Wednesday, 30 October 2019

சேனைத்தலைவர் இன் பெருமை மிகு வரலாறு - 1855 to 1935

Mr.Edgar Thurston என்பவரால் எழுதப்பட்ட தென்னிந்திய சாதிகள் வரலாறு புத்தகத்தில் சேனைத்தலைவர் இன் பெருமை மிகு வரலாறு - 1855 to 1935 —————————————————————— நமது சரித்திர பெயர் சேனைக்குடையன் ,இவர்கள் வெற்றிலை வேளாண்மை செய்தவர்களும் மற்றும் வெற்றிலை வர்த்தகம் செய்தவர்களும் ஆவார்கள் ,இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக எண்ணிக்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .இவர்களின் முதன்மையான பெயர் இலை வாணியன் , இவர்களே சேனைகுடையான் ( Owner of army ) , சேனைத்தலைவன் ( Chief of army ) என்று அழைக்கப்படுகிறார்கள் .வெற்றிலை கொடிக்கால் வேளாண்மை செய்யும் இவ்வின மக்கள் தங்களை கொடிக்கால் பிள்ளைமார் அல்லது பிள்ளைமார் என்று அழைத்துக்கொள்கிறாரகள் .இவர்களின் பட்டம் பிள்ளை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது .இவர்களின் மற்ற உட்பிரிவுகள் மூப்பனார் மற்றும் செட்டியார் என்றும் அழைக்கப்படுகிறார்கள் . 1901 வருடம் மெட்ராஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவர்கள் வெள்ளாளர்களுக்கு இணையாகவும் ,பிராமண அந்தணர்களுக்கு இணையாகவும் வாழ்கின்றனர் என்று சொல்கிறது . 1891 வருடம் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் இவர்களை சிறு வணிகர்கள் மற்றும் எண்ணெய் வணிகர்களுடன் தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது .ஆனால் இவர்கள் சமூக நிலையில் இவர்களை விட உயர்ந்தவர்கள் ,நாட்டுக்கோட்டை செட்டியார்களை விட உயர்ந்த மதிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சேனைக்குடையர்களின் வீட்டிற்குள் பறையர்கள் ,வண்ணார்கள் நுழைவதில்லை , அவர்களின் வீட்டு சமையலை வாங்குவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது ,இவர்கள் மட்டும் அல்ல கம்மாளான்,செட்டியார் இன மக்களிடமும் பறையர்கள் ,வண்ணார்கள் இதே முறையை பின்பற்றினர் .ஏனெனினில் சேனைகுடையான் மக்கள் இடக்கை பிரிவை சேர்ந்தவர்கள் ,அதே சமயம் பறையர்கள் ,வண்ணார்கள் வலக்கை பிரிவை சேர்ந்தவர்கள் .இவர்கள் இடக்கை பிரிவை சேர்ந்த எவர் வீட்டுக்குள்ளும் செல்வதில்லை என்பதை Edgar Thurston குறிப்பிட்டுள்ளார் . இதில் இருந்து இலை வானியர் என்ற சேனைகுடையார் அல்லது சேனைத்தலைவர் எவருக்கும் அடிமையாக வாழ்ந்தது இல்லை என்று நிரூபணம் ஆகிறது . அதே நேரத்தில் வெள்ளாளர் மற்றும் பிராமண அந்தணர்களுக்கு இணையாகவும் வாழ்ந்துள்ளனர் . இதில் இருந்து வேளாளர்களும் இனமும் ,சேனைத்தலைவர் இனமும் வேறு வேறு என்று Edgar Thurston குறிப்பில் இருந்து அறிய முடிகிறது . இத்தகவல்கள் அனைத்தும் Castes and tribes of southern India - Volume 6 புத்தகத்தில் mr .Thurston ஆல் எழுதப்பட்டுள்ளது . ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன் கூடுதலாக எந்த வார்த்தைகளும் சேர்க்கப்படவில்லை .

