Friday, 12 February 2021

சேனை அங்காடி பச்சை பாட்டம்" ( வரி )

 சேனை அங்காடி பச்சை பாட்டம்" ( வரி )


கி .பி . 1464 வருடம் , திருவிதாங்கூர் மன்னர் , ஸ்ரீ வீர இரவி ரவிவர்மர் ஆட்சியில் #சேனையார் அல்லது #சேனைத்தலைவர் இன மக்கள் "சேனை அங்காடி பச்சை பாட்டம்" ( வரி ) செலுத்தியதற்கான கல்வெட்டு

இக்கல்வெட்டு கண்டறியப்பட்ட இடம் கன்னியாகுமரி மாவட்டம் , அகத்தீஸ்வரம் என்கிற ஊரில் உள்ள மதுசூதனபெருமாள் கோவிலில் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது .

சுமார் 600 வருடங்களுக்கு முன்பாக நம் இனம் வணிகத்திலும் சிறந்து விளங்கி உள்ளது என்பதற்கான சான்றுகள் இது .

இக்கல்வெட்டு செய்தி மதுசூதன விண்ணக பெருமானுக்கு பந்திரடி பூசைக்கு , நமகாரத்திற்கும் உட்ப்பட்ட வகைக்கும் அளிக்கப்பட்ட கொடையை குறிக்கிறது .

"சேனை அங்காடி" என்பதற்கான விளக்கம்
-----------------------
சேனையார் என்கிற சேனைத்தலைவர் இனத்தை சோழர்கள் காலத்தில சேனையங்காடிகள் என்று அழைப்பர், சேனையங்காடிகள் என்பது சோழர்கள் காலத்தில் போர் நடக்கும் பொழுது போர் வீரர்களுக்கு தேவையான யானைகள் , குதிரைகள், போர் கருவிகள் மற்றும் வீரர்களுக்கு தேவையான சாப்பாடு வசதி ,இதர வசதிகள் அனைத்தும் செய்யும் ஒரு பெரிய இனத்தை சேர்ந்த மக்கள் நாம் .

முக்கியமாக நாம் சேனை பெரும் வணிகம் செய்தோம் , இதே போல் நம்மிடம் மூன்று தனி படைகள் இருந்தன , #பெரும்படையார் , #மூன்றுகை மாசேனையார் , #சேனையார் இவர்கள் போர் காலங்களில் போர்களுக்கும் , வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை எனில் அவர்கள் முதலில் நாடுவது #சேனையங்காடிகள் என்கிற இலைவாணிய இனத்திடம் தான்

மொத்தத்தில் சேனையங்காடிகளிடம் இல்லாத பொருட்களே இல்லை என்ற நிலைமை, படைகளும் ,படைகளுக்கு தேவையான அனைத்தும் , நம் கடல் கடந்து வணிகம் செய்தோம் நம் இனக்குழவை மணிக்கிராமத்தார் மற்றும் "பதினெண் விழா ஆயத்தார் (பதினெண் விஷயத்தார்)" என்று அழைப்பர்.இதில் ஆயத்தார் என்பது ஆயம் என்கிற வரி செலுத்திய செட்டியார்களாகும் "#சேனைக்குடைய செட்டியார், நகரத்து செட்டி , வானிய செட்டி "

-----------------------

என் அருமை சேனைத்தலைவர் இன மக்களே நம் இன குழுவின் பெயர் என்ன ? 1000 வருடங்களுக்கு முன் நம்மை எப்படி அழைப்பர் இலைவாணிய பாட்டம் , சேனை அங்காடி பச்சை பாட்டம் , இவை அனைத்தும் நம் இனம் செய்த தொழில்களுக்கு நம் செலுத்திய வரிகள் , அப்பொழுது நம் இனத்தின் பொது பெயர் என்ன நம் பட்டங்கள் பல ஆனால் நம் இனத்தின் பொது பெயர் இதை வரும் கல்வெட்டுகளில் நாம் காண்போம் .

பெருமை மிகு #சோழ மண்டல சதகத்தில் #குடையார் குலம் என்று சொல்ல படுகிற சேனைத்தலைவர் இனமே பெருமை கொள் .

🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰

2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே ,
உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க

சுந்தர சேனைத்தலைவர் - 9944253204
சேனைத்தலைவர், சேனைக்குடையார், சேனையார் வரலாறு மீட்பு குழு

பேரவை : veerabahusenaithalaivar.blogspot.com
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.com 

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar








No comments:

Post a Comment

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...