Tuesday, 29 October 2019

சேனைத்தலைவர் நிலச்சுவான்தார்கள் அல்லது பண்ணையார்கள்


சேனைத்தலைவர் நிலச்சுவான்தார்கள் அல்லது பண்ணையார்கள்

தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் ) - பாகம் 2
——————————————————————
ஒப்பந்தக் கூலி முறை
இந்தியாவில் நிலவிய அடிமை முறை என்பது ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் ஒழிக்கப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் .வெளிப்படையான அடிமை முறை தடை செய்யப்பட்டது என்பது உண்மையே .ஆனால் பண்ணையில் ஒப்பந்தம் கூலியாக பணிபுரியும் நடைமுறை 19 ஆம் நூற்றாண்டு ஓலைச்சுவடி குறிப்பிடப்படுகிறது.
பண்ணை முதலாளி வசம் குறிப்பிட்ட தொகையை கடனாகப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக வட்டியுடன் கடன் தொகையை செலுத்தும் வரை கூலிவேலை செய்து வர ஒப்பந்தம் செய்து கொள்வதே ஒப்பந்தம் கூலி முறையாகும் .தென்னாபிரிக்க நேட்டால் பகுதிக்கு indentured labour என்ற பெயரில் ஐரோப்பிய முதலாளிகள் அனுப்பப் பட்ட அடிமைகள் இந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்கள் சென்று சேர்ந்ததற்க்கு அதற்கு அடிப்படையாக இருந்தது இந்த ஒப்பந்தக் கூலி முறை ஆகும்.
தென்னாப்பிரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மகாத்மா காந்தியடிகளுக்கு தமிழ் கற்பித்த தில்லையாடி கண்ணியப்ப செட்டியார் என்பவரும் பொறையாறு பாலகுரு செட்டியார் என்பவரும் தரங்கம்பாடி சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த இலை வாணியர் (சேனைகுடையார் )இனத்தவர் ஆவர்.
சேனைகுடையார் நிலச்சுவான்தார்கள்
------------------------------------
ஒப்பந்த கூலிகளை பராமரித்து பண்ணையம் செய்த நிலச்சுவான்தார்கள் செட்டியார் என்ற சாதி பட்டம் புனையும் இலைவாணியர் (சேனைகுடையார் )இனத்தவராவார் .வெற்றிலை கொடிக்கால் பயிர் இடுவோராக அறியப்படும் இவ்வினத்தவர்கள் ,சேனையங்காடியார் என்றும்
சேனைக் குடியுடையார் அல்லது
சேனைக் குடையார் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றனர்.
"பண்ணை ஆள் கடன் சீட்டு" என்ற வாசகம் கி.பி. 1857ஆம் ஆண்டு ஆவணத்தில் (ஏடு-107 ) காணப்படுகிறது சாம்பவர்(பறையர்) குலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது தமது மகனை பண்ணையார் வசம் வைத்து வைத்து கடன் வாங்கியுள்ளார். கி.பி. 1858 ஆம் ஆண்டுக்குரிய ஆவணத்தில் சிலம்பன் காலாடி மகன் பாலன் என்பவர் ,தாமும் தமது பொண்டாட்டி காத்தியும் ,பண்ணையார் சாத்தப்ப செட்டியார் பண்ணை இல் வேலை செய்து ஒத்துக்கொண்டு,தம்மை அவரிடத்து ஒற்றி வைத்து ஆறு ரூபாய் கடனாக பெற்று கொள்கின்றனர் .இக்கடனுக்கு வட்டியாக ,கடனை திருப்பி செலுத்தும் வரை பண்ணை வேலை செய்து தர வேண்டும் .
இவ்வடிமை முறை சட்ட பூர்வமாக தடை செய்யப்பட்டதால் பண்ணை ஆள் கடன் சீட்டு என்ற முறையில் பண்ணையார்கள் இவ்வடிமை முறையை தொடர்ந்தனர் .
தரங்கம்பாடி ஓலை ஆவணங்கள் (1800 வருடம் )
சேனைத்தலைவர் பூர்வ சரித்திரம்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனைக்குடியர்




No comments:

Post a Comment

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள்

ஸ்ரீ வீரபாகு சேனைத்தலைவர் கோமரத்தார்கள் வீரத்தளபதி ஸ்ரீவீரபாகு சேனைத்தலைவர் ஐ குலதெய்வமாக கும்பிடும் வீரபாகு சேனைத்தலைவர் வம்சா வழி சேனைத்தல...