ்ந்து கொண்டு இருப்பது நிரூபணம் ஆகுகிறது .
இந்த கல்வெட்டு மூலமாக தான் பல சோழர் கால தகவல்கள் தொல்லியல் துறைக்கு கிடைத்துள்ளது , சோழர் கால வரிகள் , சோழர் கால அரசு அதிகாரிகள் , சோழர் வெற்றி பெற்ற இடங்கள் உதாரணமாக தெலுங்குக்குல கால மூவேந்த வேளாரும் , மஹிபால விழுப்பரையர் இதில் மஹிபால விழுப்பரையர் கங்கைகொண்ட போரின் பொழுது மஹிபால சாம்ராஜ்யத்தை வெற்றி கொண்ட படைத்தலைவரின் பதவியின் பெயர் .
இக்கல்வெட்டில் நம் இனம் சார்ந்த வரியின் பெயரும் அதே போல் 1000 வருடங்களுக்கு முன்பும் நாம் வெற்றிலை விவசாயம் பார்த்த இனம் என்ற நடைமுறை உண்மை அனைவருக்கும் தெரிய வருகிறது.
இதில் இருந்து கொடிக்கால் பிள்ளைமார் மற்றும் கொடிக்கால் வேளாளர் எவர் என்று தெரிந்து கொள்ளலாம், கொடிக்கால் வெற்றிலை க்கு என்று இருந்த ஒரே இனம் என்றும் நிரூபணம் ஆகுகிறது
இக்கல்வெட்டில் சொல்லவருவது இரண்டாம் இராஜேந்திரனின் நான்காம் ஆட்சியாண்டில் இருந்து இவ்வரிகள் வேறு தர்ம காரியங்களுக்கு மாட்சி அமைக்கப்பட்டுள்ளது ,
இதை இரண்டாம் இராஜேந்திர சோழன் வாய் மொழிய
அதை இராஜஇராஜ மராயன் , கலிங்க ராஜனும் தொண்டைமானும் திருபுவன வன்னாடுடையன் , மூவேந்திர சோழ கந்திருவ பெரியான் போன்ற சோழ பெருந்தலைகள் ஒத்துக்கொள்ள
பின் வரும் சோழ நாட்டின் அரசு அதிகாரிகளான இராஜராஜ மழவராஜரும் , இராஜராஜ சோழ மழவராயரும் ,ஐயம்கொண்ட சோழ விழுப்பரையரும் , அதிராஜேந்திர மூவேந்திர வேளாரும் ,இராஜராஜ அணுக்கப் பல்லவராயரும் ,, திருச்சிற்றம்பல மூவேந்த வேளாரும் , இராஜகேசரி மூவேந்த வேளாரும் , உத்தம சோழ திருவிந்தளூர் நாட்டு மூவேந்த வேளாரும் , மஹிபால விழுப்பரையரும் , அழகிய சோழ மூவேந்த வேளாரும் , ஜன்னத நல்லோருடையார் காளி ஆதித்த கோன் ராஜேந்திர மூவேந்திர வேளாரும் , பர சிவ மங்கலமுடைய ராமனசனி ஒலோக புத்திரனான நிருபேந்திர சோழ மூவேந்திர வேளாரும், சிவனடிஉடையார் பர்ப்பனபன் பள்ளிகொண்டனரான நாராயண மூவேந்திர வேளாரும் , பல்லவரையரும் , கொற்றமங்கலத்து பற்பநாசேர , தாலூர் சக்கரபாணி பட்டரும் விடையில் அதிகாரிகள் சோழ மூவேந்த வேளாரும் , மும்முடி சோழ பல்லவரையரும் , ஐயன்கொண்ட சோழ சேனாமுக மூவேந்த வேளாரும், உத்தம சோழ மூவேந்த வேளாரும் , மனுகுல மூவேந்த வேளாரும், உய்யகொண்ட சோழ மூவேந்த வேளாரும், நித்த வினோத மூவேந்த வேளாரும் , சத்திரசிகாமணி மூவேந்த வேளாரும் , கங்கைகொண்ட சோழ மூவேந்திர வேளாரும், உதைத்தாண்ட மூவேந்த வேளாரும், கங்கை கொண்ட சோழ பல்லவரையரும் , பார்வேந்திர மூவேந்த வேளாரும் ,நர பாலத்தொங்க மூவேந்த வேளாரும், ராஜராஜ அணுத்திரபல்லவரை யரும் , அறிஞசிகை விழுப்பரையரும் , அபிமணமேரு மூவேந்த வேளாரும், மதுராந்தக விழுப்பரையரும் சிங்களாந்த மூவேந்த வேளாரும் , விக்கிரம சோழ மூவேந்த வேளாரும் , வளவன் மூவேந்த வேளாரும் , வீரசோழ மூவேந்த வேளாரும், சுந்தர சோழ பல்லவரையரும் , அதுலபராக்கிரம மூவேந்த வேளாரும் , பார்த்திவ விழுப்பரையரும் , வில்லவந் மூவேந்த வேளாரும் , வீரபாண்டிய மூவேந்த வேளாரும், வழுதி குலாந்தக மூவேந்த வேளாரும் , ராஜாதித்த மூவேந்த வேளாரும் , தெலுங்குக்குல கால மூவேந்த வேளாரும், ஐயகொண்ட சோழ மூவேந்த வேளாரும், ஸ்ரீகாந்த மூவேந்த வேளாரும் , மீனவ மூவேந்த வேளாரும் , ஒலோக விஜ்ஜாதிர மூவேந்த வேளாரும், ராஜாதிருநல்லூர் நாட்டு மூவேந்த வேளாரும், உத்திரமாரியரும் நிறைமதி சோழ மூவேந்த வேளாரும் , வளவ கேசரி மூவேந்த வேளாரும்
மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஒட்டு மொத்த சோழ அரசு அதிகாரிகளான மூவேந்தவேளார் என்கிற அரசு அதிகாரிகள் கையப்பமிட
இந்த ஆணை பிறப்பிக்க பட்டுள்ளது என்று கல்வெட்டு செய்திகள் சொல்கிறது .
