வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் பூர்வ சரித்திரம்.
தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் ) - பாகம் 1
—————————————————————————————————
வெளிப்பாளையம் என்பது தரங்கம்பாடி கோட்டை மதில் சுவருக்கு வெளியே உப்பனாற்று அகழிக்கு வெளியே அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியாகும் .இங்கு சேனைக்குடையர் (இலை வாணியர்) பிரிவினர் அதிகமாக வாழ்கின்றனர். இங்கு ஸ்ரீ கற்பக கணபதி கோயில் அமைந்துள்ளது இக்கணபதி கற்பக விநாயகர் என்ற பெயரில் தரங்கை வேலாயுத சுவாமி பிள்ளைத்தமிழ் என்ற நூலின் காப்புச் இதில் போற்றப்படுகிறார். தரங்கம்பாடி மாசிலா நாதர் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கி பி பதினாறாம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று பதினொன்று விஷயத்தார் எனப்பட்ட துறைமுக வணிகர் குழுவினரும் கரையார் எனப்படும் மீகாமன் குழுவினரும் "வீரகற்பகன் சந்தி" என்ற பேரில் தினசரி பூஜை நடத்த ஏற்பாடு செய்த விவரத்தை குறிப்பிடுகிறது. எனவே அக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் வீரகற்பகன் சந்தி இவ்விநாயகருடன் தொடர்புடையது என்று தெரிகிறது இது பழமையான மரபுடைய கற்பக விநாயகருக்கு வழங்கப்பட்ட தர்மசாதனப் பட்டயமாக அவருடைய ஓர் ஓலை ஆவணம் ( ஏடு - 48 ) அமைத்துள்ளது
தொடரும் ....

No comments:
Post a Comment