Tuesday, 29 October 2019

வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் பூர்வ சரித்திரம் - பாகம் 3

வேளாண்மாந்தர் சேனைத்தலைவர் அல்லது சேனைக்குடையார் பூர்வ சரித்திரம் - பாகம் 3
————————————————————
பாகம் 2 இல் முடிவில் சேனைகுடையார் அல்லது சேனைத்தலைவர் வேளாளர் என்று கூறினோம்.
வேளாளர் என்றும் சொல் வேளாண்மை என்பதிலிருந்து வந்தது. இதன் சாதாரண பொருள் பயிர் செய்தல் தானஞ் செய்வோன் எனப்படும். இன்னும் வேளாண்மை என்பது ஈன்றி, ஈகை ,வேளாண்தொழில் இன்னும் பல பொருள் குறித்த ஒரு சொல் . அஃது வேளாண்தொழில் உடைமையால் அன்றி, ஈகை முதலிய நற்செய்கை உடமைக்கும் உரியதோர் குடி பண்பாயிற்று, . இன்னும் வேளாண்தொழில் ,வேள்=-நன்னிலம் ,ஆள்=உரிமைத்தலைமை, தொழில்=முயன்று முடித்தல். இதனால் நன்னிலம் திருத்தி சென்னெறிப்பொங்க பைங்கூழ் விளக்கு முரிமைத்தலைமை தொழில் எனப்படும் . இன்னும் வேள்=விரும்பப்படுகை ,,ஆண்தொழில் = ஆண்மை தொழில் ,இதனால் அரசரால் விரும்பப்படும் மந்திரிதலைமை,சேனைத் தலைமை முதலிய ஆண்மை தொழில் உடையோர் என்பதும் அமையும் .
ஆசிரியர் நச்சினார்க்கினியர் ,தொல்காப்பியம் ,பொருளதிகாரம் ,அகத்திணையியல் 30-ஆம் சூத்திர விஷேட உரையில் அடியில் வருமாறு கூறுகின்றனர் "வேளாளர் இருவகையர் ; உழுதுண்போரும் , உளுவித்துண்போரும் என.
இவருள் உழுவித்துண்போர் , மண்டிலமாக்களும், தண்டத்தலைவரும சோழநாட்டுப் பிடவூரும் ,அழுந்தூரும், நாங்கூரும் ,ஆலஞ்சேரியும் ,பெருஞ் சிக்கலும், வல்லமும்,கிழாரும் முதலிய பதியிற்தோன்றி வேள் எனவும் ,அரசன் எனவும் உரிமை எய்தினோரும் . பாண்டியநாட்டு காவிதி பட்டம் எய்தினோரும், குறுமுடி குடிப்பிறந்தோர்
முதலியோருமாய், முடியுடை வேந்தற்கு மகட்
கொடை க்கு உரிய வேளாளர் .
அக்காலத்தில் வேளாளர் என்பது ஒரு வகுப்பு அதற்குள் எல்லா வேளாண்மை செய்த இனத்தவர்களும் அடக்கம் ,
நம் இனம் பெருமை மிகு சேனைத்தலைவர் இனம் மட்டுமே .
சேனைத்தலைவர் என்று சொல்வதில் தான் பெருமை அடைகிறோம் .
தொடரும் ....
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர்



1 comment:

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...