Tuesday, 29 October 2019

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சேனைத்தலைவர்

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சேனைத்தலைவர்

புதுக்கோட்டை சமஸ்தானம் - 1934 வருடம் - பாகம் 1
——————————————————————
சேனைத்தலைவர் சாதி அடிமை சாதி னு அண்ணன் அம்பி வேளாளர் அவர்கள் குடுத்த ஆதாரம் புதுக்கோட்டை சமஸ்தானம் த்தை தான் குறிப்பதால் ,அதை தேடி ஆவணங்களை தேடி செல்லும் போது சேனைத்தலைவர் ,சேனையர் ,சேனை செட்டிகள்,சேனைக்குடியர் ,இலை வானியர் பற்றிய தகவல்கள் நம்மளுக்கு நான் எதிர்பாக்காத அளவுக்கு கிடைத்திருக்கிறது .இதற்காக அண்ணன் அம்பி வேளாளர் அவர்களுக்கும் அவரை சேர்ந்த Fake ID வெள்ளாளர் சிறு வண்டுகளுக்கும் பல நன்றிகள் .
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நமது இனப்பெயர்கள் சேனைத்தலைவர் ,சேனையர் ,சேனை செட்டிகள்,சேனைக்குடியர் ,இலை வானியர் மற்றும் பிள்ளை என குறிப்பிடப்பட்டுள்ளது .
சேனையர் (செட்டிகள்)
----------------------------------------
புதுக்கோட்டை சமஸ்தானம் காசுக்கார செட்டிகளுக்கும் ,சேனையர் செட்டிகளுக்கும் பூணுல் (sacred thread ) அணிய அனுமதி வழங்கியுள்ளது ,அவர்களும் அணிதிருந்தனர் மற்ற செட்டிகளுக்கு பூணுல் அணிய அனுமதி இல்லை .அதே போல்
தங்க காதணிகள் அணிய அனுமதி வழங்கியுள்ளது .
சேனையர் செட்டிகள் அதிகமாக வாழ்ந்த இடம் கொடும்பாளூர் வட்டத்தில் உள்ள சேனையப்பட்டி .இவர்களின் பூர்விகம் திருச்சிராப்பள்ளி .இவர்கள் அசைவம் உண்பவர்கள் ,இவர்கள் மாசி மாசம் வரும் சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடி தங்கள் குடும்ப கடவுளை வழிபடுவார்கள் .
(எங்கள் ஊர் கயத்தாறில் 199 கிராமத்துக்கு பாத்தியப்பட்ட நல்ல அய்யனார் கோவிலில் மாசி சிவராத்திரி பெரும் விழாவாக கொண்டாடுவார்கள் )
பூணுல் அணிவது என்பது பெரும் மதிப்பு அதை சேனையர் செட்டிகள் அணிந்திருந்தனர் என்பது அவர்களின் மதிப்பை உணர்த்தும் .
சேனைத்தலைவர்
--------------------------------
இவர்கள் கரம்பங்குடி ,கோப்பன்பட்டி மற்றும் பல பகுதிகளில் வாழ்ந்தார்கள் .
சேனைக்குடியர்
--------------------------------
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இவர்களுடைய பட்டம் பிள்ளை என்று அழைக்கப்பட்டுள்ளது .இவர்கள் நாட்டு ஊழியர்களாகவும் ,சிறு வர்தகர்களாகவும் , வேளாண்மை செய்து கொண்டும் வாழ்ந்துள்ளனர் .
இலை வானியர்
----------------------------
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இவர்கள் வெற்றிலை வேளாண்மை பண்ணுகிறவர்களாகவும் , வெற்றிலை வணிகம் செய்பவர்களாகவும் இருந்துள்ளனர் .
இவை அனைத்தும் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் 1934 இல்
வெளியிடப்பட்ட A manual of the Pudukkottai State by k.R.வெங்கட்ராம அய்யர் புத்தகத்தில்உள்ளது .
பிராமணவர்களுக்கு நிகராக ,பூணுல் நம் ஒருவர் சேனையர் மட்டுமே அணிந்திருந்தனர் .இதில் இருந்து அவர்கள் ஆளுமையையும் , அவர்கள் வணிகத்தையும் தெரிந்து கொள்வோமாக .
அம்பி வேளாளர் சொன்ன ஆதாரம் கொண்ட புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை .புத்தக பெயர் : A general history of the Pudukkottai state by S ராதாகிருஷ்ண அய்யர் , இந்த புத்தகம் தான் காலாவதியானது என்று புதுக்கோட்டை சமஸ்தானத்தால் அறிவிக்கப்பட்டு A manual of the Pudukkottai State by k.R.வெங்கட்ராம அய்யர் வெளியிடப்பட்டுள்ளது . ஆதாரங்களை இணைத்துள்ளேன் .
காலாவதியானது -
( பொய்யான தகவல்கள் நீக்கப்படுத்தல் அல்லது புது தகவல்கள் சேர்க்கப்படுத்தல் )
இவை அனைத்தும் அவர்கள் எங்கிருந்து ஆதாரம் என்று எடுத்தார்களோ அங்கிருந்து தான் நாம் எடுத்துள்ளோம் .நாம் சொல்வது பொய் என்றால் அவர்கள் சொல்வதும் பொய் .
A general history of the Pudukkottai state தேடி கொண்டிருக்கிறோம் கிடைத்தால் தான் இலை வானியர் பிரிவு பத்தின தகவல்கள் கிடைக்கப்படும் மற்றும் அப்புத்தகம் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்டது என்றும் தெரிய வரும் .
ஏனென்றால் 1800 வருடம் கண்டறியப்பட்ட தரங்கபடி ஓலை ஆவணங்கள் இலை வானியரை பெரும் நிலசுவான்களாக குறிப்பிட்டுள்ளது .இது அரசு ஓலை காப்பதில் உள்ளது.இதுவும் பொய் அல்ல.