பெருமை மிகு #சோழ மண்டல சதகத்தில் #குடையார் குலம் என்று சொல்ல படுகிற சேனைத்தலைவர் இனமே பெருமை கொள் .
வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைகூலம் #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய
சேனைத்தலைவர் குலம்
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே ,
உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
சுந்தர சேனைத்தலைவர் - 9944253204
சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார் வரலாறு மீட்பு குழு
பேரவை : veerabahusenaithalaivar.blogspot.com
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
முருக பெருமானின் படைத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி இனம், கொடிக்கால் பிள்ளைமார்,கொடிக்கால் மூப்பனார் இனம்,சேனை பெரு வணிகம் செய்த சேனையங்காடிகள் இனம்,சோழர், பாண்டியர்களால் இலைவாணிய வரி விலக்கு கொடுக்கப்பட்ட சேனை குடி இனம் ,சோழர்களின் போர் குடியாம் “மூன்று கைமா சேனையார்” இனம் .சோழர்கள் காலத்தில் சேனை பெரு வணிகம் செய்ததால் சேனை கொண்ட செட்டியார்,சேனை செட்டியார் என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட தமிழ் மூத்த குடி மக்கள்,தொழில் முறையில் சேனை முதலியார் என்று அழைக்கப்பட்ட என் குல சேனை முதலி மக்கள்.
Thursday, 11 February 2021
இலைவாணிய பாட்டம் ( வரி ) செலுத்தியதற்கான கல்வெட்டு
Subscribe to:
Post Comments (Atom)
ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்
ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...
-
மதுரை ,தேனி , போடி பகுதிகளில் பிள்ளை என்ற பட்டத்துடன் வாழும் சேனைத்தலைவர் இன மக்களுக்கு அனைத்திந்திய முதலியார் மற்றும் பிள்ளைமார் என்ற அம...
-
சேனைத்தலைவர் Jump to navigation Jump to search சேனைத்தலைவர் வகைப்பாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குல தெய்வம் (ஆண்) முருகன் ...
-
கொடிக்கால் பிள்ளைமார் - சேனைத்தலைவர் - வெற்றிலை வணிகர்கள். ------------------------------------------------------------------------------...
-
பாண்டிய நாட்டில் சேனையார் இன மக்கள் வெற்றிலை கொடிக்கால் பயி ரி டுகின்றனர்.இவர்களின் இன பிரிவுகள் 1 . கொடிக்கால் பிள்ளைமார் 2 . கொடிக்கால...
-
வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அணியும் தாலி முறை - வருடம் 1800 தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் ) - பாகம் 4 —————————————————————— ...
-
ஹொய்சள ஆட்சியாண்டு வீர நரசிம்மன் மன்னவன் காலத்தில் நம் குல சேனைத்தலைவரான மாவீரன் என்பான் திருவண்ணாமலையில் நடந்த போரில் என்பது வயதான ம...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சேனைத்தலைவர் புதுக்கோட்டை சமஸ்தானம் - 1934 வருடம் - பாகம் 1 —————————————————————— சேனைத்தலைவர் சாதி அடிம...
-
#சேனைத்தலைவர் களின் #கொடிக்கால் வேளாண்மை கொடி , குயில் கொடி , அது அக்காலத்தில் கொடிக்கால் வேளாளர்களின் கொடி யாக இருந்து வந்துள்ளது .இதில் ...
No comments:
Post a Comment