Tuesday, 29 October 2019

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சேனைத்தலைவர்

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சேனைத்தலைவர்

புதுக்கோட்டை சமஸ்தானம் - 1934 வருடம் - பாகம் 1
——————————————————————
சேனைத்தலைவர் சாதி அடிமை சாதி னு அண்ணன் அம்பி வேளாளர் அவர்கள் குடுத்த ஆதாரம் புதுக்கோட்டை சமஸ்தானம் த்தை தான் குறிப்பதால் ,அதை தேடி ஆவணங்களை தேடி செல்லும் போது சேனைத்தலைவர் ,சேனையர் ,சேனை செட்டிகள்,சேனைக்குடியர் ,இலை வானியர் பற்றிய தகவல்கள் நம்மளுக்கு நான் எதிர்பாக்காத அளவுக்கு கிடைத்திருக்கிறது .இதற்காக அண்ணன் அம்பி வேளாளர் அவர்களுக்கும் அவரை சேர்ந்த Fake ID வெள்ளாளர் சிறு வண்டுகளுக்கும் பல நன்றிகள் .
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நமது இனப்பெயர்கள் சேனைத்தலைவர் ,சேனையர் ,சேனை செட்டிகள்,சேனைக்குடியர் ,இலை வானியர் மற்றும் பிள்ளை என குறிப்பிடப்பட்டுள்ளது .
சேனையர் (செட்டிகள்)
----------------------------------------
புதுக்கோட்டை சமஸ்தானம் காசுக்கார செட்டிகளுக்கும் ,சேனையர் செட்டிகளுக்கும் பூணுல் (sacred thread ) அணிய அனுமதி வழங்கியுள்ளது ,அவர்களும் அணிதிருந்தனர் மற்ற செட்டிகளுக்கு பூணுல் அணிய அனுமதி இல்லை .அதே போல்
தங்க காதணிகள் அணிய அனுமதி வழங்கியுள்ளது .
சேனையர் செட்டிகள் அதிகமாக வாழ்ந்த இடம் கொடும்பாளூர் வட்டத்தில் உள்ள சேனையப்பட்டி .இவர்களின் பூர்விகம் திருச்சிராப்பள்ளி .இவர்கள் அசைவம் உண்பவர்கள் ,இவர்கள் மாசி மாசம் வரும் சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடி தங்கள் குடும்ப கடவுளை வழிபடுவார்கள் .
(எங்கள் ஊர் கயத்தாறில் 199 கிராமத்துக்கு பாத்தியப்பட்ட நல்ல அய்யனார் கோவிலில் மாசி சிவராத்திரி பெரும் விழாவாக கொண்டாடுவார்கள் )
பூணுல் அணிவது என்பது பெரும் மதிப்பு அதை சேனையர் செட்டிகள் அணிந்திருந்தனர் என்பது அவர்களின் மதிப்பை உணர்த்தும் .
சேனைத்தலைவர்
--------------------------------
இவர்கள் கரம்பங்குடி ,கோப்பன்பட்டி மற்றும் பல பகுதிகளில் வாழ்ந்தார்கள் .
சேனைக்குடியர்
--------------------------------
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இவர்களுடைய பட்டம் பிள்ளை என்று அழைக்கப்பட்டுள்ளது .இவர்கள் நாட்டு ஊழியர்களாகவும் ,சிறு வர்தகர்களாகவும் , வேளாண்மை செய்து கொண்டும் வாழ்ந்துள்ளனர் .
இலை வானியர்
----------------------------
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இவர்கள் வெற்றிலை வேளாண்மை பண்ணுகிறவர்களாகவும் , வெற்றிலை வணிகம் செய்பவர்களாகவும் இருந்துள்ளனர் .
இவை அனைத்தும் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் 1934 இல்
வெளியிடப்பட்ட A manual of the Pudukkottai State by k.R.வெங்கட்ராம அய்யர் புத்தகத்தில்உள்ளது .
பிராமணவர்களுக்கு நிகராக ,பூணுல் நம் ஒருவர் சேனையர் மட்டுமே அணிந்திருந்தனர் .இதில் இருந்து அவர்கள் ஆளுமையையும் , அவர்கள் வணிகத்தையும் தெரிந்து கொள்வோமாக .
அம்பி வேளாளர் சொன்ன ஆதாரம் கொண்ட புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை .புத்தக பெயர் : A general history of the Pudukkottai state by S ராதாகிருஷ்ண அய்யர் , இந்த புத்தகம் தான் காலாவதியானது என்று புதுக்கோட்டை சமஸ்தானத்தால் அறிவிக்கப்பட்டு A manual of the Pudukkottai State by k.R.வெங்கட்ராம அய்யர் வெளியிடப்பட்டுள்ளது . ஆதாரங்களை இணைத்துள்ளேன் .
காலாவதியானது -
( பொய்யான தகவல்கள் நீக்கப்படுத்தல் அல்லது புது தகவல்கள் சேர்க்கப்படுத்தல் )
இவை அனைத்தும் அவர்கள் எங்கிருந்து ஆதாரம் என்று எடுத்தார்களோ அங்கிருந்து தான் நாம் எடுத்துள்ளோம் .நாம் சொல்வது பொய் என்றால் அவர்கள் சொல்வதும் பொய் .
A general history of the Pudukkottai state தேடி கொண்டிருக்கிறோம் கிடைத்தால் தான் இலை வானியர் பிரிவு பத்தின தகவல்கள் கிடைக்கப்படும் மற்றும் அப்புத்தகம் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்டது என்றும் தெரிய வரும் .
ஏனென்றால் 1800 வருடம் கண்டறியப்பட்ட தரங்கபடி ஓலை ஆவணங்கள் இலை வானியரை பெரும் நிலசுவான்களாக குறிப்பிட்டுள்ளது .இது அரசு ஓலை காப்பதில் உள்ளது.இதுவும் பொய் அல்ல.

பணிசெய்யும் பதினெண்வகை சாதியார்.
பதினெண் மக்களை ‘அபிதான கோசம்’ என்னும் ஓர் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படிக் குறித்திருப்ப தென்னவெனில், ‘ஏவளாள்களாக சிவிகையர்; (இவர்கள் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவர்களாம்), குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், வறியார், சான்றார், சாலியர், எண்ணெய் வணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர், என பதினெட்டுப் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.
இதை கண்டுபிடிக்க உதவிய அண்ணன் அம்பி வேளாளர் அவர்களுக்கும் அவரை சேர்ந்த Fake ID வெள்ளாளர் சிறு வண்டுகளுக்கும் பல நன்றிகள் .

இன்னும் 6 புத்தகங்கள் உள்ளன அதை படித்து கொண்டிருக்கிறோம் .
1 .List of regulations in force in Pudukkottai State
2 .வெள்ளாளர் நாகரிகம்
3 .சேனைத்தலைவர் மரபு விளக்கம்
4 .அபிதான சிந்தாமணி ( அபிதான கோசம் )
5 .Inscription in the Pudukkottai State Translated Into English
6 .சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
அதில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பதிவு செய்யப்படும் .
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர் #வெள்ளாளர் #அம்பி









No comments:

Post a Comment

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...