பணிசெய்யும் பதினெண்வகை சாதியார்.
பதினெண் மக்களை ‘அபிதான கோசம்’ என்னும் ஓர் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படிக் குறித்திருப்ப தென்னவெனில், ‘ஏவளாள்களாக சிவிகையர்; (இவர்கள் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவர்களாம்), குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், வறியார், சான்றார், சாலியர், எண்ணெய் வணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர், என பதினெட்டுப் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.
இதை கண்டுபிடிக்க உதவிய அண்ணன் அம்பி வேளாளர் அவர்களுக்கும் அவரை சேர்ந்த Fake ID வெள்ளாளர் சிறு வண்டுகளுக்கும் பல நன்றிகள் .

இன்னும் 6 புத்தகங்கள் உள்ளன அதை படித்து கொண்டிருக்கிறோம் .
1 .List of regulations in force in Pudukkottai State
2 .வெள்ளாளர் நாகரிகம்
3 .சேனைத்தலைவர் மரபு விளக்கம்
4 .அபிதான சிந்தாமணி ( அபிதான கோசம் )
5 .Inscription in the Pudukkottai State Translated Into English
6 .சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
அதில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பதிவு செய்யப்படும் .
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர் #வெள்ளாளர் #அம்பி









வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அணியும் தாலி முறை

வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அணியும் தாலி முறை - வருடம் 1800

தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் ) - பாகம் 4
——————————————————————
பலவித அணிகலன்கள் தரங்கம்பாடி ஓலை சுவடிகளில் குறிப்பிடப்படுகின்றன .
”உக்கட்டு “ என்ற பொன்னகை ஏடு 40 இல் குறிப்பிடப்படுகிறது .
“உக்கட்டு” என்பது இலைவாணியர் குலத்தவர் சிறுமியருக்கு உக்கட்டு அணிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது என்று தெரியவருகிறது , உக்கட்டு என்று புன்னகை சிறுமியர் குழந்தைப்பருவத்தில் அணியும் தாலி என தமிழ் பேரகராதி குறிப்பிடுகிறது.
உக்கட்டு
பொன்னாலானது. பவள உக்கட்டு என்றும் சொல்வர். பவளம் எனப்படும் ஒருவகை மணியுடன் கெட்டியான நூலில் கோர்த்து பின் கொக்கித்தாலி மாலைக்குக் கீழே கழுத்தில் அணிந்துகொள்வர்.
தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் )
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர்


