Wednesday, 30 October 2019

சேனைத்தலைவர் இன் பெருமை மிகு வரலாறு - 1855 to 1935

Mr.Edgar Thurston என்பவரால் எழுதப்பட்ட தென்னிந்திய சாதிகள் வரலாறு புத்தகத்தில் சேனைத்தலைவர் இன் பெருமை மிகு வரலாறு - 1855 to 1935 —————————————————————— நமது சரித்திர பெயர் சேனைக்குடையன் ,இவர்கள் வெற்றிலை வேளாண்மை செய்தவர்களும் மற்றும் வெற்றிலை வர்த்தகம் செய்தவர்களும் ஆவார்கள் ,இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக எண்ணிக்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .இவர்களின் முதன்மையான பெயர் இலை வாணியன் , இவர்களே சேனைகுடையான் ( Owner of army ) , சேனைத்தலைவன் ( Chief of army ) என்று அழைக்கப்படுகிறார்கள் .வெற்றிலை கொடிக்கால் வேளாண்மை செய்யும் இவ்வின மக்கள் தங்களை கொடிக்கால் பிள்ளைமார் அல்லது பிள்ளைமார் என்று அழைத்துக்கொள்கிறாரகள் .இவர்களின் பட்டம் பிள்ளை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது .இவர்களின் மற்ற உட்பிரிவுகள் மூப்பனார் மற்றும் செட்டியார் என்றும் அழைக்கப்படுகிறார்கள் . 1901 வருடம் மெட்ராஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவர்கள் வெள்ளாளர்களுக்கு இணையாகவும் ,பிராமண அந்தணர்களுக்கு இணையாகவும் வாழ்கின்றனர் என்று சொல்கிறது . 1891 வருடம் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் இவர்களை சிறு வணிகர்கள் மற்றும் எண்ணெய் வணிகர்களுடன் தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது .ஆனால் இவர்கள் சமூக நிலையில் இவர்களை விட உயர்ந்தவர்கள் ,நாட்டுக்கோட்டை செட்டியார்களை விட உயர்ந்த மதிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சேனைக்குடையர்களின் வீட்டிற்குள் பறையர்கள் ,வண்ணார்கள் நுழைவதில்லை , அவர்களின் வீட்டு சமையலை வாங்குவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது ,இவர்கள் மட்டும் அல்ல கம்மாளான்,செட்டியார் இன மக்களிடமும் பறையர்கள் ,வண்ணார்கள் இதே முறையை பின்பற்றினர் .ஏனெனினில் சேனைகுடையான் மக்கள் இடக்கை பிரிவை சேர்ந்தவர்கள் ,அதே சமயம் பறையர்கள் ,வண்ணார்கள் வலக்கை பிரிவை சேர்ந்தவர்கள் .இவர்கள் இடக்கை பிரிவை சேர்ந்த எவர் வீட்டுக்குள்ளும் செல்வதில்லை என்பதை Edgar Thurston குறிப்பிட்டுள்ளார் . இதில் இருந்து இலை வானியர் என்ற சேனைகுடையார் அல்லது சேனைத்தலைவர் எவருக்கும் அடிமையாக வாழ்ந்தது இல்லை என்று நிரூபணம் ஆகிறது . அதே நேரத்தில் வெள்ளாளர் மற்றும் பிராமண அந்தணர்களுக்கு இணையாகவும் வாழ்ந்துள்ளனர் . இதில் இருந்து வேளாளர்களும் இனமும் ,சேனைத்தலைவர் இனமும் வேறு வேறு என்று Edgar Thurston குறிப்பில் இருந்து அறிய முடிகிறது . இத்தகவல்கள் அனைத்தும் Castes and tribes of southern India - Volume 6 புத்தகத்தில் mr .Thurston ஆல் எழுதப்பட்டுள்ளது . ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன் கூடுதலாக எந்த வார்த்தைகளும் சேர்க்கப்படவில்லை .

No comments:

Post a Comment

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...