சேனைக்குடையார் நிலச்சுவான்தார்கள்


தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் ) - பாகம் 3

சேனைகுடையார் நிலச்சுவான்தார்கள்
-----------------------------------------------------------------------
ஒப்பந்த கூலிகளை பராமரித்து பண்ணையம் செய்த நிலச்சுவான்தார்கள் செட்டியார் என்ற சாதி பட்டம் புனையும் இலைவாணியர் (சேனைகுடையார் )இனத்தவராவார் .வெற்றிலை கொடிக்கால் பயிர் இடுவோராக அறியப்படும் இவ்வினத்தவர்கள் ,சேனையங்காடியார் என்றும்
சேனைக் குடியுடையார் அல்லது
சேனைக் குடையார் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றனர்.
"பண்ணை ஆள் கடன் சீட்டு" என்ற வாசகம் கி.பி. 1857ஆம் ஆண்டு ஆவணத்தில் (ஏடு-107 ) காணப்படுகிறது சாம்பவர்(பறையர்) குலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது தமது மகனை பண்ணையார் வசம் வைத்து வைத்து கடன் வாங்கியுள்ளார். கி.பி. 1858 ஆம் ஆண்டுக்குரிய ஆவணத்தில் சிலம்பன் காலாடி மகன் பாலன் என்பவர் ,தாமும் தமது பொண்டாட்டி காத்தியும் ,பண்ணையார் சாத்தப்ப செட்டியார் பண்ணை இல் வேலை செய்து ஒத்துக்கொண்டு,தம்மை அவரிடத்து ஒற்றி வைத்து ஆறு ரூபாய் கடனாக பெற்று கொள்கின்றனர் .இக்கடனுக்கு வட்டியாக ,கடனை திருப்பி செலுத்தும் வரை பண்ணை வேலை செய்து தர வேண்டும் .
இவ்வடிமை முறை சட்ட பூர்வமாக தடை செய்யப்பட்டதால் பண்ணை ஆள் கடன் சீட்டு என்ற முறையில் பண்ணையார்கள் இவ்வடிமை முறையை தொடர்ந்தனர் .
தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் )
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர் #வேளாளர்


சேனைத்தலைவர் நிலச்சுவான்தார்கள் அல்லது பண்ணையார்கள்


சேனைத்தலைவர் நிலச்சுவான்தார்கள் அல்லது பண்ணையார்கள்

தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் ) - பாகம் 2
——————————————————————
ஒப்பந்தக் கூலி முறை
இந்தியாவில் நிலவிய அடிமை முறை என்பது ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் ஒழிக்கப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் .வெளிப்படையான அடிமை முறை தடை செய்யப்பட்டது என்பது உண்மையே .ஆனால் பண்ணையில் ஒப்பந்தம் கூலியாக பணிபுரியும் நடைமுறை 19 ஆம் நூற்றாண்டு ஓலைச்சுவடி குறிப்பிடப்படுகிறது.
பண்ணை முதலாளி வசம் குறிப்பிட்ட தொகையை கடனாகப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக வட்டியுடன் கடன் தொகையை செலுத்தும் வரை கூலிவேலை செய்து வர ஒப்பந்தம் செய்து கொள்வதே ஒப்பந்தம் கூலி முறையாகும் .தென்னாபிரிக்க நேட்டால் பகுதிக்கு indentured labour என்ற பெயரில் ஐரோப்பிய முதலாளிகள் அனுப்பப் பட்ட அடிமைகள் இந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்கள் சென்று சேர்ந்ததற்க்கு அதற்கு அடிப்படையாக இருந்தது இந்த ஒப்பந்தக் கூலி முறை ஆகும்.
தென்னாப்பிரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மகாத்மா காந்தியடிகளுக்கு தமிழ் கற்பித்த தில்லையாடி கண்ணியப்ப செட்டியார் என்பவரும் பொறையாறு பாலகுரு செட்டியார் என்பவரும் தரங்கம்பாடி சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த இலை வாணியர் (சேனைகுடையார் )இனத்தவர் ஆவர்.
சேனைகுடையார் நிலச்சுவான்தார்கள்
------------------------------------
ஒப்பந்த கூலிகளை பராமரித்து பண்ணையம் செய்த நிலச்சுவான்தார்கள் செட்டியார் என்ற சாதி பட்டம் புனையும் இலைவாணியர் (சேனைகுடையார் )இனத்தவராவார் .வெற்றிலை கொடிக்கால் பயிர் இடுவோராக அறியப்படும் இவ்வினத்தவர்கள் ,சேனையங்காடியார் என்றும்
சேனைக் குடியுடையார் அல்லது
சேனைக் குடையார் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றனர்.
"பண்ணை ஆள் கடன் சீட்டு" என்ற வாசகம் கி.பி. 1857ஆம் ஆண்டு ஆவணத்தில் (ஏடு-107 ) காணப்படுகிறது சாம்பவர்(பறையர்) குலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது தமது மகனை பண்ணையார் வசம் வைத்து வைத்து கடன் வாங்கியுள்ளார். கி.பி. 1858 ஆம் ஆண்டுக்குரிய ஆவணத்தில் சிலம்பன் காலாடி மகன் பாலன் என்பவர் ,தாமும் தமது பொண்டாட்டி காத்தியும் ,பண்ணையார் சாத்தப்ப செட்டியார் பண்ணை இல் வேலை செய்து ஒத்துக்கொண்டு,தம்மை அவரிடத்து ஒற்றி வைத்து ஆறு ரூபாய் கடனாக பெற்று கொள்கின்றனர் .இக்கடனுக்கு வட்டியாக ,கடனை திருப்பி செலுத்தும் வரை பண்ணை வேலை செய்து தர வேண்டும் .
இவ்வடிமை முறை சட்ட பூர்வமாக தடை செய்யப்பட்டதால் பண்ணை ஆள் கடன் சீட்டு என்ற முறையில் பண்ணையார்கள் இவ்வடிமை முறையை தொடர்ந்தனர் .
தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் )
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர்




திரு . வ. உ. சிதம்பரம்பிள்ளை ஐயா

திரு . வ. உ. சிதம்பரம்பிள்ளை ஐயா  

----------------------------------------------------------
சேனைத்தலைவர் இன மக்களே திரு . வ. உ. சிதம்பரம்பிள்ளை நம் இனத்தவர் அல்ல அவர் சைவ வெள்ளாளர் மரபை சார்ந்தவர் .அவர் நமது தேசிய தலைவர் .
நம் கொண்டாட வேண்டியவர் வீரபாகு சேனைத்தலைவர் மட்டுமே..மதுரை சுற்றி உள்ள பகுதியில் நம் இனம் பிள்ளை என்று அழைப்பதால் நாம் அனைவரும் பிள்ளைமார் என்று அர்த்தம் இல்லை.
மூப்பனார் ,செட்டியார் ,பிள்ளை ,முதலியார் என்பது பட்டம் சாதி ஆகாது .
நாகை,தஞ்சாவூர் பகுதிகளில் நம் இனம் செட்டியார் என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகிறது .அவர்கள் நிலம் கொண்ட மண்டலகாரர்கள்.
அக்காலத்தில் வேளாளர் ,சேனைத்தலைவர் ,செங்குந்தர் அனைவரும் ஒரே வகுப்பில் இருந்துள்ளனர்.
கால போக்கில் செங்குந்தர்கள் செய்த செயல்களால் நம் இனம் மறைக்கப்பட்டது .
நமது தேசிய தலைவராக திரு . வ. உ. சிதம்பரம்பிள்ளை பேரவையில் இருப்பது நலமே.
ஆனால் சாதி அடிப்படையில் அவர் நம் இனம் இல்லை ஐயா .
சைவ வேளாளர் இனத்தை சார்ந்தவர்
அடுத்தவர்கள் புகழை நாம் சொந்தம் கொண்டாடுவது தவறு.
சேனைத்தலைவர் க்கு எப்பவும் துணையாக இருப்பவர் வீரபாகு சேனைத்தலைவர் மட்டுமே .
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர் #வேளாளர்


வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் பூர்வ சரித்திரம் - பாகம் 3

வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் பூர்வ சரித்திரம் - பாகம் 3
————————————————————
பாகம் 2 இல் முடிவில் சேனைகுடையார் அல்லது சேனைத்தலைவர் வேளாளர் என்று கூறினோம்.
வேளாளர் என்றும் சொல் வேளாண்மை என்பதிலிருந்து வந்தது. இதன் சாதாரண பொருள் பயிர் செய்தல் தானஞ் செய்வோன் எனப்படும். இன்னும் வேளாண்மை என்பது ஈன்றி, ஈகை ,வேளாண்தொழில் இன்னும் பல பொருள் குறித்த ஒரு சொல் . அஃது வேளாண்தொழில் உடைமையால் அன்றி, ஈகை முதலிய நற்செய்கை உடமைக்கும் உரியதோர் குடி பண்பாயிற்று, . இன்னும் வேளாண்தொழில் ,வேள்=-நன்னிலம் ,ஆள்=உரிமைத்தலைமை, தொழில்=முயன்று முடித்தல். இதனால் நன்னிலம் திருத்தி சென்னெறிப்பொங்க பைங்கூழ் விளக்கு முரிமைத்தலைமை தொழில் எனப்படும் . இன்னும் வேள்=விரும்பப்படுகை ,,ஆண்தொழில் = ஆண்மை தொழில் ,இதனால் அரசரால் விரும்பப்படும் மந்திரிதலைமை,சேனைத் தலைமை முதலிய ஆண்மை தொழில் உடையோர் என்பதும் அமையும் .
ஆசிரியர் நச்சினார்க்கினியர் ,தொல்காப்பியம் ,பொருளதிகாரம் ,அகத்திணையியல் 30-ஆம் சூத்திர விஷேட உரையில் அடியில் வருமாறு கூறுகின்றனர் "வேளாளர் இருவகையர் ; உழுதுண்போரும் , உளுவித்துண்போரும் என.
இவருள் உழுவித்துண்போர் , மண்டிலமாக்களும், தண்டத்தலைவரும சோழநாட்டுப் பிடவூரும் ,அழுந்தூரும், நாங்கூரும் ,ஆலஞ்சேரியும் ,பெருஞ் சிக்கலும், வல்லமும்,கிழாரும் முதலிய பதியிற்தோன்றி வேள் எனவும் ,அரசன் எனவும் உரிமை எய்தினோரும் . பாண்டியநாட்டு காவிதி பட்டம் எய்தினோரும், குறுமுடி குடிப்பிறந்தோர்
முதலியோருமாய், முடியுடை வேந்தற்கு மகட்
கொடை க்கு உரிய வேளாளர் .
அக்காலத்தில் வேளாளர் என்பது ஒரு வகுப்பு அதற்குள் எல்லா வேளாண்மை செய்த இனத்தவர்களும் அடக்கம் ,
நம் இனம் பெருமை மிகு சேனைத்தலைவர் இனம் மட்டுமே .
சேனைத்தலைவர் என்று சொல்வதில் தான் பெருமை அடைகிறோம் .
தொடரும் ....
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர்



வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் பூர்வ சரித்திரம் பாகம் 1

வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் பூர்வ சரித்திரம்.
தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் ) - பாகம் 1
—————————————————————————————————
வெளிப்பாளையம் என்பது தரங்கம்பாடி கோட்டை மதில் சுவருக்கு வெளியே உப்பனாற்று அகழிக்கு வெளியே அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியாகும் .இங்கு சேனைக்குடையர் (இலை வாணியர்) பிரிவினர் அதிகமாக வாழ்கின்றனர். இங்கு ஸ்ரீ கற்பக கணபதி கோயில் அமைந்துள்ளது இக்கணபதி கற்பக விநாயகர் என்ற பெயரில் தரங்கை வேலாயுத சுவாமி பிள்ளைத்தமிழ் என்ற நூலின் காப்புச் இதில் போற்றப்படுகிறார். தரங்கம்பாடி மாசிலா நாதர் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கி பி பதினாறாம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று பதினொன்று விஷயத்தார் எனப்பட்ட துறைமுக வணிகர் குழுவினரும் கரையார் எனப்படும் மீகாமன் குழுவினரும் "வீரகற்பகன் சந்தி" என்ற பேரில் தினசரி பூஜை நடத்த ஏற்பாடு செய்த விவரத்தை குறிப்பிடுகிறது. எனவே அக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் வீரகற்பகன் சந்தி இவ்விநாயகருடன் தொடர்புடையது என்று தெரிகிறது இது பழமையான மரபுடைய கற்பக விநாயகருக்கு வழங்கப்பட்ட தர்மசாதனப் பட்டயமாக அவருடைய ஓர் ஓலை ஆவணம் ( ஏடு - 48 ) அமைத்துள்ளது
தொடரும் ....
தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் )
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர்


வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் பூர்வ சரித்திரம் - பாகம் 2


வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் பூர்வ சரித்திரம் - பாகம் 2
————————————————————
இந்நாட்டில் ஜாதி வித்தியாசம் என்பது தொல்காப்பியர் காலத்திலும் அதற்குப் பின்னரும் அனேக நூற்றாண்டுகளாக தமிழரில் இருந்ததில்லை. இவ்விதமாக ஜாதி வித்தியாசம் என்பதே தெரியாமல் இருந்த தமிழர்கள் முதல் முதல் ஜாதி வித்தியாசம் ஏற்படுத்த முயன்றது தொல்காப்பியரே ஆரிய பார்ப்பனர் இவரால் ஜாதி வித்தியாசம் ஏற்படுத்த முடியாவிட்டாலும் என் வகுப்பில் இருந்த தமிழை நான்கு வகையாக பிரித்தனர். அதாவது 1. அந்தணர் 2.அரசர் 3.வைசியர் 4.வேளாளர் தொல்காப்பியருக்கு அரசர் என்பது தெரிந்திருந்தும் அவர்களை தன் நூலில் பல இடங்களில் இருந்தும் அவர்களை முதல் வகுப்பினராக வைக்காமல் ஆரிய பிராமணரை முதல் வகுப்பில் வைத்தார். இரண்டாவது வகுப்பில் அரசர்களை வைத்தார் யுத்த வீரர்களை தள்ளிவிட்டார், மூன்றாவது வர்த்தகம் செய்பவர்கள் வைத்தார் நான்காவதாக உழவர் என்கிற வேளாளரை வைத்தார். இவைகள் வகுப்புகளை ஒழிய ஜாதிகள் அல்ல என்பதை கவனிக்கவேண்டும் தொல்காப்பியத்தை இந்நூல் வகுப்புகள் எட்டுத்தொகை ,பத்துப்பாட்டு ,பதினெண் கீழ்க்கணக்கு, என்கிற நூல்களிலும் ,சேனாவரையர், இளம்பூரணர், நச்சினார்க்கினியர்,முதலியவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த நான்கு வகைகளில் சேனைத்தலைவர் மரபு வேளாளர் வகுப்பைச் சேர்ந்தது .
வேளாளர் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்ல.வேளாளர் என்னும் சொல் வேளாண்மை என்பதிலிருந்து வந்தது .இதன் சாதாரண பொருள் பயிர் செய்தல், தானம் செய்வோம் எனப்படும் .பதினோராம் நூற்றாண்டில் வேளாளர் என்பது ஈதல் , உழவு , வாணிகம் மட்டும் கூறியிருக்கிறது.
தொடரும் ....
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர்


வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் பூர்வ சரித்திரம் - பாகம் 1

வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் பூர்வ சரித்திரம் - பாகம் 1
---------------------------------------------------------------------------------
நம் சேனைத்தலைவர் அல்லது சேனைகுடையார் சரித்திரத்தை , 1844 வருடம் நம்மினத்தவராகிய சென்னையில் இருந்த வித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் சேனைத்தலைவர் மரபு விளக்கம் எனும் நூலாக எழுதி வைத்தனர் .அதில் அவர் ஸ்கந்த புராணம் ஒன்றையே ஆதாரமாக கொண்டு சரித்திரத்தை முடிவு செய்தனர் , ஆயினும் இந்நூலாசிரியராகிய திரு.கோபால செட்டியார் ,ஸ்கந்த புராணம் உடன் ,பெரிய புராணம் ,தொல்காப்பியம் ,போன்ற பூர்விக நூல்களில் இருந்தும் ,இதர நூல்களில் இருந்தும் இன்னும் அநேக புதிய ஆராய்ச்சிகளால் கண்டுபிடித்த ஆதரவுகளை கொண்டும் ,இந்நூலை வரைந்துள்ளனர் ,இந்நூலில் நம் இனத்தவரின் உற்பத்தி ,பெருமை முதிலியன நன்கு விளங்குகிறது ,
ஆகையால் பெருமை மிகு சேனைத்தலைவர் குல வம்சத்தை
சேர்ந்தவர்கள் இதை வாசித்து,நம் குல சிறப்பை அறிந்து நம் இனத்தவர்களுக்கு பகிரவும் வேண்டும் .
தொடரும் ....
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர்



சேனைத்தலைவர் - தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் 1800 ஆம் வருடத்திலிருந்து


1920 - 80 ஆண்டுகளில் தரங்கம்படி டேனிஷ்கோட்டை அகழ்வைப்பகத்துக்க்காக சாத்தங்குடி,காட்டுசேரி ஆகிய ஊர்களில் கிராம முன்சீப் அல்லது பட்டாமணியம் போன்ற செல்வாக்கு மிக்க பதவி வகித்த குடும்பங்களை சேர்ந்த திரு.
கோவிந்தசாமி செட்டியார் ,திரு .இராஜகோபால் செட்டியார் ஆகியோரிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஓலை ஆவணங்களும் ,110ஓலை ஆவணங்கள் இந்நூலில் வெளி இடப்படுகின்றன .
நமது சேனைத்தலைவர் வாணிபர்கள் அக்காலத்தில் செட்டியார் என்றே அழைக்கப்பட்டனர்
சேனைத்தலைவர் சரித்திரம் வருகிறது
தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் - 1800 ஆம் வருடத்திலிருந்து
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர்


சேனைத்தலைவர் சரித்திரம் வருகிறது

வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் பூர்வ சரித்திரம்.
சேனைத்தலைவர் சரித்திரம் வருகிறது
தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார்



சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்

சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் ஆனது உலகஅளவில் உள்ள சேனைத்தலைவர் மக்களை ஒன்றினைப்பதற்க்கான குழுமம் ஆகும் .சேனைத்தலைவர் சரித்திர வரலாறுகளை பகிர்ந்து கொள்வதற்க்காக இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.தாங்கள் நம் இனம் சார்ந்த கருத்துக்களை இங்கு பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பக்கத்தில் 1800 வருடம் எழுதப்பட்ட தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் மூலமாகவும் , 1924 வருடம் எழுதப்பட்ட சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம் மூலமாகவும் பகிரப்பட்டுள்ளது .
எதுவும் தற்காலத்தில் புனையப்பட்ட சரித்திரம் அல்ல ,
பல நூற்றாண்டு களாக வாழ்ந்த சரித்திரம் ,மறைக்கப்பட்ட சரித்திரம் .
அடைமொழிகள் : முதலியார், செட்டியார், மூப்பனார் மற்றும் பிள்ளை
சேனைத்தலைவர் சரித்திர பெயர்கள்
-----------------------------------------------------------
சேனையங்காடியார் என்றும்
சேனைக் குடியுடையார் அல்லது
சேனைக் குடையார்.
தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள்
தொடர்புக்கு
கயத்தாறு நகர சேனைத்தலைவர் வீரபாகு இளைஞர் பேரவை

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...